Monday, August 22, 2016

Keerthivasan

காஷ்யப புரா - காஷ்மீர் சரித்திரம் - 09

பொது ஆண்டு 1988ல், "ஜம்மு காஷ்மீர் லிபரேஷன் ஃப்ரன்ட்" என்கிற பெயரில் பாக்கிஸ்தானிய பின்புலத்தோடு உருவாகிய காஷ்மீர் முஸ்லீம்களின் இயக்கம், தன்னுடைய கொலை வெறியை தொடங்கியது. செப்டம்பர் 14, 1989ல் அது முதல் முதலாக காஷ்மீர் பண்டிட்டுகளை குறி வைத்து தாக்குதல்களை தொடங்கியது. பண்டிட் "டீகா லால் டப்ளு" எனும் இந்து வழக்கறிஞர் முதல் முதலாக கொல்லப்பட்டார். பொது மக்கள் பலரின் முன்னிலையில் நடந்த இந்த கொலை காஷ்மீர் இந்துக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த கொலைகாரர்கள் எந்த விதமான தண்டனையும் இல்லாமல் தப்பித்தது இந்துக்களை மேலும் அஞ்ச வைத்தது. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரில் இருப்பது தங்களுக்கு எந்த விதத்திலும் பாதுகாப்பு இல்லை என்பதை அவர்கள் உணரத் தொடங்கினர். இதன் பின் "ஜெ கெ எல் எஃப்" மற்றும் பல முஸ்லீம் இயக்கங்கள் காஷ்மீரி இந்துக்களை குறி வைத்து தாக்கத் தொடங்கின. காஷ்மீரில் முக்கியஸ்தவர்களாக இருந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட்டனர். இந்து பெண்கள் வீதிக்கு இழுந்து வந்து பலர் முன்நிலையில் மானபங்கப் படுத்தப்பட்டனர். ஜனவரி 4, 1990ல், ஹிஜ்புல் முஜாஹிதீன் எனும் தீவிரவாத இயக்கம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து இந்துக்கள் உடனடியாக வெளியேறும் படி "அஃப்தாப்" எனும் உள்ளூர் உருது பத்திரிகையில் செய்தி வெளியிட்டது. "அல் சஃபா" எனும் மற்றொரு உள்ளூர் பத்திரிகையும் இந்துக்கள் மீதான இந்த உத்தரவை வெளியிட்டது. காஷ்மீரின் பல சுன்னி இஸ்லாமிய மசூதிகளின் ஒலிப்பெருக்கிகளில், இந்துக்கள் மீதான வன்மமும், வெறிப் பேச்சுகளும், 'காஷ்மீர் முழுவதுமாக‌ முஸ்லீம்களுக்கே சொந்தமானது' எனும் கூற்றும், தொடர்ந்து ஒலிப்பரப்பட்டது.

இந்நிலையில் தன்னுடைய அரசியல் எதிரியான ஜம்மு காஷ்மீரின் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை பழி வாங்க, உள்துறை அமைச்சராக இருந்த "முஃப்தி முஹம்மத் சயீத்" திட்டம் தீட்டினார். அவர் இந்தியாவின் பிரதமராக இருந்த "வி பி சிங்கிடம்", ஜக்மோகன் அவர்களை காஷ்மீரின் கவர்னராக்குமாறு கேட்டுக் கொண்டார். ஜக்மோகனை கவர்னராக நியமிப்பதன் மூலம் ஃபரூக் அப்துல்லா பதவி விலகுவார் என்று முக்தி முஹம்மத் சயித் யோசித்திருந்தார். ஏற்கனவே அப்துல்லாவுக்கும், ஜக்மோகனுக்கும் பிணக்கம் இருந்ததால், ஃப‌ரூக் அப்துல்லா இதை எதிர்த்தார். ஆனால் வி பி சிங், ஃபரூக் அப்துல்லாவின் பேச்சை கேட்காமல் ஜக்மோகனை காஷ்மீர் கவர்னராக நியமித்தார். இந்த இரு முஸ்லீம் தலைவர்களுக்கு இடையே நடந்த இந்த அரசியல் போர், காஷ்மீரில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே மதவெறியர்களால் தூண்டப்பட்டிருந்த முஸ்லீம்கள், ஜக்மோகனின் நியமனம் தங்களுக்கு எதிரான ஒரு அடக்குமுறை எனும் பரப்புரையை நம்பினர். மிகப்பெரும் கலவரம் அங்கு வெடித்தது, சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்தது. ஆங்காங்கே முஸ்லீம் வெறியர்கள் துப்பாக்கிகளுடன் குழுக்களாக சுற்றத் தொடங்கினர். ஃபரூக் அப்துல்லாவின் அரசு இதை மௌனமாக வேடிக்கப் பார்த்தது. மோசமான வானிலை காரணமாக ஜம்முவில் இருந்த ஜக்மோகனால் காஷ்மீருக்கு செல்ல இயலவில்லை.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் குழுமிய முஸ்லீம்க‌ள் ஆங்காங்கே ஆதரவற்று இருந்து இந்து குடும்பங்க‌ளை கண்ட மேனிக்கு சுட்டனர், வெட்டினர், பெண்களை இழுத்து சென்றனர், சொத்துக்களை சூரையாடினர். பல ஆண்டுகளாக தங்களோடு நட்புறவாய், தங்களோடு ஒரு சக மனிதனாய், தோழனாய், கூடப் பிறக்காத சகோதரனாய் பழகி வந்த மனிதர்கள், அன்றுதான் இந்துக்களின் கண்களுக்கு முஸ்லீம்களாக தெரியத் தொடங்கினர். அவர்களின் கொடூரம் அவர்களை நடுநடுங்கச் செய்தது. ஒரு காஷ்மீர் பண்டிட் எழுதிய ஒரு உருக்கமான‌ கவிதை இது.

அது காஷ்மீரின் ஜனவரி மாதத்து குளிர் காலம். அது மிகக் குளிராக இருந்தது. அது அனைத்தையும் உரைய வைத்தது. மனித உணர்வுகளை கூட அது பனியாய் உரைய வைத்தது. அதனால்தான் அவர்களால் (முஸ்லீம் நண்பர்கள்) என் கடுமையான மூச்சுத் துடிப்பை, நான் மூச்ச‌ற்று போகும்வரை உணர முடியவில்லை.

ஒரு வேளை அந்த குளிர் மிக அதிகமாக இருந்ததால், அது அவர்களின் பார்வையை மங்க செய்து விட்டது போலும், அதனால்தான் அவர்களால் என் இறந்த உடலை கூட பார்க்க இயலவில்லை.

அந்த குளிர் மிக கொடுமையாக இருந்ததால், அவர்களின் செவிப்பறைகளை அது செயலிழக்க செய்துவிட்டன போலும்.
அது அவர்களின் மனசாட்சியையும் கொன்று விட்டது போலும். அதனால்தான் அவர்களால் வலியால் துடிக்கும் என் அலறலை கேட்க முடியவில்லை.


ஆக்கம்: Enlightened Voice

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :