Tuesday, July 26, 2016

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 27


வட மற்றும் மேற்கு பாரதத்தில் ஒரு பேரரசு இல்லாத நிலை முகம்மது கஜ்னிக்கு மிகவும் சாதகமாக இருந்தது. காஃபிர்களின் நாடான பாரதத்தின் மீது ஒவ்வொரு வருடமும் "ஜிகாத்" தொடுப்பேன் என்கிற அவனின் சபதத்திற்கு சாதகமான சூழ்நிலையே அப்போது இருந்தது

குதிரைகளில் மிக வேகமாக சென்று ஒரு இடத்தை தாக்குவது, கொளையடிப்பது, தீயிட்டு கொளுத்தியவாறு அவ்விடத்தை விட்டு அகலுவது என்பதே அவனின் யுக்தியாக இருந்தது.. இவ்வாறு மிகப்பெரும் அச்சத்தை உருவாக்கினான் கஜினி முகம்மது. "பஞ்சாப், நாகர்கோட், தனேசர், கனௌஜ், க்வாலியர் மற்றும் உஜ்ஜயின்" ஆகியவற்றை தாக்கி அழித்த‌ முகம்மது கஜினி, பஞ்சாபை மட்டும் தன்னோடு இனைத்துக் கொண்டு மற்றவ‌ற்றை தன்னுடைய ஆளுமையின் கீழ் வைப்பதற்கு சில அடிமை இந்து/பௌத்த சேனைகளிடம் ஒப்படைத்தான். இதன் மூலம் இந்துக்கள் இடையே பிரிவையும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தி இருந்தான். அவனின் படையில் சேர்வதே தங்களுக்கு பாதுகாப்பு என சில‌ உள்நாட்டு மக்கள் உணரத் தொடங்கினர். இதனால் முகம்மது கஜினியின் படை மேலும் பலம் பெற்றது.

டிசம்பர் 1018 AD ஆம் ஆண்டு அவன் படை யமுனை நதியை கடந்து "புலந்தஷாஹர்" (Bulandshahar) எனும் இடத்தை அடைந்தது. கிட்டத்தட்ட "பத்து லட்சம் திர்ஹாம்களை" அவ்விடத்தில் வசூல் செய்தான் முகம்மது. அதன் பின் மதுராவில் உள்ள "மஹாபன்" எனும் இடத்தை அடைந்து தாக்குதலை மேற்கொண்டான்.
முகம்மது கஜ்னியின் செயலாளராக இருந்த "உத்பி" (Utbi) என்பவர் இதை குறித்து விரிவாக குறிப்பிடுகிறார். "காஃபிர்கள் (முஸ்லீம் அல்லாதவர்கள்) கோட்டைகளை துறந்து விட்டு நதிகளை நோக்கி ஓடினார்கள். ஆனால் பலர் பிடிக்கப்பட்டார்கள். பலர் தப்பிக்க முயன்று முழ்கினார்கள். பலர் கொலை செய்யப்பட்டார்கள். அதன் பின் சுல்தான் மதுராவில் உள்ள கோவில்களை (கிருஷ்ணர் பிறந்த‌ கோவில் உட்பட) நெருங்கினான். அவன் அங்கிருந்த ஐந்து ( 89,300 மிசல் எடையுள்ள) தங்க சிலைகளையும், 200 வெள்ளி சிலைகளையும் பெயர்த்து எடுக்க ஆனையிட்டான், வைரங்களும், வைடூரியங்களும் கைப்பற்றப் பட்டன. அதன் பின் சுல்தான், நாப்தா (naphthala) போன்ற எரிபொருள்களை பயன்படுத்தி கோவில்களை அடியோடு எரியூட்டி அழித்தான். இந்த சூரையாடல் கிட்டத்தட்ட 20 நாட்கள் தொடர்ந்து நடந்தது. அதன் பின் சுல்தான் "கனௌஜை" நோக்கி படையை திருப்பினான். கனௌஜில் 10000 கோவில்கள் இருந்தன. ஊமையாகவும் செவிடாகவும் இருந்த அந்த சிலைகளை கண்டு செய்வதறியாத‌ மக்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். சுல்தான் கோவில்களை சூரையாடவும், தப்பி ஓடியவர்களை அடிமையாக்கி சிறை பிடிக்கவும் ஆனையிட்டான்.

அடுத்து அவன் முஞ்ச் (Munj) பகுதியை தாக்கினான். அங்கிருந்த பிராமனர்கள் தங்கள் கடைசி மூச்சு வரை சண்டையிட்டார்கள். வெற்றி பெற முடியாது என்கிற நிலையில் முகம்மது கஜ்னியிடம் சிக்கி விடக் கூடாது என்று தங்கள் குழந்தைகளையும், மனைவிகளையும் தீயில் ஏற்றி தாங்களும் மடிந்தார்கள். அசி (Asi) எனும் நாட்டு அரசனும் முகம்மதை கண்டு தப்பி ஓடினான். சுல்தான் அவரின் ஐந்து கோட்டைகளையும் அடியோடு தரைமட்டமாக்க உத்தரவிட்டான். அதில் இருந்த பலர் உயிரோடு புதைக்கப்பட்டனர். பல வீரர்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டனர்.
அதன் பின் ஷ்ரவா (Shrawa) எனும் நகரத்திற்கும் அதே விதி ஏற்பட்டது. கொளையடிக்கப்பட்ட பொருட்கள் கிட்டத்தட்ட நூறு ஒட்டகங்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன. கிட்டத்தட்ட மதுராவில் மட்டும் ஐயாயிரம் பேர் அடிமைகளாக்கப்பட்டு இழுத்து செல்லப்பட்டனர்.

இது போலவே "அல்பெருனி" (Alberuni) எனும் முகமதோடு சென்ற சரித்திர ஆய்வாள‌ர், இதை குறித்து தெளிவாக விவரிக்கிறார். "வட மேற்கு இந்தியாவை முகம்மது கஜ்னி தாக்கியதும் அவ்விடங்களை பஞ்சத்தை ஏற்படுத்தினான். இதன் மூலம் சிதறி ஓடிய இந்துக்களின் நாகரீகம் அழிந்தொழிந்தது. இதனால் தான் இந்துக்களின் அறிவியல் காணாமல் போய் எங்கள் கைகளுக்கு அப்போது எட்டாத "காஷ்மீர்" மற்றும் "பெனாரஸ்" போன்ற பகுதிகளுக்கு சென்றடைந்தது. இறந்து சடலங்களாக கிடந்த இந்துக்களின் சடலங்களை கூட ஆபரண அணிகல‌ன்களுக்காக விடாமல் தேடியது முஸ்லீம் படை. அல்லாவின் நண்பர்கள் நெருப்பையும், சூரியனையும் வழிபடும் இந்துக்களின் பினங்களை மூன்று நாட்கள் தேடி தேடி சலித்தெடுத்தார்கள். தங்கம், வெள்ளி, முத்துக்கள், வைரங்கள் என கிடைத்தவை எல்லாம் எடுத்தார்கள். அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட "3 லட்சம்" திர்ஹாம்களாக இருந்தது. பிடிப்பட்ட இந்து அடிமைகள் 2 முதல் 10 திர்ஹாமிற்கு விற்கப்பட்டார்கள். இவை அனைத்தும் கஜ்னி நகரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. தொலை தூர நகரங்களில் பல வியாபாரிகள் கஜினிக்கு இதை வாங்குவதற்கு வந்தார்கள். "மவரௌன்", (Mawaraun-Nahr) "ஈராக்", "குரசான்" போன்ற நாடுகளை செர்ந்த வியாபாரிகள் இதை பெரிதும் வாங்கி சென்றார்கள். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளினால் இந்த நகரங்கள் நிரம்பி வழிந்தன. பிடிபட்ட இந்திய அடிமைகள் பல சந்தைகளில் விற்கப்பட்டனர்"

அடுத்து சோமநாதர் கோவிலின் மீது முகம்மது கஜ்னியின் பார்வை திரும்பியது.
 

Englightened Master

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :