Wednesday, September 14, 2016

Keerthivasan

காஷ்மீர் கற்று தரும் பாடம் - 04

காஷ்மீர் கற்றுத்தரும் பாடம்
- திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் திருப்பூரில் ஆற்றிய உரையின் தொகுப்பு.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமித்தது. பனிப்போரின் விளைவாக ஆப்கானிஸ்தானில் உள்ள ரஷ்ய ஆதரவு அரசுக்கு தொல்லை கொடுக்கும் வேலைகளில் அமெரிக்கா மும்முரமாக இறங்கியது. கோடிக்கணக்கான டாலர்களை பாகிஸ்தானுக்கு கொடுத்து , ஆப்கானிஸ்தானின் அரசுக்கு எதிராக போராடும் முஜாஹிதீன் என்ற அமைப்பை உருவாக்கியது. [ நமக்கு நன்கு அறிமுகமான அல் - குவைதாதான் அது ] அல் - குவைதாவை உருவாக்க அமெரிக்கா வெள்ளமென கொட்டிய நிதியை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ இரண்டாக பிரித்தது.  ஒரு பகுதி ஆப்கானிஸ்தானுக்கு, இன்னொரு பகுதி காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க என்று பிரித்துக்கொண்டது.

அதுவரை காஷ்மீரில் இயங்கி வந்த இந்திய விரோத அமைப்புகள் எதுவும் பயங்கரவாத அமைப்புகளாக மாறவில்லை, அவை தத்துவ ரீதியிலான , கருத்தியல் ரீதியிலான இந்திய விரோத அமைப்புகளாகத்தான் செயல்பட்டு வந்தன. சுருக்கமாகச்சொன்னால் இன்று தமிழகத்தில் இயங்கிவரும் தௌஹீத் ஜமாத், முஸ்லீம் முன்னேற்றக்கழகம் போன்ற அமைப்புகளைப்போல என்று வைத்துக்கொள்ளலாம். அந்த அமைப்புகளுக்கு அபரிமிதமான நிதியை அள்ளிவிட்ட பாகிஸ்தான், அவர்களுக்கு ஆயுதம் கொடுத்து பயங்கரவாத இயக்கங்களாக மாற்றியது.

என்பதுகளின் இறுதியில் ரஷ்யா ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு புது உத்வேகத்தை அளித்தது. நம்மால் சோவியத் ரஷ்யாவையே தோற்கடிக்க முடிந்ததென்றால், ஏன் காஷ்மீர் ஹிந்துக்களை விரட்ட முடியாது? இங்கிருக்கும் ஹிந்துக்களை விரட்டிவிட்டு முழுமையான இஸ்லாமிய ஆட்சியை [ இஸ்லாம் இ முஸ்தஃபா ] ஏற்படுத்துவது என்று முடிவெடுத்தார்கள் .

இதையடுத்து, 1988ல் , காஷ்மீரில் வசித்துவந்த ஹிந்துக்களுக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் ஒரு எச்சரிக்கையை விடுத்தது. ஒன்று அவர்கள் இஸ்லாமியர்களாக மாறவேண்டும். அல்லது காஷ்மீரைவிட்டு வெளியேற வேண்டும். கஷ்மீரில் இனி இஸ்லாமியர்கள் மட்டுமே வசிக்க முடியும் என்று எச்சரித்தார்கள்.

இதையடுத்து, ஹிந்துக்கள் வேட்டையாடப்பட்டனர், பெண்கள் , குழந்தைகள் , வயதானவர்கள் என்ற வித்தியாசமின்றி குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டார்கள். கூட்டம் கூட்டமாக நிற்க வைத்து ஹிந்துக்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள், இரவோடு இரவாக பல ஹிந்து குடும்பங்கள் முழுமையாக அழிக்கப்பட்டன.

இரவு நேரம் ஏதாவது ஹிந்துவீட்டுக்குச்சென்று, அந்த குடும்பத்தலைவரை வெளியே அழைத்துச்செல்வது அடுத்த நாள் காலை அவரைக்கொன்று அந்த வீட்டின் முன்போடுவது, நெற்றியில் திலகமிட்டவர்களை பிடித்துச்சென்று நெற்றியில் பழுக்க காய்ச்சிய கம்பியால் ஓட்டை போடுவது போன்ற கொடூரங்கள் நடக்க ஆரம்பித்தன. பணிக்கு சென்று திரும்பிய ஹிந்து நர்ஸ் ஒருவரை கடத்திச்சென்று அவரை ரம்பத்தால் நெடுக பிளந்து, அவரின் வீட்டின் முன்பாக கொண்டுபோய் போட்டார்கள்.

அவர்களின் திட்டம் இதுதான், ஒரு இடத்தில் இருக்கும் ஒரு ஹிந்துகுடும்பத்தை கொலை செய்தால் அந்த இடத்தைவிட்டு பத்து ஹிந்து குடும்பங்கள் காலி செய்துவிட்டு சென்று விடுவார்கள். அப்படியே நடந்தது,  ஹிந்துக்கள் கூட்டம் கூட்டமாக காஷ்மீரை விட்டு வெளியேற ஆரம்பித்தனர்.  முதலில் ஜம்முவுக்கு வந்தனர், பின்னர் டெல்லிக்கு வந்து, மிருகங்களை விட கேவலமான சூழ்நிலையில் வசிக்க ஆரம்பித்தனர். அவர்களை நம் ஊடகங்கள் அழைத்த விதம்தான் அயோக்கியத்தனமானது அவர்களை புலம்பெயர்ந்தவர்கள் [ migrants ] என்று அழைத்தனர் உண்மையில் அவர்கள் அகதிகள் [ refugees ]  என்ன ஒரு அநியாயம் பாருங்கள்? அவர்கள் என்ன காஷ்மீரின் கிளைமேட் பிடிக்காமலா புலம் பெயர்ந்தார்கள்? உயிரைக்காப்பாற்றிக்கொள்ள தேசத்தின் தலைநகரில் வந்து அடைக்கலம் புகுந்த மக்களை புலம்பெயர்ந்தவர்கள் என்று அழைத்தார்கள். இன்று மட்டுமல்ல. என்றுமே இந்தியாவில் உள்ள ஆங்கில ஊடகங்கள் இந்த லட்சணத்தில்தான் செயல்பட்டு வந்துள்ளன.

அப்போது அங்கு ஒரு மனிதர் இருந்தார், அவர்தான் அப்போதைய காஷ்மீர் கவர்னர் திரு. ஜக்மோகன் அவரால் இயன்றவரை தன் அதிகாரத்தை பயன்படுத்தி ஹிந்துக்களை பாதுகாக்க முயன்றார். அவர் , தான் எழுதிய My Frozen Turbulance in Kashmir என்ற புத்தகத்தில், ஹிந்துக்களை நம் அரசியல் தலைமை எப்படி வஞ்சித்தது என்று விபரமாக விளக்கியிருப்பார் ஒவ்வொரு ஹிந்துவும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம் அது.

பொதுவாக நம் நாட்டில் ஒரு பழக்கம் உண்டு ஹிந்துக்கள் அதிக எண்ணிக்கையில் கொடூரமாக கொல்லப்படும்போதெல்லாம், அந்த சம்பவம் நடந்த உடன் கொடூரமான கொலை என்று கண்ணீர் வடிப்பார்கள்  அந்த சம்பவம் நடந்து சில வருடங்கள் ஆனவுடன் [ ஹிந்துக்களின் மனதில் அந்த சம்பவம் மறக்க ஆரம்பித்துவிட்டது என்று தெரிந்தவுடன் ] அந்த கொலையை திரித்து, அதற்கு காரணமே ஹிந்துக்கள்தான் என்று பேச ஆரம்பிப்பார்கள் உதாரணம் கேரளத்தில் நடந்த மாப்ளா படுகொலைகள். அந்தகொடூர வன்முறையில் பல ஹிந்துக்கள் மிக கொடூரமாக கொல்லப்பட்டனர் கொஞ்ச காலம் ஆனவுடன், அந்த பயங்கரத்தை நில உடமையாளர்களான ஹிந்துக்களை எதிர்த்து நிலமற்ற முஸ்லீம்கள் செய்த கிளர்ச்சி என்று திரித்தார்கள் மார்க்சிஸ்டுகள். அதோடு மட்டுமல்ல அந்த படுகொலையில் ஈடுபட்ட கொலைகாரப்பாவிகளை விடுதலை வீரர்கள் என்று அறிவித்து அவர்களுக்கு தாமிரப்பட்டயம் வழங்கி கௌரவித்தது கேரளத்தை ஆண்ட மார்க்சிஸ்ட் அரசு.

காஷ்மீர் கொடூரத்தையும் அதேபோல கொஞ்ச காலம் கழித்து ஜக்மோகன் அங்கிருந்த ஹிந்துக்களுக்கெல்லாம் பணம் கொடுத்து வெளியே அனுப்பிவிட்டார் என்று கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் புளுக ஆரம்பித்தார்கள். 80களில் விபரம் அறிந்த வயதினர்களாக இருந்தவர்களுக்கெல்லாம் காஷ்மீரில் இருந்து ஹிந்துக்கள் எப்படி ஓடிவந்தார்கள் என்று தெரிந்திருக்கும் அங்கிருந்த ஹிந்துக்கோயில்களையெல்லாம் இடித்து தள்ளி, ஹிந்து நாய்களே வெளியேறுங்கள், இந்திய நாய்களே வெளியேறுங்கள் என்றெல்லாம் சுவர்களில் எழுதியிருந்தார்கள். அதுமட்டுமல்ல இதை விட மிக மோசமாக, '' பண்டிட்களே வெளியேறுங்கள், உங்கள் பெண்களை இங்கு விட்டுச்செல்லுங்கள் '' என்றும் எழுதியிருந்தார்கள். 36 ஹிந்துக்கோயில்கள் இடிக்கப்பட்டன. மசூதிகளில் இருந்து தொடர்ந்து வன்முறையைத்தூண்டும் அழைப்புகள் அனுப்பப்பட்டுக்கொண்டே இருந்தன, ஜக்மோகன் இந்தக்கொடுமைகளையெல்லாம் தனி நபராக எதிர்த்து போராடிக்கொண்டிருந்தார்.

அப்போது தான் நேரு குடும்பத்தின் வாரிசு என்பதை நிரூபிக்கும் வேலையில் இறங்கினார் ராஜீவ்காந்தி. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த மைனாரிட்டி அரசை மிரட்டி ஜக்மோகனை திரும்பப்பெறவைத்தார். கேவலம் இஸ்லாமியர்களின் ஓட்டுக்களுக்காக ஹிந்துக்களுக்கு எதிராக அவர் இழைத்த மாபெரும் அநீதி அது. பாரததேசத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட துரோகம் அது,  காஷ்மீரில் நடைபெற்ற இனப்படுகொலையை ஆதரித்த குற்றவாளியாகத்தான் ராஜீவை நாம் பார்க்கவேண்டும்..

இத்தனை கொடூரங்களும் நடந்து , அங்கிருந்த ஹிந்துக்களெல்லாம் முழுமையாக விரட்டியடிக்கப்பட்ட பிறகு வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக தலைவர்களின் கடும் முயற்சியாலும் , நம் ராணுவத்தின் தீவிரமான நடவடிக்கைகளாலும் அங்கு பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டது. ஆனால் , இன்றுவரை காஷ்மீர் பண்டிட்கள் தங்கள் சொந்த மண்ணுக்கு திரும்பவே முடியவில்லை.
 
தொகுப்பு: சரவண குமார்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :