Monday, August 22, 2016

Keerthivasan

காஷ்யப புரா - காஷ்மீர் சரித்திரம் - 04

பஷ்டூன் பழங்குடிகளின் படை பாகிஸ்தானிய ராணுவத்தின் முழு ஆதரவோடு காஷ்மீரை விழுங்கிக் கொண்டிருந்தது. அது "ஜாங்கெர்" (Jhanger) பகுதிகளை தாக்கி அதை கைப்பற்றி "நாஷேரா" (Naoshera) மற்றும் "உரி" (Uri) பகுதிகளை தாக்கத் தொடங்கியது. பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் சமவெளிகள் மூலமாக‌ மிக எளிதாக அவர்களால் தாக்குதலை தொடர முடிந்தது ஆனால் இந்திய ராணுவமோ பள்ளத்தாக்குகளையும், பெரும் மலைத் தொடர்களையும், நதிகளையும், உரைப்பனிகளையும் கடந்து செல்ல வேண்டி வந்தது.

செப்டம்பர் 9ம் தேதி பாகிஸ்தான் ஏற்கனவே போடப்பட்டிருந்த ஒப்பந்தங்களை மீறி இந்தியாவுக்கு பெட்ரோல், மன் எண்ணை, சர்க்கரை, உப்பு, மூங்கில், பழங்கள் என அனைத்து பொருட்களையும் அனுப்புவதை நிறுத்தியது. செப்டம்பர் 12ல் பாகிஸ்தானின் லியாகத் அலி கான் காஷ்மீரினுள் பஷ்டூன் தீவிரவாதிகளை ஊடுறுவ செய்யும் ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குகிறான். "முஸ்லீம் லீக் நேஷனல் கார்ட்" (Muslim League National Guard) எனும் பெயரில் ஒரு படை பழங்குடிகளை ஒருங்கினைத்து தாக்குதலை தொடங்க அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் பல தடங்கல்களையும் மீறி, இந்திய ராணுவம், கடும் தாக்குதல்களை தொடங்கி, உரி மற்றும் பாரமுல்லாவை (Baramula) பிடித்தது. மேலும் ஒரு படையை தெற்கு பகுதியில் உள்ள "பூன்ச்" (Poonch) பகுதிக்கு அனுப்பப் படுகிற‌து. இதற்கிடையே 25 நவம்பர் 1947ல், "மிர்பூர்" பகுதியை கைப்பற்றியது பாகிஸ்தானிய பின்புலம் கொண்ட‌ பஷ்டூன் பழங்குடி முஸ்லீம் படை. மிர்பூரில் இருந்த இந்து பெண்கள் பலவந்தமாக இழுத்து செல்லப்பட்டனர். அவர்கள் கதற கதற இழுத்து செல்லப்பட்டு, பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் உள்ள "பிராத்தல்" (பாலியல் தொழில்) பகுதியில் விற்கப்பட்டனர். மிர்பூரில் கிட்டத்தட்ட 400 இந்து பெண்கள் இந்த கொடுமையிலிருந்து தப்புவதற்காக அங்கிருந்த கிணறுகளில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டனர்.

மே 1948ல் இந்திய ராணுவம் தன் படைகளை பல இடங்களில் நிலைபெற செய்யத் தொடங்கியது. வசந்தகால தாக்குதல் என சொல்லப்பட்ட (Indian Spring Offensive) இந்த தாக்குதலை அது துவங்கியது. பாகிஸ்தானிய ராணுவத்தின் தாக்குதல்களை சமாளித்து அது ஜாங்கெர் பகுதியில் முன்னேறியது. காஷ்மீர் பள்ளத்தாக்குதலிலும் நுழைந்து அது பண்முனை தாக்குதல்களை துவங்கி, தித்வைல் (Tithwail) பகுதியை மீட்டது. "கில்கித் ஸ்கௌட்". (The Gilgit scouts) எனும் பிரிவும் இமய மலை தொடர்களில் நல்ல முன்னேற்றத்தை அடைந்து, "லே" பகுதியை மீட்டது. அது மேலும் முன்னேறி "கார்கில்" பகுதியை வசப்படுத்தியது.

அதன் பின் இந்திய ராணுவம் "ஆபரேஷன் குலாப்" (Operations Gulab) மற்றும் "ஆபரேஷன் எரேஸ்" என பல தாக்குதல்களை தொடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கின் வடக்கு பகுதிகளில் உள்ள "கெரன் மற்றும் குரைஸ்" (Keran and Gurais) பகுதிகளை மீட்டது. மேலும் ஜம்மு பகுதியில் உள்ள பூன்ச் பகுதிகளை சுற்றி வளைத்தது. இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 1948ல், "ஆபரேஷன் பைசன்" என்கிற பெயரில் ஒரு தாக்குதலை தொடர்ந்தது. பூன்ச் பகுதியை சுற்றி வளைக்கத் தொடங்கியது.

பூன்ச் பகுதியின் மிக‌ முக்கிய வழியாக "ஜோஜி லா கணவாய்" (Zoji La pass) இருந்தது. அதை பிடித்தால் தான் அந்த பகுதிகளை ராணுவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலும் என்கிற நிலையில் "77 பாராசூட் ப்ரிகேட்" எனும் படை களம் இறங்கியது. அந்த யுக்தி வெற்றி பெறாமல் போக, "ஜெனரல் கரியப்பா" யுக்திகளை மாற்றினார், "எம் 5" இலகுரக பீரங்கிகளின் உதவியோடு, வீரர்கள் துரித கதியில் மலைகளுக்கு இடையே பாலங்களை அமைத்து முன்னேறினர். "மதராஸ் சேப்பார்ஸ்" (Madras Sappers) ஐ சேர்ந்த இரண்டு ராணுவ கம்பெணிகள். "ஜீப்கள் செல்லக் கூடிய வகையில் தடங்களை அமைத்தது. "25 பௌண்டர்ஸ்" (25 pounders) எனும் அணியை சேர்ந்த‌ இரண்டு ரெஜிமென்டுகள் (குழுக்கள்) 3.7 "இன்ச்" துப்பாக்கிகளுடன், நவம்பர் 1ம் தேதி, ஒரு அதிரடி தாக்குதலை நிகழ்தினார்கள் இதை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தானிய ராணுவம் மற்றும் பஷ்டூன் படை பின்வாங்கி சென்று, வடக்கில் உள்ள "ஸ்கர்டு" (Skardu) பகுதிக்கு ஓடியது அடுத்த மூன்று மாதங்கள் ஸ்கர்டு பகுதியில் இந்திய ராணுவத்தை முன்னேற விடாமல் பாகிஸ்தானிய ராணுவம் நல்லதொரு தற்காப்பு வளையத்தை ஏற்படுத்தி கடும் தாக்குதலை தொடுத்து வந்தது. ஆனால் "கலோனல் ஷெர் ஜன்ங் தபா" (Colonel Sher Jung Thapa) தலைமையில் 250 ராணுவ வீரர்கள், ஆறு மாதங்களுக்கு பாகிஸ்தானிய ராணுவத்தை முன்னேற விடாமல் ஸ்கர்டு பகுதியை தாக்கி வந்தனர். துரதிஷ்டவசமாக, அவர்களுக்கு எந்த உதவிகளும் வராத நிலையில், 14 ஆகஸ்ட் 1948ல் ஸ்கர்டு பகுதியை பாகிஸ்தானிய ராணுவம் வசம் சரணடைய செய்ய வேண்டி வந்தது.

கிட்டத்தட்ட ஒரு வருட காலம் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் பூன்ச் பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றியது. இமய மலையில் உயரத்தில் இருந்த பாகிஸ்தானிய கில்கித் படைகள் ஒரு வழியாய் விரட்டி அடிக்கப்பட்டன. பல இடங்களில் இந்திய ராணுவம் முன் நிலையில் இருந்து வந்த நிலையில், ஸ்கர்டு பகுதியில் நடந்தது போலவே. தேக்க நிலை ஏற்படத் தொடங்கியது. , உயிரை கொடுத்து போராடிக் கொண்டிருந்த‌ இந்திய வீரர்கள் போதிய‌ தளவாடங்கள் மற்றும் துணைப்படைகள் அனுப்பி வைக்கப்படாமல் திண்டாடினர். ராணுவத்தின் முன்னேற்றம் தேக்க நிலைக்கு வந்தது. அதற்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுவது இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக பொறுப்பேற்று இருந்த‌ "ஜவஹர்லால் நேருவின்" மனநிலை. அதை குறித்து விவரமாக பார்ப்போம்.
ஆக்கம்: Enlightened Voice

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :