Monday, August 22, 2016

Keerthivasan

காஷ்யப புரா - காஷ்மீர் சரித்திரம் - 07


ஷ்யாம் பிரசாத் முகர்ஜி, ஜூலை 6ம் தேதி 1901ல் கொல்கத்தாவில் உள்ள வங்காள குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயது முதலே உணர்ச்சி வயப்பட கூடியவராகவும், அநீதிக்கு எதிராக‌ குரல் கொடுக்க‌ கூடியவராகவும் அவர் திகழ்ந்தார். ஆங்கிலத்திலும், வங்காளத்திலும் பட்டப் படிப்புகளை முடித்துவிட்டு, வழக்கறிஞருக்கான "பி எல்" பட்டத்தையும் முடித்தார். கொல்கத்தா உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றவும் தொடங்கினார். அதன் பின் 1926ல் அவர் பாரிஸ்டர் பட்டம் பெற இங்கிலாந்து சென்றார். தன்னுடைய 33ம் வயதிலேயே கொல்கத்தா பல்கலைகழகத்தின் "வைஸ் சான்சிலராக" அவர் நியமிக்கப்பட்டார்.

அதன் பின் தன்னுடைய அரசியல் வாழ்வை முகர்ஜி அவர்கள் 1929ல் தொடங்கினார், இந்திய நேஷனல் காங்கிரஸில் இனைந்து வங்காள‌ சட்டசபைக்குள் அவர் நுழைந்தார். பொது ஆண்டு 1939ல் அவர் இந்து மஹாசபாவில் தன்னை இனைத்துக் கொண்டார். 1944ல் அதன் தலமை பொறுப்பை ஏற்ற அவர் ஆட்சி பொறுப்பில் இருந்த ஐக்கிய‌ முஸ்லீம் லீகை எதிர்த்து களம் இறங்கி போராடி வந்தார். பெருவாரியான முஸ்லீம்களின் தேசவிரோத செயல்பாடுகளை அவர் கண்டித்தார். ஃபிப்ரவரி 11, 1941ல், பல ஆயிரம் இந்துக்கள் கூடிய ஒரு பொதுக்கூட்டத்தில் "பாகிஸ்தானில் வாழ விரும்பும் முஸ்லீம்கள் உடனடியாக மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு வெளியேறுங்கள்" என்று அவர் வீர‌ முழக்கமிட்டார்.

இந்து பெரும்பான்மை பகுதிகள் முஸ்லீம் பெரும்பான்மை உள்ள கிழக்கு பாகிஸ்தான் வசம் செல்லக் கூடாது, அப்படி சென்றால், இந்துக்கள் பெரும்பான்மை முஸ்லீம்களால் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள்.... என்று அவர் பேசி வந்தார். . இதன் பொருட்டு, வங்காளப் பிரிவினைக் கூடாது என்று சுபாஷ் சந்திர போஸின் சகோதரர் "சரத் போஸ்" முன்மொழிந்த போது, அதை எதிர்த்தார் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி.

இந்நிலையில் கிழக்கு வங்காளத்தில் இருந்த "நோக்ஹாலி" (Noakhali) பகுதியில் மதக்கலவரம் வெடித்தது. அங்கு இருந்த பெரும்பான்மை முஸ்லீம்கள் இந்துக்களை இனஒழிப்பு செய்ய தொடங்கினர். "ராம்கஞ்", "பேகம்கஞ்", "ராஜ்பூர்", "லக்ஷ்மிபூர்", "சாகல்னையா" (Chhagalnaiya), "சந்த்வீப்" (Sandwip) என பல‌ காவல்நிலயங்களை சேர்ந்த பகுதிகளில், இந்துக்கள் கொத்து, கொத்தாய் கொல்லப்பட்டனர். இந்து பெண்கள் பிடிக்கப்பட்டு இழுத்து சென்று வன்புணர்வு செய்யப்பட்டனர். மேலும் இந்துக்கள் தங்கள் கிராமங்களில் தங்க வேண்டும் என்றால் மதம் மாற வேண்டும் என்று அங்கிருந்த‌ மூஸ்லீம்களால் நிர்பந்திக்கப் பட்டனர். அப்படி கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் "நாங்கள் சுயவிருப்பத்தின் பெயரில் தான் மதம் மாறினோம்" என்று எழுதி கொடுக்க கட்டாயப்படுத்தப் பட்டனர். பல ஆயிரம் இந்துக்கள் கொல்லப்பட்டனர். பல புராதன கோவில்கள் தரைமட்டமாக்கப் பட்டன. காந்தி இதன் பொருட்டு நோக்ஹாலியில் நான்கு மாதம் முகாமிட்டு அமைதி பிரச்சாரம் செய்தார். ஆனால் அதனால் எந்த பலனும் இல்லை. வங்காளம் உடைந்தது. தப்பித்து பிழைத்து ஓடி வந்த‌ இந்துக்கள் சிலர், தங்கள் கிராமங்களில் இருந்து வெளியேறி மேற்கு வங்காளத்தில் தஞ்சமடைந்தனர். இந்த கலவரங்கள் முஸ்லீம்ககளால் திட்டமிடப்ப‌ட்டு, ஒருங்கினைந்து இந்துக்கள் மீது ஏற்படுத்திய தாக்குதல்கள் என முழங்கினார் முகர்ஜி. இதை எதிர்த்து அவர் கடுமையாக குரல் கொடுத்தார்.

நேருவின் ஒருதலையான மதசார்பற்ற கொள்கையை பெரிதும் எதிர்த்தார் முகர்ஜி. ஆனால் நேருவோ அவரை சுதந்திர இந்தியாவின் தொழிற்துறை அமைச்சராக பொறுப்பேற்க வைத்து அவரை ஆட்கொள்ள நினைத்தார். ஆனால் நேரு பாகிஸ்தானின் பிரதம மந்திரி "லியாக்கத் அலி கானாடு" ஏற்படுத்திய ஒப்பந்தந்தை எதிர்த்து, ஏப்ரல் 6 1950ல், பதவி விலகினார் முகர்ஜி. நேரு, லியாக்கத் அலி கானோடு சேர்ந்து சிறுபான்மை கமிஷனை உருவாக்கி, சிறுபான்மை உரிமையை முன்மொழிந்தது முகர்ஜிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நேருவின் சிறுபான்மை அரசியலை, முகர்ஜிக்கு பெரிதும் வெறுத்தார். இந்துக்களுக்கென்று ஒரு அரசியல் கட்சி மிக அவசியம் என்பதை அவர் உணர்ந்தார். பதவி விலகிய முகர்ஜி, ஆர் எஸ் எஸ் இன் "குருஜி எம் எஸ் கோல்வால்கரின்" ஆலோசனையின் பேரில் "பாரதிய ஜன சங்க்" எனும் கட்சியை அக்டோபர் 21, 1951ல் தொடங்கினார். தில்லியில் தொடங்கப்பட்ட அந்த கட்சிக்கு அவரே தலைமை பொறுப்பையும் ஏற்றார். 1952 -ன் பாராளுமன்ற தேர்தலில் அந்த கட்சி 3 தொகுதிகளை கைப்பற்றியது. பாரதிய ஜன சங்கின் முக்கிய கொள்கைகளாக தேசியவாத‌மும், அனைவருக்குமான‌ பொது சிவில் சட்டமும், பசு பாதுகாப்பு, ஜம்மு காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சுய அதிகாரத்தை நீக்கும் திட்டம் ஆகியவை இடம்பெற்றது. இந்துக்களின் ஆதார தேசமான இந்தியாவில், இந்துக்களின் அரசியல் குரல் உதயமானது.

இந்நிலையில் காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு சலுகைகளை எதிர்த்து களம் இறங்கினார் முகர்ஜி. "ஏக் தேஷ் மே, தோ விதான், தோ பிரதான், தோ நிஷான் நஹி சலேகா" என்று முழங்கினார் முகர்ஜி. அதாவது ஒரு தேசத்தில் இரண்டு அரசியல் அமைப்பு, இரண்டு பிரதம மந்திரிகள், இரண்டு தேசிய சின்னம் இருக்கக் கூடாது என்று பொருள்படும். 1953ம் ஆண்டு காஷ்மீருக்குள் அனுமதி வாங்காமல் நுழைந்த முகர்ஜி அவர்கள், அங்கு உண்ணாவிரதத்தை மேற்கொள்ள தொடங்கினார்.

படத்தில் - ஷ்யாம் பிரசாத் முகர்ஜி அவர்கள் மற்றும் "நோக்ஹாலி" கலவரங்களில் கொல்லப்பட்ட இந்துக்கள்
 
ஆக்கம்: Enlightened Voice

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :