Saturday, November 21, 2015

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 16


ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 16

Englightened Master




அதன் பின் அலிக்கும், சிரியாவின் கவர்னராக இருந்த முவையாவுக்கும் பெரும் பிண‌க்கம் ஏற்பட்டது. இருவர் இடையே ஒரு கட்டத்தில் "சிஃபின்" எனும் இடத்தில் போர் மூண்டது (Battle of sifin). பல முஸ்லீம்களை அந்த‌ கொடூரமான போர் பலி வாங்கியது. இந்த போருக்கு பின் சமாதானத்திற்கு அலியும், முவையாவும் சம்மதித்தனர் அந்த சமாதானத்தை "குரா" நாடோடிகள் விரும்பவில்லை. அவர்கள் அலியிடம் இருந்து பிரிந்து "கர்ஜைட்கள்" எனும் பெயரில் ஒருங்கினைந்தார்கள். சில காலத்திற்கு பிறகு குஃபாவில் தொழுகை செய்துக் கொண்டிருந்த அலியை கர்ஜைடினர் கொன்றார்கள்.

அலியின் மரணத்திற்கு பின் முவையாவின் தலைமையில் ஏற்பட்ட "உத்மான் கலிஃபா" இரண்டாம் பகுதி கலீஃப் பரம்பரை எனக் கொள்ளப்படுகிறது. அதாவது முகம்மதுக்கு பின் முதல் கலீஃஃப் "ரசுதின் கலிஃபா" என அழைக்கப்படுகிறது. அதில் 1) அபு பக்கர் 2) உம்மர் 3) உத்மன் 4) அலி ஆகிய நால்வரும் இடம்பெறுகிறார்கள். அது முடிந்து விட்ட நிலையில், சிரியாவை தலைநகராக கொண்டு உத்மான் கலிஃபா, முவையாவின் தலைமையில் தொடங்கியது.. அதே வேளையில் அலியின் மகன் ஹசன் (Hasan ibn Ali) ஈராக்கின் குஃபாவை மையமாக கொண்டு ஆட்சி செய்தார். அவர் ஒரு தருனத்தில் முவையாவோடு சமாதான ஒப்பந்தமும் ஏற்படுத்தினார் அலியை முதல் "இமாமாக" கொண்ட ஆட்சி வழியை, ஷியாக்கள் "இமாம் பரம்பரை" என்று அழைத்தார்கள். அதன் பின் அலியின் இரு மகன்களான ஹசனும், ஹுசைனும் கொல்லப்பட்டது ஷியா மற்று சுன்னிகள் என முஸ்லீம் படைகளை பிரித்தது. ஹுசைன் கோரமாக கொல்லப்பட்டது இன்றள‌வும் "முகரம்" என்கிற பெயரில் ஷியாக்களால் நினைவு கூறப்படுகிறது.

ஹசனோடு சமாதான ஒப்பந்தத்திற்கு பின் பொது ஆண்டு 661ல் முவையா முறைப்படி கலிஃபாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பைஜான்டைன் பேரரசு நாகரீகத்தில் அரேபியர்களை விட மிக முன்னேறி இருந்ததால், அவர்களின் நிர்வாக அமைப்புகள்: மிக‌ சிறப்பாக வடிவமைக்கப் பட்டு இருந்தன. பைஜான்டைன் பேரரசின் கீழ் இருந்த சிரியாவை, முஸ்லீம் படை கைப்பற்றிய பின் முவையா அதன் நிர்வாகிகளையும், நிர்வாக அமைப்பையும் மாற்றாமல் வைத்திருந்தார். "காகஸ், பாரதத்தின் சிந்து பிரதேசம், மக்ரப் (Maghreb) மற்றும் இபீரியன் தீபகர்பம் என அது பறந்து விரிந்தது". உலக சரித்திரத்தில் மிகப்பெரிய பேரரசுகளில் ஒன்றாக அது விளங்கியது. கிறிஸ்துவ "பைஜான்டைன்" பேரரசோடு அது பல யுத்தங்களை புரிந்தது. சிரியாவை மையமாக கொண்டு உமயத் பேரரசு இருந்ததால், சிரியாவில் இருந்த பல கிறிஸ்துவர்கள் மீது அது மிதமான கொள்கையையே கொண்டிருந்தது. பல முக்கிய பதவிகளில் கிறிஸ்துவர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். மேலும் முவையாவின் மனைவி மைசம் (Maysum) ஒரு "ஜெகோபைட் கிறிஸ்துவராக" இருந்ததால் சிரியாவில் இருந்த பல ஜெகோபைட் கிறிஸ்துவர்களின் ஆதரவை அது பெற்றிருந்தது. முவையா போரில் பல புரட்சிகளை செய்தார். இரும்பால் ஆன இயந்திரங்கள் உதவியுடன் கற்களை வீச வைக்கும் தொழில்நுட்பத்துடன் அவர் போர் புரிந்தது குறிப்பிடத் தக்கது.

முவாயத் கலீஃபைட் 661 முதல் 750 வரை ஆட்சி செய்தது. அதன் பின்னர் முகம்மதின் மாமாவின் வழி வந்த "அபாஸித் கலீஃபைட்" (Abbasid Caliphate) ஆட்சியை கைப்பற்றியது. அது பொது ஆண்டு 750 முதல் 1258 வரை ஆட்சி செய்தது. அபாஸித் கலீஃபைட் அனைத்து முஸ்லீம் நாடுகளையும் தன் வசம் கொண்டிருக்கவில்லை. அலியின் வழி வந்த ஷியாக்கள், அலியின் மனைவியும், முகம்மதின் மகளுமான ஃபாத்திமா பெயரில் "ஃபாதிமித் கலீஃபைட்" (Fatimid Caliphate) எனும் பேரரசை எகிப்தின் நகரமான கெய்ரோவை தலைநகராக கொண்டு அமைத்தார்கள். இந்த பேரரசு வட ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் ஆட்சி செய்தது. இது தவிர ஆங்காங்கே பல குறு நில முஸ்லீம் சுல்தான்களும் உருவானார்கள்.

முகம்மதால் அவர்க‌ளால் தொடங்கப்பட்ட முஸ்லீம் படை இப்படி பல்வேறு வகையில் உடைந்தும், சிதைந்தும், உருமாறியும் பல நாடுகளை அடைந்தன. முஸ்லீம் படையில் இருந்த பல கூலிப்படைகளும், அடிமைகளும், இஸ்லாமிய ஜிகாத்தையும், குரானிய கோட்பாடுகளையும் தங்களின் சொந்த வழிமுறைகளில் கையாளத் தொடங்கினார்கள். விளைவு மிக பயங்கரமாக இருந்தது. குறிப்பாக அது இந்தியாவை வரலாறு காணாத வகையில் பாதித்தது. அதன் ஒரு தொடக்கம்தான் "முகம்மது பின் காசிம்" என்பவன் இந்தியாவின் சிந்து பிரதேசத்தை கைப்பற்றிய‌து

இந்த பதிவோடு இந்த தொடரின் அரேபிய பகுதி முடிந்தது. இனி அடுத்ததாக இந்திய பகுதி தொடரும்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :