Monday, August 22, 2016

Keerthivasan

காஷ்யப புரா - காஷ்மீர் சரித்திரம் - 10


காஷ்மீரின் இந்துக்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. அது இன்று வரை ஒரு தொடர்கதையாகவே இருக்கிறது. இஸ்லாமிய தீவிரவாதத்தினால் அழிக்கப்பட்ட‌ இந்துக் குடும்பங்களும், கொல்லப்பட்ட பச்சிளம் குழந்தைகளும், பட்ட துயரங்கள், என இவை வார்த்தைகளில் அடங்கிவிடாது, ஆனால் மறுபுறம் இந்தியாவோடு இனைந்திருப்பதால் காஷ்மீர் வாழ்க்கை தரத்திலும், தனி நபர் வருமானத்திலும் மிகவும் முன்னேறி உள்ளது என்பதுதான் உண்மை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரோ முன்னேற்றம் இல்லாமல் வறுமையில் இருக்கிறது.

இந்தியா டுடே வெளியிட்டிருந்த அறிக்கையின் படி, 2001 - 2002 ல் மட்டும் 4577 கோடி ரூபாய்கள் மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது அதாவது இந்தியா முழுதும் மத்திய அரசு, மாநிலங்களுக்கு தரும் உதவித் தொகையில் இது 10 சதவீதம். காஷ்மீருக்கு வேறு எந்த மாநிலங்களையும் விட அதிக உதவித் தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதோடு மட்டும் இல்லாமல் ரூபாய் 25000 கோடிகள் மதிப்புள்ள பணிகளை, மத்திய அரசு உதவியுடன் அங்கு நடைபெறுகிறது. பலருக்கு புரியும் படி சொல்லப் போனால் இது 'ரொக்கமாக" ஒவ்வொரு காஷ்மீர் குடும்பத்திற்கும் நேரிடையாக வழங்கப்பட்டால், வருடத்திற்கு ரூபாய் "40460/-" கொடுக்க இயலும்.

ஒரு சராசரி காஷ்மீரி, மத்திய அரசிடம் இருந்து மற்ற மாநில குடிமக்களை விட எட்டு மடங்கு அதிக நிதியை பெறுகிறான். மற்ற மாநிலங்களில் மக்களின் சராசரி வருமானம் 1992-93ல் ரூ 576.24 இருந்த நிலையில் 2000-01ல் அது வெறும் 1137 ரூபாய்களாக மட்டுமே உயர்ந்துள்ளது. ஆனால் காஷ்மீரிலோ அது 1992-93 லேயே 3197 ரூபாய்களாக இருந்தது, அது 2000-01 கணக்குபடி 8092 ரூபாய்களாக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே ஏழ்மை குறைவான மாநிலமாக காஷ்மீர் திகழ்கிறது. வெறும் 3.46 லட்சம் மக்களே அதாவது 3.48 சதவீதம், ஏழ்மை கோட்டுக்கும் கீழே உள்ளனர். இந்திய சராசரியான 26.10 சதவீதத்திற்கு இது மிகவும் குறைவு. ஆனால் காஷ்மீர் இந்தியாவுக்கு அளிக்கும் பங்களிப்பு என்ன ? இந்திய "ஜிடிபி" யின் சதவீதத்தில் அதன் பங்களிப்பு 2000-01 கணக்கு படி 1 சதவீதத்திற்கும் குறைவானது. மேலும் காஷ்மீர் மக்கள் நமக்கு தரும் பரிசு ? கல் வீச்சுகளும், கடையடைப்புகளும், ராணுவ வீரர்களை காட்டிக் கொடுப்பதும், கொல்வதும்தான்.

ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலை எப்படி உள்ளது ? ஜூலை 2002ல் உலக வங்கி அறிக்கைப்படி 88 சதவீத மக்கள் எந்த வசதியும் இல்லாத கிராமங்களில் வசிக்கிறார்கள். 50 சதவீதத்தினருக்கு வேலை வாய்ப்புகள் இல்லை. 60 சதவீத மக்களுக்கு குடிக்க தண்ணீர் கூட கிடைப்பது இல்லை.

சமீபத்தில் 2014ல் பொறுப்பேற்ற மோடி அரசு கூட காஷ்மீர் மக்களின் நலனுக்காக பல கோடிகளை ஒதுக்கி அவர்கள் நல்வாழ்வுக்காக பாடுபடுகிறது. அங்கு ஏற்பட்ட பெருமழைக்காக மிகப்பெரும் நிவாரனப் பணிகளை இந்திய ராணுவம் மேற்கொண்டது. பல நூறு கோடிகள் காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்காக இந்திய அரசால் செலவிடப்பட்டது. இந்த கட்டுரை எழுதுவதற்கு ஒரு வாரம் முன்பு கூட காஷ்மீர் வளர்ச்சிக்காக 80000 கோடிகளை ஒதுக்கப் போவதாக ஆளும் பாஜக அரசு அறிவித்தது. ஆனால் இதனால் காஷ்மீர் மக்கள் நட்பு பாராட்டுவார்களா ? என்றால் அதற்கு நிச்சயம் "இல்லை" என்பதுதான் பதிலாக இருக்கும். "மதம்" எனும் சேற்றில் புதைந்துவிட்ட காஷ்மீர் மக்களுக்கு, செய்யப்படும் உதவிகளும், செலவிடப்படும் நிதியும் எந்த பயனையும் அளிக்க போவது இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

"ஆர்டிக்கிள் 370" எனும் ஒரு கேடுகெட்ட சட்டம்தான் காஷ்மீருக்கும், இந்தியாவுக்கு இடையே ஒரு பெரும் இடைவெளியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் காஷ்மீர் பண்டிட்டுகளை மீண்டும் குடியமர்த்தவும் அது ஒரு தடையாக இருந்து வருகிறது. காஷ்மீரை விட்டு வெளியேறிய பண்டிட்டுகள் மீண்டும் காஷ்மீருக்குள் சுதந்திரமாக திரும்புவதற்கு இந்த சட்டம் அனுமதி அளிப்பது இல்லை. மேலும் நூறு சதவீதம் இஸ்லாமிய‌ மயமாக்கல் எனும் மதவெறியர்களின் கொள்கை பிடிப்பால் இந்துக்களை அங்கு மீண்டும் குடியமர்த்துவது இயலாததாக இருக்கிறது.
இந்த சிறப்பு சலுகையினால் இந்தியர்கள் அங்கு நிலம் வாங்க இயலாது, எந்த தொழிலும் செய்ய இயலாது. இந்த சிறப்பு சட்டத்தை களையாமல் எந்த தீர்வும் ஏற்படப் போவதில்லை. இது நேருவும், அவரின் கூட்டாளிகளும் இந்த நாட்டின் மீது ஏற்படுத்திய மிகப்பெரும் சரித்திர கொடுமையாகும்.

நம்முடைய அண்டை நாடான சீனாவை பார்த்து நாம் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்த "ஜிங்ஜியாங்" மாகானத்தில், நாட்டின் பெரும்பான்மையினரான "ஹன்" இனத்தவரை கட்டாயமாக குடியேறச் செய்து அங்கு நிரந்தர தீர்வை சீனா ஏற்படுத்தியது. அங்குள்ள மசூதிகளின் நடவடிக்கைகளை தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது சீனா. மேலும் சீனா எந்த வெளிப்புற தலையீட்டையும் கண்டு கொள்வது இல்லை. தன் நாட்டின் இறையான்மைக்கு எது நல்லது என்பதில் அது தெளிவாக உள்ளது. அதே வழியில் காஷ்மீரிலும் நாம் பெருவாரியாக இந்துக்களை குடியமர்த்திதான் இதற்கு தீர்வு காண இயலும். அதற்கு தடையாக இருக்கும் "ஆர்ட்டிக்கிள் 370" ஐ முதலில் களைவதற்கு ஒவ்வொரு நாட்டுப்பற்றுள்ள இந்தியனும் குரல் கொடுக்க வேண்டும். அதுதான் இந்த கட்டுரையின் நோக்கம் !! ஒரே ஒருவருக்கு "ஆர்ட்டிக்கிள் 370 ஐ" களைய குரல் கொடுக்க வேண்டும என்கிற எண்ணத்தை இந்த கட்டுரை ஏற்படுத்தி விட்டது என்றாலும் அது இந்த கட்டுரையின் நோக்கத்திற்கான வெற்றியே !!.

மீண்டும் கட்டுரையின் முதல் வரிக்கு செல்கிறேன். "இந்துக்களீன் ஆதார பூமியாகவும், வேத காலத்திலேயே சனாதன தர்மத்தின் வேராக‌வும் திகழ்ந்தது காஷ்மீர். பூமியில் இருக்கும் சுவர்கம் என்று குறிப்பிடும் வகையில் அது ஒரு அற்புதமான, அழகான‌ பகுதியாக திகழ்ந்தது" நம்மிடமிருந்து எந்த காலத்திலும் பிரிக்க முடியாத இந்த சுவர்கத்தை, நரகமாக்கி வரும் நச்சுப் பாம்புகளிடமிருந்து மீட்பதற்கு நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்றதை செய்ய வேண்டும். இந்த சுதந்திர தினத்தில் நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் சூளுரையாக அது இருக்கட்டும். நம்மால் முடியாது என்றால் வேறு யாரால் இயலும் நண்பர்களே ???

அனைவருக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் !!

வந்தே மாதரம் !! வாழ்க பாரதம் !!
 
ஆக்கம்: Enlightened Voice

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :