Monday, August 22, 2016

Keerthivasan

காஷ்யப புரா - காஷ்மீர் சரித்திரம் - 08

இந்தியாவின் ஜனாதிபதி கூட காஷ்மீருக்குள் நுழைய வேண்டும் என்றால், காஷ்மீர் பிரதமரின் அனுமதியோடுதான் செல்ல இயலும் எனும் சட்டத்தை ஷ்யாம பிரசாத் முகர்ஜி வன்மையாக கண்டித்தார். இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல, காஷ்மீருக்குள் சென்று போராட்டத்தை தொடங்க நினைத்தார் முகர்ஜி. ஆனால் காஷ்மீருக்குள் செல்ல "பர்மிட்" வாங்க வேண்டியிருந்தது. அவருக்கு "பர்மிட்" வழங்க ஷெயிக் அப்துல்லாவின் அரசு மறுத்தது. அதை மீறி உள்ளே நுழைந்தார் முகர்ஜி. அவரை மே 11 1953ல் கைது செய்து சிறையில் அடைத்தது ஷெயிக் அப்துல்லா அரசு.
அவர் ஒரு மிக மோசமான பாழடைந்த கட்டிடத்தில் சிறை வைக்கப்பட்டு, துண்புறுத்தப்ப‌ட்டார். வெறும் ஒன்னரை மாதங்களில் அவர் உடல்நிலை விசித்திரமான காரணங்களால் மிகவும் மோசமடைந்தது. அவருக்கு பென்சிலின் ஒவ்வாமை இருப்பது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டும், அவருக்கு பென்சிலின் மருந்து கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் ஜூன் 23 1953ல் அவர் இறந்தார்.

முகர்ஜி அவர்களின் மரணம் நாட்டு மக்களிடையே பெரும் சந்தேகத்தை கிளப்பியது. இது நேரு மற்றும் ஷெயிக் அப்துல்லாவின் கூட்டு சதி என்று மக்கள் பரவலாக பேசத் தொடங்கினர். முகர்ஜியின் தாய் "ஜோகமாயா தேவி" நேருவிடம் முகர்ஜியின் மரணம் குறித்து பல கேள்விகளை எழுப்பியும் நேருவிடம் இருந்து தக்க பதில் வரவில்லை. மேலும் முகர்ஜி அவர்களின் மரணம் குறித்து சயசார்புள்ள ஒரு குழு விசாரிக்க வேண்டும் என்று வேண்டினார் முகர்ஜியின் தாய். ஆனால் நேருவோ அவரின் வேண்டுதலை முற்றிலுமாக புறக்கனித்தார். இது நேரு மற்றும் ஷெயிக் அப்துல்லாவின் கூட்டு சதியை மேலும் ஊர்ஜிதப்படுத்தியது. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கூட முகர்ஜி அவர்களின் மரணம் நேருவின் சதி என்று குறிப்பிட்டதை இங்கே நாம் குறிப்பிட்டாக‌ வேண்டும்.

ஷ்யாம பிரசாத் முகர்ஜி அவர்களின் மரணம் வீண்போகவில்லை. மக்களிடையே அவரின் மரணம் காஷ்மீரின் சிறப்பு சலுகை குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அது நாட்டு மக்களிடையே நேருவுக்கு ஒரு அவப்பெயரை வழங்கியது. இதனால் ஷெயிக் அப்துல்லாவின் அரசை ஆகஸ்ட் 9ம் தேதி "டிஸ்மிஸ்" செய்தது நேரு அரசு. ஜம்மு காஷ்மீரின் பிரதம மந்திரியாக "பக்ஷி குலாம் முஹம்மத்" பதவி ஏற்றார். காஷ்மீரின் சட்ட அமைப்பு ஒழுங்குபடுத்தப் பட்டு, இந்தியாவின் சட்ட திட்டங்கள், ஜம்மு காஷ்மீருக்கு நீட்டிக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீர் தனி "நாடு" என்பதும் "பிரதம மந்திரி" என்பதும் நீக்கப்பட்டு, "மாநிலம்" மற்றும் "முதல்வர்" எனும் சொல் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால் அதற்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகள் மட்டும் நீடித்தன.

ஷ்யாம பிரசாத் முகர்ஜியால் தொடங்கப்பட்ட பாரதிய ஜன சங் என்கிற கட்சிதான், பின் நாளில் "பாரதிய ஜனதா கட்சி" என்று பரிமளித்து இன்று நம் தேசத்தையே ஆண்டுக் கொண்டிருக்கிறது. அவரின் தியாகம் ஒவ்வொரு தேசப்பற்றுள்ள இந்தியனும் என்றும் நினைத்துப் பார்க்க வேண்டியது.

இதன் பின் பொது ஆண்டு 1986ல், ஃபரூக் அப்துல்லாவின் உறவினன் குலாம் முஹம்மத் ஷா, ஃபரூக் அப்துல்லாவை புறந்தள்ளி ஜம்மு காஷ்மீரின் முதல்வர் பதவியை பிடித்தான். ஷா ஜம்மூவில் ஒரு மிகப்பெரிய மசூதியை பழமையான இந்து கோவில் ஒன்ரின் வளாகத்திற்குள் கட்ட முனைந்தான். இது ஜம்மூவில் வசித்து வந்த‌ இந்துக்கள் இடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியது. மக்கள் வீதிக்கு வந்து இந்த அநியாயத்தை எதிர்த்து போராட தொடங்கினர். இதனால் வெறுப்படைந்த ஷா காஷ்மீருக்கு திரும்பி சென்றதும், அங்கிருந்த பெரும்பான்மை முஸ்லீம்களை தூண்டத் தொடங்கினான். இஸ்லாம் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது என பொருள் படும் "இஸ்லாம் கத்ரே மே ஹை" என்று அவன் பரப்புரை செய்தான். இதனால் காஷ்மீர் முஸ்லீம்கள் இந்துக்கள் மீது வெறித் தாக்குதல்களில் இறங்கினர். காஷ்மீர் பண்டிட்டுகள் பல பிரச்னைகளுக்கு உள்ளாகினர். இந்துக்களின் கோவில்கள் உடைக்கப்பட்டன‌, இந்துக்களின் சொத்துக்களும் அபகரிக்கப்பட்டன. அதிலும் தெற்கு காஷ்மீரை சேர்ந்த பல பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. ஆங்காங்கே குழுமிய முஸ்லீம் கூட்டங்கள் இந்துக்களின் சொத்துக்களை சூரையாட துவங்கினர். 


இந்துக்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு எஞ்சியவை கொளுத்தப்பட்டன. இந்த சூரையாடலில் "நேஷனல் கான்ஃபரன்ஸ்" மற்றும் "காங்கிரஸ்" கட்சியின் உறுப்பினர்களும் களம் இறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. பல இந்துக்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியேற தொடங்கினர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் வேறு வழி இல்லாமல் ஷா வின் அரசு "டிஸ்மிஸ்" செய்யப்பட்டது. அதன் பின் 1983 மற்றும் 1987ல் நடந்த தேர்தல்களில் இஸ்லாமிய அடிப்படைவாத கட்சிகள் தோல்வியை சந்தித்தன. தேர்தல் முறையற்ற முறையில் நடந்தது என்று முஸ்லீம்கள் குற்றம் சாட்டினர். பிரிவினைவாதம் பெருமளவில் தலை தூக்கத் தொடங்கியது.

ஆக்கம்: Enlightened Voice

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :