Saturday, November 21, 2015

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 12

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 12

Englightened Master


முஸ்லீம்கள் மத்தியில் பிளவு ஏற்படுவதற்கு ஆயிஷா-அலி விரோதமும், பழங்குடிகளிடம் இருந்த குல வேற்றுமைகளும் மட்டும் காரணமல்ல. ஜிகாத் போர்களால் கிடைத்த பெரும் செல்வமும், அழகிகளும், ஆளுமைகளும், அவர்களுக்கு இடையே பெரும் பொறாமை தீயை உண்டாக்கின. நாகரீகம் இல்லாத கொள்ளைக் கூட்டங்களாய் காலம் காலமாக இருந்த அரபிகள் பெரும் சாம்ராஜ்யங்களுக்கு அதிபதிகள் ஆன பின்பும் தங்கள் இயற்கை குணம் மாறாமல் இருந்தனர். ஒவ்வொரு கலிஃபாவுக்கும், ஒவ்வொரு பிராந்திய தலைவனுக்கும், முழு நேர தொழிலே போர் புரிவதும், மற்ற நாடுகளை அபகரிப்பதுமாகவே இருந்தது. மேலும் முகம்மது அவர்களின் உபதேசங்களை பலரும் பலவிதமாக எடுத்துக் கொண்டு தங்களுக்கு சாதகமான வகையில் பின்பற்ற தொடங்கினர்.

அல்-குரான் என்பது முகம்மது அவர்கள் தன்னுடைய 40 வயதில் தொடங்கி 23 ஆண்டுகள் வெளிப்படுத்திய வாசகங்களாகும். (அவருக்கு கேப்ரியல் எனும் தேவதை அல்லாவின் இறை வசனங்களை கூறியதாக அவர் தெரிவிக்கிறார்) முகம்மது அவர்கள் இறந்த பின் அவரோடு இருந்து பலர் அவற்றை எழுதியும் மனப்பாடம் செய்தும் வைத்துக் கொள்கின்றனர். பல நாடுகளை பிடித்து இஸ்லாமிய மயமாக்கல் செய்யப்பட்டதால் பல மொழிகளில் குரான் கொண்டு செல்ல‌ப்பட்டது.

மூன்றாவது கலீஃபாக பொறுப்பேற்ற உத்மன் பேராசையும், சுயநலமும், போகப் பிரியராகவும் இருந்தாலும் அவரின் முயற்சியால்தான் குரான் இன்றைக்கு இருக்கின்ற நிலையில் வடிவம் பெறுகிறது. உத்மன் ஜைத் (Zaid bin Thabit) என்பவரிடம் குரானை தன்னுடைய குரோஷிய நடையில் தொகுக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறார் உத்மன். முகம்மதோடு இருந்த சில நம்பகமானவர்களை இப்பணியில் அமர்த்துகிறார். அது தொகுக்கப்பட்டதும் அதை நான்கு புத்தகமாக நகல் எடுக்க வைக்கிறார். ஒவ்வொன்றையும் முஸ்லீம் சாம்ராஜ்யத்தின் முக்கிய நகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன. நிலுவையில் உள்ள அனைத்து குரான்களையும் அழிக்க ஆனையிடுகிறார் உத்மன். "அல் முஷ்த்ஃப் அல் உத்மானி" (The Al-Mushaf Al-Uthmani) என்று அழைக்கப்படுகிற இந்த குரான் தொகுப்புதான் இப்போது புழக்கத்தில் உள்ள குரான். உத்மனின் இந்த செயலால்தான் குரான் பலவிதமாக இல்லாமல் ஒரே புத்தகமாக பின்பற்றப்படுகிறது என்று அவரின் ஆதரவாளர்களும், உத்மன் பல முக்கிய தகவல்கள் அழிவதற்கு காரணமாக இருந்துவிட்டார், அரிய தகவல்கள் பல அழிவதற்கு காரணமாகிவிட்டார் என விமர்சகர்களும் கூறுகிறார்கள்.

பல குரான்கள் ஒன்றுக்கொன்று முரனாக இருப்பதை வேண்டுமானால் உத்மன் தடுத்திருக்கலாம், ஆனால் அவர் திரட்டி தற்போது பின்பற்றப்படும் குரானே தனக்குள் முரன்படுவதை புதிதாக படிப்பவர்கள் உணரலாம்.

114 சுராக்களை (பகுதிகள்) கொண்ட குரானில் சில, முகம்மது அவர்கள் மெக்காவில் வெளிப்படுத்தியவை, சில மெதினாவில் வெளிப்படுத்தியவை. முகம்மது தொடக்கத்தில் மெக்காவில் இருந்த போது அவர் முதன்முதலில் வெளிப்படுத்திய குரான் வாசகங்கள் மிதமானவை. ஏனென்றால் அப்போது அவர் ஒரு சாதாரண பிரஜை. அப்போதிருந்த வாசகங்களில் முஸ்லீம்களுக்கு அல்லாவும், முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அவரவர்களின் இறைவனும் முக்கியம் என்கிறார். அல்லாவைதான் முஸ்லீம் அல்லாதவர்கள் வழிபட வேண்டும் என்று அப்போது அவர் கூறவில்லை. பிற்பாடு அவர் மெதினா சென்று ஒரு படையை முன்நின்று நடத்துபவராகவும், பலம் பொருந்தியவராகவும் உருவான‌ பின் "அல்லாவின் மீது நம்பிக்கை இல்லாதவர்களை கொன்றொழியுங்கள்" என்கிறார்.

மேலும் தொடரும்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :