Saturday, November 21, 2015

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 08

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 08

Englightened Master

  

 
இப்படி முகம்மது அவர்களின் வாழ்வில் நடந்ததாக பல சம்பவங்களை எடுத்துக் காட்டும் கலிஃபாக்கள், "அல் தாக்கியா" (Al Taqiyya - மத அடையாளங்களை மறைத்துக் கொண்டு செயலாற்றுவது) மற்றும் கிட்மன் (Kitman - உதட்டளவில் மட்டும் நட்பு கொள்வது) போன்ற‌ கோட்பாட்டுகளை முன் நிறுத்துகிறார்கள். மேலும் கீழ்கண்ட "ஸூரத்துல்ஆல இம்ரான்" என்கிற 3வது ஸுராவில் 28வது வசனத்தில் (அல்லா சொன்னதாக) முகம்மது அவர்கள் குரானில் குறிப்பிடுவதை, பின் நாளில் பல இஸ்லாமிய கொள்ளைக்காரர்கள் படை வீரர்களுக்கு போதிக்கிறார்கள்.

3:28. முஸ்லீம்கள் (முஃமின்கள்) தங்களைப் போன்ற முஸ்லீம்களையன்றி, காஃபிர்களைத் தம் உற்ற நண்பர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டுமானால் நீங்கள் அவ்வாறு நண்பர்களை போல் இருந்து கொள்ளலாம்.

இது குறித்து முகம்மது அவர்களின் கூட்டாளியாக இருந்த‌ அபு அத்-தர்தா (Abu Ad-Darda) கூறுகிறார், இஸ்லாமியர்கள், இஸ்லாமியர் அல்லாதோரிடம் (காஃபிர்) முன் சிரித்து நடிக்க வேண்டும், ஆனால் மனதிற்குள் பகையை வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி காஃபிர் எனப்படும் முஸ்லீம் அல்லாதாரோடு போரிட்டு, மரணம் அல்லது மதம் ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை அவர்களை (காஃபிர்களை) ஏற்க வைப்பதே புனித போராக முகமதுக்கு பின்னும் பல ஆண்டுகள் நடைப்பெற்றது.

முகம்மது அவர்களின் விசுவாசத்தை பெற்றவரான‌ உமர், முகம்மது அவர்களுக்கு பின் முஸ்லீம்களை வழிநடத்துகிறார். அவர் "உலகில் உள்ள அனைத்து நூலகங்களையும் எரித்து விடுங்கள் எல்லாமே குரானில் இருக்கிறது. நமக்கு வேறு எந்த புத்தகமும் தேவையில்லை".என்று அவர் ஆனையிடுகிறார். இந்த அசுரத்தனமான மதவெறியோடு கூடிய சலாஃபிய எண்ணம்தான், இஸ்லாமியர்களாக மாறிய மக்களை வெறியடைய செய்து அலெக்சாண்ட்ரியா, எகிப்து, சிரியா, பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள உலகில் உள்ள நூலகங்களை முஸ்லீம் படையால் அழிக்க வைத்தது. இந்தியாவின் பழம்பெரும் நூலகமான தக்ஷ்சீலா மற்றும் உலகின் மிகப்பெரும் நூலகமான பீகாரில் இருந்த நலந்தாவையும் இந்த எண்ணமே எரிக்க வைத்தது. அதாவது குரானில் இல்லாதது உலகில் வேறு எந்த புத்தகத்திலும் இல்லை என்கிற வெறி பிடித்த எண்ணம்.

இப்படி உலகெங்கும் இஸ்லாம் பரவத் தொடங்கியதும், அந்த‌ நாடுகள் கீழ் கண்ட வகையில் பிரிக்கப்பட்டன.

தர் அல் இஸ்லாம் நாடுகள் என்பவை - எங்கெங்கு எல்லாம் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ, அங்கெல்லாம் ஷரியத் சட்டத்தை அமல் படுத்தவும். முஸ்லீம்களுக்கு அனைத்து விதமான சலுகைகள் அளிக்கப்படவும் உறுதி செய்கிறது

மேலும் பார்ப்போம்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :