Saturday, November 21, 2015

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 10

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 10

Englightened Master



இத்தனைக்கும் குரோஷியர்கள் முகம்மது அவர்களை மெக்காவில் இருந்து விரட்டிய போதும், அவரை கொல்வதற்கு முயன்ற போதும் அவருக்கு அடைக்கலம் தந்து இன்முகத்துடன் வரவேற்றவர்கள் மெதினாவில் உள்ள யூத மற்றும் கிறிஸ்துவ பழங்குடியினரே. ஆனால் தன் படை அரேபியா முழுது பலம் பெற்று, தன்னுடைய இஸ்லாம் எனும் மார்கத்தை அரேபியாவில் நிலை நிறுத்தியதும், மாற்று மதத்தவர்களின் மத நம்பிக்கைகளை அவர் அனுமதிக்கவில்லை. பொது ஆண்டு 632ல் அரேபியா முழுதும் இஸ்லாமிய மயமாக்கப்பட்டதும், முகம்மது "பைஜான்டைன்" மற்றும் பாரசீக நாடுகளுக்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்படி கடிதம் எழுதுகிறார். இல்லையென்றால் ஜிகாத் ஒன்றுதான் வழி என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்.

சில மாதங்களிலேயே முகம்மது அவர்களின் மரணம் நேர்ந்துவிட, இஸ்லாமிய உம்மாவுக்கு (கூட்டனி அல்லது ஒன்றியம்) அபு பக்கர் தான் முதல் கலிஃபாவாக (தலைவர்) தேர்ந்தெடுக்க படுகிறார். அபுபக்கர் முகம்மதின் மாமனாரும், முகம்மது அவர்களின் இளம் வயது மனைவியுமான ஆயிஷாவின் தந்தை. இரண்டு வருடங்களே இவர் கலிஃபாக இருந்து நோய்வாய்பட்டு இறக்கிறார். அவருக்கு பின் கலிஃபாக பதவியேற்கிறார் 'உமர்'. இவர் பாரசீகம் வரை முஸ்லீம் தேசத்தை விரிவடைய செய்கிறார். இவரது ஆட்சியில் தான் கிட்டத்தட்ட 4050 நகரங்கள் கைப்பற்றப்பட்டன. முஸ்லீம் சாம்ராஜ்யத்தை பல வித மாகானங்களாக பிரித்து பல நிர்வாக அமைப்புகளை இவர் ஏற்படுத்துகிறார்.

முஸ்லீம் படை செய்த அராஜகத்தாலோ என்னவோ, மிகப்பெரும் பஞ்சம் அரேபியாவை தாக்குகிறது. பசியாலும் பட்டினியாலும் அரேபியாவில் பலர் உயிர் இழக்கிறார்கள். பலர் உணவில்லாமல் இடம் பெயர்கிறார்கள். உமர் சிரியாவில் இருந்தும் மற்ற பிரதேசங்களிலும் இருந்த உணவு பொருட்களை வரவழைக்கிறார். மெதினாவில் தினம் மாலை உணவு சாலைகள் நடத்தி பல ஆயிரம் மக்களை காப்பாற்றுகிறார். அரேபிய பஞ்சம் ஒருவழியாய் முடிவுக்கு வந்த நிலையில் சிரியாவிலும் பாலஸ்தீனத்திலும் கடுமையாக "ப்ளேக்" நோய் பரவுகிறது. சிரியா மாகான முஸ்லீம் படை தலைவர் அபு உபைதா (Abu Ubaidah) மற்றும் பல முக்கிய முஸ்லீம் படை தலைவர்கள் என 25000 பேருக்கு மேற்பட்ட‌ முஸ்லீம்கள் நோயால் இறக்கிறார்கள்.

இதன் பின் உமர் ஒரு நாள் பிருஸ் (Piruz Nahavandi) என்கிற ஒரு பாரசீக அடிமையால் மெதினாவில் கடுமையாக தாக்கப்படுகிறார். பாரசீகத்தை முஸ்லீம்கள் கைப்பற்றியதற்கு பழிக்கு பழி வாங்க பிருஸ் என்கிற அடிமையாக்கப்பட்ட அந்த வீரன் உமரை ஆறு முறை வயிற்றில் குத்தி காயப்படுத்துகிறான். தடுக்க வரும் பலரையும் வீழ்த்தி தானும் தற்கொலை செய்து கொள்கிறான். படுகாயப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்டு உயிரிழக்கிறார் உமர். உமரின் மரண அறிக்கை மிக உருக்கமானதாக கருதப்படுகிறது. அரேபிய பேரரசை உருவாக்கிய பெருமை இவரையே சேரும்.

அதன் பின் மூன்றாவது கலிஃபாவாக 72 வயதான "உத்மன் பின் அஃபன்" (Uthman bin Affan) பொறுப்பேற்கிறார். இவரின் ஆளுமையில் கீழ் முஸ்லீம் படை ஆப்கான், சைப்ரஸ், லிப்யா, அஜ‌ர்பைஜான், ஆர்மீனியா போன்ற பிரதேசங்களை கைப்பற்றியது. மெதினாவில் முதல் முதலாக குரான் ஒரு புத்தக வடிவில் தொகுக்கப்பட்டது. தன்னுடைய 84வது வயதில் இவரும் கொல்லப்படுகிறார். அதற்கு முக்கிய காரணமாக அரேபியாவில் பெருகிய சட்டம் ஒழுங்கு பிரச்னை, முகம்மது அவர்களின் மனைவி ஆயிஷாவை இவர் பகைத்துக் கொண்டது மற்றும் தன்னுடைய உமய்யா குலத்தையே (Banu Umayya) சேர்ந்தவர்களையே இவர் ஆதிக்கம் செலுத்த விட்டது என பலவற்றை குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள்

அரேபியாவில் வம்சம் அல்லது குலம் மிகவும் ஆதிக்கம் செய்து வந்தது. இதில் குரோஷிய வம்சம் அல்லது குலம் தான் மிக உயர்ந்தது என கருதப்பட்டது. இது ஆதாம், ஆப்பிரகாம் மற்றும் இஸ்மாயில் என சொல்லப்பட்ட முன்னாள் ஆப்ரகாமிய மத இறை தூதவர்கள் பிறந்த வம்சம் என நம்பப்பட்டது.

மேலும் பார்ப்போம்.






Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :