Saturday, November 21, 2015

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 11

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 11

Englightened Master

 
முகம்மது அவர்களின் மரண‌த்திற்கு பின் குரோஷிய பழங்குடி இனத்தில் இருந்து மட்டுமே இஸ்லாமிய தலைவரை தேர்ந்தெடுப்பது என்று ஒரு நியதியை வகுத்தார்கள் முஸ்லீம் பிரதிநதிகள். முதல் மூன்று கலிஃபாக்களும் (தலைவர்கள்) மெக்காவை சேர்ந்த குரோஷிய பழங்குடியினர்தான். இவர்கள் பதவியை தவறான முறையில் கைப்பற்றிவிட்டனர், இவர்கள் கலீஃபாக இருக்க அருகதை அற்றவர்கள் என நான்காவது கலிஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட முகம்மதின் மருமகன் "அலி" குற்றம் சாட்டினார். மேலும் அலி, முகம்மது அவர்களின் பனு ஹஷீம் ( Banu Hashim) என்கிற குலத்தை சேர்ந்தவர். அபு பக்கரோ, பனு தைம் (Banu Taym) என்கிற குலத்தை சேர்ந்தவர். முகம்மது அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்க‌ள் மட்டுமே இஸ்லாமிய கலிஃபாவாக தேர்ந்தெடுக்க தகுதியானவர்க‌ள் என்று அலி கருதினார்.

அபு பக்கரின் மகளும், முகம்மதின் இளம் வயது மனைவியுமான ஆயிஷா முதல் மூன்று கலிஃபாக்களால் ராணி போல் மரியாதை செய்யப்பட்டார். ஆனால் அலியோ முகம்மது அவர்களின் முதல் மனைவி கதிஜா ( Khadīja bint Khuwaylid) வின் மகள் ஃபாத்திமாவின் கணவர். இந்த அலியின் தந்தையான "அபு தலிப்" தான் முகம்மது அவர்களை வளர்த்தவர். அதனால் முகம்மதுக்கு பிறகு முதல் கலீஃபாக அலி தான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நினைத்தார்கள். ஆனால் ஆயிஷாவுக்கும் இவருக்கும் இருந்த பகைதான் இவர் முதல் அல்லது இரண்டாவது கலீஃபாக வர இயலாமல் இருக்க ஒரு காரணம் என்கிறார்கள் ஆய்வாள‌ர்கள்.

ஆயிஷாவுக்கும் "சஃப்வான்" (Safwan bin al-Mu‘attal) என்கிற ஒரு அடிமை வாலிபனுக்கும் கள்ள தொடர்பு இருப்பதாக ஒரு வதந்தி அரேபியாவில் பரவுகிறது. இதை காரணம் காட்டி மருமகன் அலி, முகம்மது அவர்களிடம் ஆயிஷாவை விவாகரத்து (தலாக்) செய்யுமாறு முறை இடுகிறார். முகமதோ தனக்கு இதுகுறித்து அல்லா விடம் இருந்து இறை செய்தி இறங்கிய‌தாகவும், ஆயிஷா கூறியது போல் காணாமல் போன நகையை மீட்பதற்காகதான் அவர் அந்த வாலிபனோடு சென்றதாகவும் அந்த வதந்தியை முகம்மது அவர்கள் முடித்து வைக்கிறார். இது Sahih al-Bukhari 5:59:462 மற்றும் Sahih Muslim 37:6673 குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் ஆயிஷாவுக்கும், அலிக்கும் பிரச்னை தொடங்க முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

வாளாலும், வன்முறையாலும் பரவிய முஸ்லீம் படையில் இப்படி பலவிதமான உட்சண்டைகள் ஏற்படத் துவங்கின. ஒவ்வொருவரும் தங்கள் பழங்குடியின் மேல் உள்ள பற்றால் மற்றவர்களை வெறுக்கவும், பாரபட்சம் காட்டவும் தொடங்கினர். எந்த வன்முறையால் மாற்று மதத்தினரை சூரையாடினார்களோ, அந்த வன்முறை அவர்களுக்குள்ளேயே ஏற்படத் துவங்கியது. பல நாடுகளில் சூரையாடப்பட்ட செல்வ செழிப்பை யார் சொந்தம் கொண்டாடுவது என்பதிலும் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடுகள் ஏற்பட துவங்கின. உலக சரித்திரத்தில் மிகப்பெரும் ரத்த ஆறை ஏற்படுத்தும் விதமாக மாமியார் - மருமகன் சண்டை துவங்கியது. அதுதான் முகம்மது அவர்கள் ஏற்படுத்திய இஸ்லாமிய "உம்மா"வை உடைத்து எறிந்தது.

மூன்றாவது காலிஃபா உத்மான் கொல்லப்பட்டு, பலநாட்கள் அழுகிய நிலையில் அவர் உடல் தூக்கி வீசப்பட்டிருந்தது. இதற்கு முக்கிய காரணம் அலிதான் என்று ிமுஸ்லீம் படை வீரர்களான "தல்ஹா" மற்றும் "ஜுபைர்" (Talha and Zubayr) கருதினார்கள். ஆயிஷாவின் ஆதரவோடு அவர்கள் அலியை தாக்குவதற்கு படை திரட்டினர். நான்காவது கலிஃபாக அலி தேர்ந்தெடுக்கப்பட்டது முறையற்றது என்றும் அவர்கள் கருதினார்கள். பெரும் படையோடு அவர்கள் அலியை தாக்குவதற்காக ஈராக்கிய நகரமான பஸ்ராவுக்கு (Basra) வருகிறார்கள். இந்த போர் தான் ஒட்டக போர் (Camel war) என்றும் பஸ்ரா போர் (Battle of Basra) என்றும் அழைக்கப்படுகிறது. பல ஆயிரம் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கும், முகம்மது ஏற்படுத்திய முஸ்லீம் ஒருங்கினைப்பான‌ "உம்மா" சிதைந்ததற்கும் மூல காரணம் இந்த ஒட்டக போர்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மேலும் தொடரும்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :