Monday, August 22, 2016

Keerthivasan

காஷ்யப புரா - காஷ்மீர் சரித்திரம் - 05


காஷ்மீர் பிராமண குடும்பத்தை சேர்ந்த‌ புகழ்பெற்ற வழக்கறிஞரான மோதிலால் நேருவுக்கும் அவரது இரண்டாவது மனைவி ஸ்வரூப் ராணிக்கும், மகனாக பிறந்தார் ஜவஹர்லால் நேரு, மோதிலால் நேரு ஒரு மிகப்பெரிய செல்வந்தராக திகழ்ந்ததால், நேருவை இங்கிலாந்தின் கேம்ப்ரிஜ்ஜில் உள்ள "ட்ரின்னிடி" கல்லூரியில் (Trinity College) சேர்த்திருந்தார். அங்கிருந்த போது மார்க்கீஸிய கோட்பாடுகளில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. அதன் பின்னர் பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா திரும்பினார் நேரு. அலகாபாத் உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். பின் இந்திய தேசிய காங்கிரஸின் இடது சாரி குழுவில் முக்கிய பங்காற்றத் தொடங்கினார். மகாத்மா காந்தியின் ஆதரவை பெற்ற நேரு, இந்தியா சுதந்திரம் அடைந்த நிலையில் அதன் பிரதம மந்திரியாக பதவி ஏற்றார். இந்திய தேசிய காங்கிரஸை இடது சாரி கொள்கைகளை நோக்கி திருப்பியதில் நேருவின் பங்கு முக்கியமானது.

நேருவுக்கு மேற்கத்திய சிந்தனைகள் அதிகம் என்றாலும், அவரின் நாட்டுப்பற்றை யாரும் சந்தேகித்து விட இயலாது. ஆனால் பாரதத்திற்கு சற்றும் பொருந்தாத "செக்யூலரிஸம்" மற்றும் "மார்க்கீஸியத்தை" அவர் முன்நிறுத்தினார். மார்க்கீஸியத்தை ஒட்டிய "சோஷியலிஸம்" நேருவின் கொள்கையாக இருந்தது. இஸ்லாமிய மத வெறியர்கள் நாட்டை துண்டாட வெறி கொண்டு அலைந்த நிலையில், நேரு இந்தியாவை ஒரு செக்யூலர் தேசமாக வடிவமைப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். காஷ்மீரை பொறுத்தவரை நேருவின் அபத்தமான அனுகுமுறை, இந்தியா அடுத்த பல ஆண்டுகளுக்கு ரத்தம் சிந்துவதற்கு காரணமாக இருந்தது என்றால் அது மிகையில்லை. அவரின் தவறான அனுகுமுறைகளை சுருக்கமாக பார்க்கலாம்.

1) இந்திய ராணுவம், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் பிடிக்க செய்யாமல் நேரு அலட்சியம் காட்டியது சரித்திர தவறாக அமைந்தது. அந்த தவறுக்கு மகுடம் சேர்க்கும் வகையில் அவர் ஐக்கிய நாடுகள் சபையை, காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோரியதுதான் மிகக்கொடுமையானது. எப்போதும் ஒரு போரில் தோற்கும் நாடு, அல்லது பலவீனமான நாடுதான் ஐக்கிய நாட்டு சபையின் தலையீடுக்காக கோரிக்கை விடுக்கும். ஆனால் இந்திய ராணுவம் அதிரடியாக செயலாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், நேரு ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டை வேண்டி, அந்த பிரச்சனை இன்றளவும் தீராத வகையில் வழிவகை செய்துவிட்டார். . மேலும் மௌன்ட்பேட்டனின் ஆலோசனையின் பேரில், அவர் அதை ஒரு சர்வதேச‌ பிரச்னையாக மாற்றியதால் எந்த பயனும் இல்லாமல் போனது. ஐக்கிய நாடுகள் சபையோ, பாகிஸ்தானிய ராணுவம், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேற வேண்டும் என்றும், அது வெளியேறும் பட்சத்தில் காஷ்மீர் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தி யாருடன் சேருவது என்பதை குறித்து தீர்மானத்தை எடுக்குமாறும் தீர்ப்பளித்தது. பாகிஸ்தான் இந்த தீர்ப்பை சிறிதும் கண்டுகொள்ளவில்லை. இன்றும் காஷ்மீர் ரத்த வெள்ளத்தில் மிதக்கிறது. லட்சக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டும், இந்து பெண்கள் வண்புணர்வு செய்யப்பட்டும், பல லட்சம் இந்துக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமியில் இருந்து கட்டாயமாக‌ வெளியேற்றப்பட்டும் அது சீர்குலைந்து கிடக்கிறது. இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள இந்து குடும்பங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்..... மறு பக்கம் திபெத்தை பாருங்கள் !! சுதந்திர நாடாக இருந்த திபெத்தை தன் ராணுவ பலத்தால் விழுங்கியது சீனா. திபெத் சீனாவின் ஆளுமைக்கு வந்து இன்று கிட்டத்தட்ட சீனாவுடன் இரண்டற கலந்துவிட்டது. சீனா திபெத்துக்காக எந்த ஐ நா சபையையும் எட்டி பார்க்கவில்லை, மாறாக அதில் தலையிட நினைத்த ஐ நா சபையை எட்டி உதைத்து சீனா !! ஆனால் நேருவோ நிதர்சனத்துக்கு பொருந்தாத அமைதி, சமாதானம் போன்ற கொள்கைகளால் தேசத்தை படு குழியில் தள்ளி விட்டு விட்டார்.

2) நேரு ஷெயிக் அப்துல்லாவோடு மிகுந்த நட்புறவை ஏற்படுத்தி வைத்திருந்தார். (இது குறித்து பல வதந்திகள் உண்டு) அதே வேளையில் மகாராஜா ஹரி சிங்கை அவர் வெறுத்தார். 1946ல் ஷெயிக் அப்துல்லா, "காஷ்மீரை விட்டு வெளியேறு" என்று போராட தொடங்கிய போது அவரை கைது செய்தார் மகாராஜா. அதன் பின் நேருவின் வற்புறுத்தலின் பேரில் ஷெயிக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டு, காஷ்மீரின் பிரதம் மந்திரியாக நியமிக்கப்பட்டார். (அதன் பின் ஷெயிக் அப்துல்லா 1953ல் நேருவால் கைது செய்யப்பட்டது வேறு கதை)

3) நேரு ஆங்கிலேயர்களை மிக‌ அதிகமாக நம்பினார். இந்திய ராணுவ ஜெனரல்களை மதிக்காத நேரு "லார்ட் மௌன்ட்பாட்டனை"தான் அதிகமாக நம்பினார். மௌன்ட்பாட்டன் மனைவி மற்றும் நேருவுக்கு இடையே இருந்த உறவு இதற்கு முக்கிய காரணம் என்று சர்ச்சைகள் பல உண்டு. காஷ்மீரை குறித்த அனைத்து விவகாரங்களையும் தன் அதிகாரத்தில் வைத்திருந்தார் நேரு, ஆனால் இந்தியாவின் மற்ற பிரதேசங்களை நிர்வகிக்கும் அதிகாரம் "சர்தார் வல்லபாய் படேலிடம்" இருந்தது. அவற்றை மிக சிறப்பாக கையாண்டு வந்தார் படேல். (இந்தியாவின் இனையற்ற இரும்பு மனிதர் படேல், கிட்டத்தட்ட 565 ராஜ்ஜியங்களை இந்திய தேசத்தோடு இனைத்தவர்) ஆங்கிலேயர்களோ, நேருவை கைக்குள் வைத்துக் கொண்டு, வடக்கு காஷ்மீர் பகுதியை சேர்ந்த யுக்தி ரீதியான‌ பிரதேசமான "கில்கித்-பல்திஸ்தான்" பகுதியை, பாகிஸ்தானுக்கு தாரை வார்த்தனர். பாகிஸ்தானிய ராணுவத்திற்கு அனைத்து உதவிகளையும் புரிந்து அந்த பிரதேசத்தை கைப்பற்ற அவர்களுக்கு உதவியது பிரீட்டிஷ் அரசு. இதனால் இந்தியா அனைத்து மத்திய ஆசிய நாடுகளுக்கும் பாகிஸ்தான் வழியாகதான் போக வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டது. பாகிஸ்தானின் அனுமதி பெற்றுதான் நாம் எந்த மத்திய ஆசிய நாட்டுக்கும் இன்று செல்ல வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது. பாகிஸ்தானும், சீனாவும் இந்த பிரதேசத்தில் தான் தங்களுக்குள் நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளன. இதற்கு மூல முதல் காரணம் நேருதான்.

நேருவின் சரித்திர பிழைகள் மேலும் தொடரும்.


 ஆக்கம்: Enlightened Voice

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :