Monday, August 22, 2016

Keerthivasan

எங்கே பிராமணன்? – தர்மம் – 33

கேள்வி கேட்பவர்: ஹிந்து மதத்தில் கூறுகிற தர்மம் என்பது என்ன? சட்டமா? நியாயமா? ஏதாவது நெறிமுறையா? என்ன அது?

சோ : நீங்கள் குறிப்பிட்ட எல்லாமே தர்மம் என்ற சொல்லில் அடங்கும். அது மட்டுமல்ல. சாஸ்திரம் சொல்கிறபடி நடப்பது; நீதி; நேர்மையான செயல்; சத்தியம்… என்று பல விஷயங்கள் தர்மம் என்ற சொல்லில் அடங்கும். மற்ற மதங்களில் இப்படி ஒரு சொல் இல்லை. ‘ட்ருத்’ – ‘மொராலிட்டி’ – ‘எதிக்ஸ்’ – ‘லா’ – ‘ஜஸ்டிஸ்’ – ‘குட் காண்டக்ட்’ – ‘ஹானஸ்டி’ – ‘கம்பாஷன்’ – ‘சாரிட்டி’… என்று பல சொற்கள், மற்ற மதங்களிலும், மற்ற நாகரீகங்களிலும் கையாளப்படுகின்றன. அவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய சொல் ‘தர்மம்’.
‘தர்மம்’ என்கிற வார்த்தை ஸம்ஸ்கிருதத்தில் ‘த்ரு’ என்ற வேரிலிருந்து வருகிறது. ஆதரிப்பதற்கும், காப்பாற்றுவதற்கும், தாங்குவதற்கும், வளர்ப்பதற்கும் கூறப்படுவது ‘த்ரு’. இந்த வேரிலிருந்துதான் தர்மம் என்கிற சொல் வருகிறது. அதாவது எது ஒன்று ஆதரிக்கப்பட வேண்டுமோ, எது ஒன்று காப்பாற்றப்பட வேண்டுமோ, எது ஒன்று வளர்க்கப்பட வேண்டுமோ – அதுதான் தர்மம்.அதன் வீச்சு அசாத்தியமானது. அதுமட்டுமல்ல – ‘தர்மம்’ சூட்சுமமானது. அதாவது, பல சிக்கலான நேரங்களில் ‘இதுதான் தர்மம்’ என்று எடுத்த எடுப்பிலேயே ஆராயாமல் கூறிவிட முடியாது. தோற்றத்திற்கு தர்மம் போல் தெரிவது, உண்மையில் அதர்மமாக இருக்கலாம்; பார்வைக்கு அதர்மமாகத் தெரிவது, உண்மையிலேயே தர்மமாக இருக்கலாம். இதனால்தான், தர்மம் சூட்சுமமானது என்று சொல்லப்படுகிறது.‘யுத்த தர்மம்’ என்று கூறுகிறோம். சாதாரண சமயங்களில், ஒருவனை தாக்குவதும், கொல்வதும் கூடாது. அது அதர்மம். ஆனால் யுத்தத்தில், அது தர்மம். போரில் வீரத்தைக் காட்டி பிறரை வீழ்த்துவது க்ஷத்ரிய தர்மம்.இப்படியெல்லாம் பல கோணங்கள், அம்சங்கள் இருப்பதால்தான் தர்மம் எது என்பதை ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

சரி, ‘எதுதான் தர்மம்?’ என்று கேட்டால், அதற்கும் தர்ம சாஸ்திரங்களிலேயே விளக்கம் இருக்கிறது. விருப்பு, வெறுப்பு அற்றவனாக, தவறான நடத்தை இல்லாதவனாக, எல்லோரையும் நேசிப்பவனாக உள்ள கற்றறிந்தவன், தன்னுடைய மனசாட்சிக்கு உகந்தவாறு எதை ஏற்கிறானோ, அது தர்மம்; அவன் எதை நிராகரிக்கிறானோ அது அதர்மம்.

கேள்வி : இந்த விளக்கம், முழுமையான தெளிவை ஏற்படுத்தி விடுகிறதா? எல்லா நேரங்களுக்கும் இது பொருந்தி விடுமா?

சோ : இந்த விளக்கம் கூட போதாதுதான். பல சமயங்களில் எது தர்மம் என்பதில் முரண்பாடுகள் ஏற்படத்தான் செய்யும்

மஹாபாரதத்தில் கர்ணனை எடுத்துக் கொள்வோம். துரியோதனன் செய்த தவறுக்கெல்லாம் அவன் துணை போனான். ‘இதைச் செய் என்று துரியோதனன் கூற வேண்டிய அவசியமில்லை. இதைச் செய்தால் துரியோதனனுக்குப் பிடிக்கும் என்று நான் நினைத்தால் போதும். அதைச் செய்து விடுவேன்’ என்ற அளவுக்கு கர்ணன் போகிறான்.

அவனிடம் குந்தி வந்து எவ்வளவோ கெஞ்சிக் கேட்டுப் பார்க்கிறாள். கிருஷ்ண பரமாத்மாவே மன்றாடுகிறார். ஆனால் அவர்களுடைய வேண்டுகோள்களை மறுத்து, துரியோதனன் பக்கமே கர்ணன் நிற்கிறான்.

இத்தனைக்கும், யுத்தத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதையெல்லாம் கர்ணன் விரிவாகவே எடுத்துச் சொல்கிறான். துரியோதனன் தரப்பில் உள்ள ஒவ்வொருவரும் எப்படி அடிபட்டு வீழப் போகிறார்கள் என்பதையெல்லாம் ஒரு ‘ட்ரெய்லர்’ காட்டுகிற மாதிரி அவன் காட்டுகிறான். ‘

‘இதெல்லாம் எனக்குத் தெரிகிறது; ஆனால், நான் துரியோதனன் பக்கம்தான் போரிடுவேன்’ என்று அவன் கூறிவிடுகிறான். அது அவனுடைய தர்மம். அவன் துரியோதனனுக்குப் பட்ட நன்றிக் கடன். அதைத் தீர்ப்பதை அவன் மிகப் பெரிய தர்மமாக நினைத்தான்.

உண்மைதான். கர்ணனைப் போல விபீஷணன் நடந்து கொள்ளவில்லை. ராவணனிடத்தில் எவ்வளவோ எடுத்துச் சொன்னான்.ஆனால் இவனுடைய அறிவுரைகளைக் கேட்ட ராவணன், இவனை அவமதித்தான். ‘அப்படியானால் நான் போகிறேன்’ என்று சொல்லி, விபீஷணன் கட்சி மாறி விட்டான். இந்த நாட்டில் முதன் முதலாகக் கட்சி மாறியவன் விபீஷணனாகத்தான் இருக்க வேண்டும். அவன் இவ்வாறு செய்ததில் கொஞ்சம் சுயநலமும் கலந்துதான் இருந்தது.அவன் ராவணனை விட்டு ராமரிடம் சென்றபோது தூரத்தில் இருந்து அவனைப் பார்த்த ஸுக்ரீவன் போன்றவர்கள், ‘அவனைக் கொன்றுவிட வேண்டும்’ என்று கூறுகிறார்கள்.

‘எதிராளியிடமிருந்து வருவதால், அவனிடமிருந்து ஆபத்துதான் வரும்’ என்று எண்ணி அவர்கள் இப்படிச் சொன்னார்கள்.

ஆனால் ராமரோ, அவனைப் பார்த்த உடனேயே, ‘இவனால் ஆபத்து கிடையாது; அவனைப் பார்த்தாலே தெரிகிறது. அவன் ராஜ்யத்தின் மீது நேசம் வைத்துள்ளவன்; அதனால்தான் நம்மிடம் வருகிறான்; ஆபத்து இல்லை’ என்று சொல்லி விடுகிறார்.

ஆனால், ராவணன் சபையில் எவ்வளவோ நல்லதை எடுத்துச் சொல்லியும் அது எடுபடாமல் போனதாலும், அங்கே தான் அவமதிக்கப்பட்டதாலும்தான் – விபீஷணன் வெளியேறி ராமரை சரணடைந்தான். அது அவன் கண்ட தர்மம்.
அதே ராமாயணத்தில் கும்பகர்ணன் என்ன செய்தான்? அவனும் ராவணனுக்கு எவ்வளவோ அறிவுரை சொன்னான்.


– CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :