Tuesday, July 26, 2016

Keerthivasan

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 26

ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 26



இத்தருனத்தில் முகம்மது கஜ்னியால் எப்படி 18 முறை பாரதத்தை நோக்கி படையெடுத்து வர முடிந்தது என்பதை பார்க்க வேண்டும். 18 முறை அவன் படையெடுத்து வரும் வரை இந்து அரசர்கள் சகித்துக் கொண்டு இருந்தார்களா ? என்றும் சிலர் கேட்பதுண்டு.

முகம்மது கஜ்னி உட்பட முஸ்லீம் படையினர், திடீர் தாக்குதல்களை புரிபவர்களாக இருந்தார்கள். ஒரு ராஜ்ஜியத்தின் மீது அவர்கள் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள செல்வங்களை கொள்ளை அடித்துக் கொண்டு, அங்குள்ள மக்களை அடிமைகளாக பிடித்து சென்று விடுவார்கள். முஸ்லீம் படைகளை சேர்ந்த கலீஃபைட் ஆகட்டும், சுல்தான் ஆகட்டும், அமீர் ஆகட்டும், படையின் முன்நின்று போர் புரிபவர்களாக அவர்கள் இல்லை. பாரதத்தில் அவர்கள் இந்துக்களோடு போரிடுகையில் இந்துக்களின் தர்ம நெறிகளை நன்கு அறிந்திருந்தார்கள். அதனால் அவர்கள் அரசர்களைதான் குறி வைத்து தாக்குதல் நடத்துவார்கள். அரசன் வீழ்த்தப்பட்டால் அப்படை சரண் அடையும். தோல்வி அடையும் படை வீரர்களை பெரும்பாலும் தங்கள் படையில் அடிமைகளாக்கி சேர்த்துக் கொள்வார்கள். வேறு ஒரு அரசனை தாக்க செல்லும் போது, பிடிபட்ட வீரர்களை படையின் முன் வரிசையில் பகடைகளாக அனுப்புவார்கள். முன்னே செல்லும் பகடை வீரர்கள் பெரும் எண்ணிக்கையில் பலியாவார்கள். இதனால் எதிரி படைக்கும் பலத்த சேதம் ஏற்படும். எதிரி பலவீனமாகும் வேளையில் பின்னால் வரும் முஸ்லீம் படை வீரர்கள் எதிரியை கடுமையாக தாக்கி வெற்றிக் கொள்வார்கள்.

மற்றொரு பக்கத்தில் இந்திய அரசர்கள் போர்களில் முன்நின்று போரிடுவார்கள். அதுவே அவர்களுக்கு சத்திரிய லட்சனமாக இருந்தது. சதுரங்கத்தில் நடப்பது போல், பெரும்படையுடன் போருக்கு செல்லும் ஒரு அரசன் போரில் கொல்லப்பட்டால் அந்த போர் முடிவுக்கு வந்துவிடும். அரசன் என்பவன் ஒரு நாட்டின் ஆதார புருஷனாக கருதப்படுவதால் அரசன் இறந்த பிறகு அவனின் படை வீரர்கள் பெரும்பாலும் போரை தொடர்வது வழக்கமில்லை. மேலும் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்த‌து போல் இந்துக்களின் போர் முறைகள் தர்ம நெறிகளை பின்பற்றுபவை. சூரிய உதயத்தில் தொடங்கி, சூரிய அஸ்தமனத்தில் மட்டுமே போர்கள் நடைபெற்றன. பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாத சமவெளிகளிலேயே பெரும்பாலான போர்கள் நடைபெற்றன. மேலும் போர் என்பது திடீர் தாக்குதல்களாக இல்லாமல், மறைந்து தாக்கும் யுக்திகளாக இல்லாமல் முன் கூட்டியே அறிவிக்கப்பட்டு இரு படைகள் மோதும் நிகழ்வுகளாகவே இருக்கும். இப்படிப்பட்ட எல்லா நியதிகளையும் தவிடு பொடியாக்கின‌ முஸ்லீம் படைகளின் நாகரீகமற்ற போர் யுக்திகள்.

உண்மையில் முகம்மது கஜ்னி படையெடுத்து வந்தான் என்று சொல்வதே தவறு என்பதே பல சரித்திர ஆய்வாளர்களின் கருத்து. முகம்மது கஜ்னியின் தாக்குதல்கள் பெரும்பாலும் ஒரு பிரதேசத்தை கொள்ளையடிக்க வரும் ஒரு கொளைக்காரனை ஒத்து இருந்ததே தவிர அது ஒரு முழுமையான போராக கொள்ள முடியாது.

மேலும் 11ம் நூற்றாண்டில் பாரதத்தின் வடக்கு பிரதேசம் பேரரசுகள் எதுவும் இல்லாமல் பல‌ சிற்றரசர்களால் ஆளப்பட்டு வந்தது. மாமன்ன‌ன் ராஜ ராஜ சோழன் மற்றும் அவர் மகன் ராஜேந்திர சோழன் போன்ற மாபெரும் அரசர்கள் தங்கள் கவனத்தை பாரதத்தின் தெற்கேயும், தென்கிழக்கிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் கொண்டிருந்தனர். பாரதத்தின் வடக்கே இருந்த குர்ஜர், ராஷ்ட்ரகூடர்கள், மற்றும் முஸ்லீம் கலீஃபைட்டின் விஸ்தரிப்பை தடுத்து நிறுத்திய "ப்ரதிஹாரா" எனும் பேரரசர்களும் மிகவும் பலம் இழந்து சிற்றரசர்களாக இருந்தார்கள். ராஜ்புட் பேரரசு உடைந்து போய் "சமந்தர்கள்" (Samanthas) எனும் பெயரில் சிற்றரசர்களாக சிதறிக் கிடந்தது. இது முகம்மது கஜ்னிக்கு மிகவும் சாதகமாக இருந்தது..


Englightened Master

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :