Monday, August 22, 2016

Keerthivasan

காஷ்யப புரா - காஷ்மீர் சரித்திரம் - 06

நேருவின் சரித்திர பிழைகள் மேலும் தொடர்கின்றன‌

மேலும் சுதந்திரம் பெற்ற பிறகு காஷ்மீர் "சட்டசபையில்" ஜம்முவை விட காஷ்மீருக்கு அதிக தொகுதிகளை வழங்கினார் நேரு. 1941 மக்கள் தொகை கணக்கு படி ஜம்முவில் 20 லட்சம் பேரும், காஷ்மீரில் 17 லட்சம் பேரும், "லதாக்" மற்றும் "கில்கித்தில்" 3 லட்சம் பேரும் வசித்தனர். ஆனால் இவற்றை குறித்து சிறிதும் கண்டு கொள்ளாமல், மக்கள் தொகை கணக்கெடுப்பையும் எடுக்காமல், மொத்தம் இருந்த 72 தொகுதிகளில் காஷ்மீருக்கு மட்டும் 43 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட‌து. இதனால் ஜம்மு-காஷ்மீரை பொறுத்தவரை எந்த தீர்மானத்தையும், காஷ்மீர் பள்ளத்தாக்கே தீர்மானிக்கும் வகையில் அமைந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் மக்களோ பெரும்பாலும் பிரிவினைவாதிகள் மற்றும் பாகிஸ்தானை ஆதரிக்கும் முஸ்லீம்கள். (தற்போது காஷ்மீர் பகுதியில் காஷ்மீருக்கு 46 தொகுதிகளும், ஜம்முவுக்கு 37 தொகுதிகளும், லதாக் பகுதிக்கு 4 தொகுதிகளும் உள்ளன) மேலும் 1951ல் ஜம்மு-காஷ்மீரில் நடந்த‌ தேர்தலில், பெரும் முறைகேடுகள் அரங்கேறின‌. பல வாக்குசாவடிகள் ஷெயிக் அப்துல்லாவின் "நேஷனல் கான்ஃபெரன்ஸ்" ஆல் கைப்பற்றப்பட்டது. இதனால் அந்த கட்சி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது. இதை குறித்து நேரு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சொல்லப்போனால் நேருவின் ஆதரவோடுதான் அனைத்தும் அரங்கேறின. இந்த தேர்தலை அங்கீகரித்து இந்திய பாராளுமன்றம் ஒப்புதலை அளித்தது. இதற்கு "எஸ் பி முகர்ஜி" போன்றவர்கள் கடும் ஆட்சேபங்களை தெரிவித்தனர்.

காஷ்மீர் மற்றும் இந்திய சரித்திரத்தை புரட்டிப் போடும் "ஆர்டிக்கிள் 306-A" அரங்கேறியது. இதுதான் இன்றைக்கு இந்தியாவுக்கு மிகப்பெரும் தலைவலியை கொடுத்துவரும் "ஆர்டிக்கிள் 370"-ன் முன்னோடி மற்றும் ஆதாரம். நேரு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் இந்த தனித்துவமான சட்டத்தை வடிவமைக்க, ஷேக் அப்துல்லாவை, சட்டமேதை டாக்டர் அம்பேத்கரிடம் அனுப்பி வைத்தார். ஆனால், அம்பேத்கரோ இதை வடிவமைக்க மறுத்து விட்டார். அம்பேத்கார் இதை குறித்து ஷெயிக் அப்துல்லாவிடம் குறிப்பிடுகையில் "மிஸ்டர் அப்துல்லா, நீங்கள் இந்தியா, காஷ்மீரை பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள், இந்தியா, காஷ்மீரை வளர்ச்சி பெற வைக்க வேண்டும் என்றும் விரும்புகிறீர்கள், காஷ்மீர் வாசிகள் இந்திய குடிமகன்கள் போல் சம உரிமை கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள், ஆனால் நீங்கள் ஏன் இந்தியர்கள் காஷ்மீரில் சம உரிமை பெறக் கூடாது என்று நினைக்கிறீர்கள் ? இது மிகத்தவறானது. நான் இந்தியாவின் சட்ட அமைச்சர். நான் என் நாட்டுக்கு துரோகம் இழைக்க இயலாது"

அம்பேத்கார் அந்த சிறப்பு சட்டத்திற்கான வரையறையை வடிவமைக்க மறுத்த பின்னர் நேரு வேறு ஒருவரை வைத்து அதை வடிவமைத்தார். நேருவின் காங்கிரஸ் கட்சி அந்த "306 ஏ" சிறப்பு சலுகையை பாராளுமன்றத்தில் அங்கீகரித்தது. நேரு இந்த நாட்டுக்கு செய்த மிகப்பெரும் துரோகமாக அது திகழ்ந்தது... திகழ்கிறது..

ஆக நேருவால் காஷ்மீருக்கு அதிக தொகுதிகள், அதிக ஆளுமை, மற்றும் சிறப்பு சலுகைகள் என பலவும் வழங்கப்பட்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரால் தங்கள் பிராந்தியத்துக்கு தேவையான சட்ட திட்டங்களையும், குடிமகன்களுக்கு உண்டான வரையறைகளையும் இயற்றி கொள்ள முடிந்தது. ஜம்மு காஷ்மீர் சட்டப்படி, அதன் குடிமகன்கள் இந்திய குடிமகன்களாக கருதப்படுவார்கள், ஆனால் இந்திய குடிமகன்கள், ஜம்மு காஷ்மீரின் குடிமகன்களாக கருதப்பட மாட்டார்கள். மேலும் இந்தியாவின் "ஐ பி சி" சட்டைத்தை அமலாக்காமல் "ரன்பீர் பெனல் கோட்" (Ranbir Penal Code) எனும் தனிச்சட்டத்தை அது அமலாக்கியது.. ஜம்மு காஷ்மீரின் பிரதம மந்திரியாக பதவி ஏற்றார் ஷெயிக் அப்துல்லா !! (ஜம்மு காஷ்மீர் தனிநாடு என்கிற வகையில் அப்போது அவர் பிரதம மந்திரி) இவை குறித்த பல தகவல்களை நேரு பாராளுமன்றத்திற்கு கூட தெரியாமல் மறைத்து வைத்து காய் நகர்த்தியது வேறு தனிக்கதை.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு "தனி நாடு" அந்தஸ்தையும், தனி "கொடியையும்" வழங்கிய நேருவை கண்டித்து ஒரு மாபெரும் போராளி களம் இறங்கினார். இந்தியா துண்டாடப்பட்ட‌தை தன்னுடைய உடல், பொருள் ஆவி என அனைத்தையும் கொண்டு எதிர்த்தவர் அவர். காஷ்மீரில் இந்திய குடிமக்கள் தங்குவதை தடை செய்யும் சட்டத்தையும், காஷ்மீருக்குள் செல்லும் இந்திய குடிமக்கள் அடையாள அட்டையை கொண்டிருக்க வேண்டும் எனும் நிபந்தனையையும் அவர் கடுமையாக எதிர்த்தார். இந்தியா முழுவதும் ஒரே சட்டம் இருக்க வேண்டும் என்று அவர் முழு மூச்சுடன் போராடினார். நேருவின் முஸ்லீம் ஆதரவு கொள்கையை அவர் சாடினார். காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டிருந்த இந்த சிறப்பு சலுகைகளை எதிர்த்து உண்ணாவிரத்தை தொடங்கினார் அந்த மாவீரர். அவர் பெயர் "ஷ்யாம் பிரசாத் முகர்ஜி"


ஆக்கம்: Enlightened Voice

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :