Saturday, November 21, 2015

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 17

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 17

Englightened Master


ஏழாம் நூற்றாண்டில் இருந்து நாம் மீண்டும் கால சக்கரத்தில் அமர்ந்து நிகழ் காலம் வருவோம். தற்போது இந்தியாவில் எப்படிப்பட்ட மனநிலை உருவாக்கப்பட்டுள்ளது ? கோடிக்கணக்கான இந்துக்கள் சிந்திய ரத்தத்தில் முளைத்த இந்த தேசத்தில் இன்று நாம் படிக்கும் சரித்திரம்தான் என்ன ? உண்மையான வரலாற்றை பதிப்பதற்கு கூட ஊடகங்கள் தயாராக இல்லையே ? ஏன் இந்த நிலை ?

ஏனென்றால் உண்மை வரலாற்றை படித்துவிட்டால் பாரதீயர்கள் (அனைத்து மதத்தவர்களும்) தங்கள் ரத்த சரித்திரத்தை அறிந்து கொள்வார்கள். தங்கள் மூதாதையர்கள் ரத்த வெள்ளத்தில் துடி துடிக்க கொல்லப்பட்டதையும், அச்ச உணர்வின் உச்சத்தில் மதமாற்றப்பட்டதையும் உணர்வார்கள். அந்த விழிப்புணர்வு இந்த தேசத்தின் பெரும்பாலான இந்துக்களை ஒன்று படுத்தி விடும். அந்த விழிப்புணர்வு ஒரு பெரும் இந்து எழுச்சிக்கு வழிவகுத்துவிடும். விளைவு அந்நிய சக்திகளால் நம்மை ஆளுமை செலுத்தி விட இயலாது.

ரத்தத்தில் முளைத்த இந்தியா எனும் தேசம் பிறப்பதற்கு முன் அதை ஆட்சி செய்து வந்த பிரிட்டீஷ் ஏகாதிபத்யம் இதை நன்கு அறிந்திருந்தது. இந்துக்கள் மத்தியில் எத்தனையோ வேற்றுமைகள் இருந்தன. பல ஆயிரம் சாதிகள், பல மொழிகள், பல பழக்க வழக்கங்கள், பலவிதமான சடங்குகள் என பலவும் இருந்தன. ஆனால் இவை அனைத்தையும் தாண்டி நல்ல மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும், மிக உயர்ந்த அறிவு செழுமையும், ஈடு இனையற்ற கலாச்சார தொன்மையும் அவர்களிடம் இருந்தது. அனைவரையும் ஒன்றினைக்கும் ஒப்பற்ற உந்து சக்தியாக அவர்களின் தர்மம் இருந்தது. இதனால் எதிர்காலத்தில் பாரதத்தின் வளர்ச்சி அபரிதமாக இருக்கக் கூடும், அதனால் பாரதம் எதிர்காலத்தில் உலகளாவிய் ஒரு ஆளுமையை செலுத்தக் கூடும் என அவர்கள் கருதினார்கள். அதன் விளைவாக பிரிட்டீஷ் அரசாங்கம் அகண்ட பாரதத்தை மதரீதியாக பிளக்க துனை நின்ற‌து. மீதம் இருந்த இந்தியா எனும் பிரதேசத்தை ஒரு போலியான சரித்திர பேழைக்குள் அது அடைத்து வைத்தது.

சரித்திரமே ஒரு தேசத்தின் அடையாளம், அளவுகோல், அங்கீகாரம். இதை உணர்ந்த‌ பிரிட்டீஷ் ஏகாதிபத்யம் இந்தியாவின் சரித்திரத்தை மறைத்தது, திரித்தது. அது செய்த கீழ்தரமான இந்த தந்திரத்தை சுதந்திரத்திற்கு பின் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்தார்கள். கம்யூனிஸ்டுகளோடு ஒப்பிடுகையில் பிரிட்டீஷார் எவ்வளவோ மேல் என்றே எண்ண தோன்றுகிறது. அறிவுஜீவிகள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மேதைகள் என பல முகமூடிகளில் முளைத்த இந்த பயங்கரவாத கம்யூனிஸ கும்பல், இந்துக்களை பலவிதங்களில் பிரித்தும், நம் சரித்திரத்தை பல விதங்களில் திரித்தும் சித்தரித்தனர்.

இஸ்லாமிய கொள்ளையர்களும், கொடுங்கோலர்களும், மதத்தின் பெயரால் வன்முறை புரியவில்லை, மாறாக அவர்கள் துருக்கிய காட்டுமிராண்டிகள், நாடோடிகள் என முஸ்லீம்களின் அராஜகங்களை அவை அழகாக திரையிட்டு மூடின. சுதந்திரத்திற்கு பின் போலி மதசார்பற்ற நிலையை நேருவும் அவரின் காங்கிரஸும் முன்நிறுத்தியதால், செக்யூலரிஸம் என்கிற பெயரில் இந்த கம்யூனிஸ முற்போக்கு எழுத்தாளர்கள் உமிழ்ந்த சரித்திரம் பெரிதும் போற்றப்பட்டது. உண்மை சரித்திரத்தை எழுதுவது மதவெறியை தூண்டுவது என்று கருதப்பட்டது. போலி சரித்திரத்தை எழுதினால் அது முற்போக்கு என சொல்லப்பட்டது. இந்துக்களுக்கு மத்தியில் உள்ள பிரச்னைகளையும் பிரிவினைகளையும் மிகைப்படுத்தி எழுதுவதில் மட்டுமே பல எழுத்தாளர்களும் சத்திய சீலர்களாக இருந்தார்கள்.

எது உண்மை எது பொய் என்று அறிய, நாம் மீண்டும் எட்டாம் நூற்றாண்டை நோக்கி பயனிப்போம். அகண்ட பாரதத்தின் மக்ரன், மேற்கு பஞ்சாப், பிரம்மநாபாத், முல்டன் போன்ற சிந்து பிரதேசங்களில் நிலவிய சூழ்நிலை என்ன ? முகமது பின் காசிம் படை எடுத்து வந்த நிலையில், பாரதம் எப்படி இருந்தது ? எனப் பார்ப்போம்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :