Wednesday, September 14, 2016

Keerthivasan

காஷ்மீர் கற்று தரும் பாடம் - 05

காஷ்மீர் கற்றுத்தரும் பாடம்
- திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் திருப்பூரில் ஆற்றிய உரையின் தொகுப்பு.

காஷ்மீர் பிரச்சினையில் நாம் மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், இன்று காஷ்மீரில் நடப்பது நாளை தமிழகத்திலும் நடக்கலாம்.  அவர்கள் மிக தெளிவான திட்டத்துடன் தான் களமிறங்கியிருக்கிறார்கள். காஷ்மீரில் மட்டும் நாங்கள் வென்றுவிட்டோமென்றால், இந்தியாவில் இன்னும் மூன்று இஸ்லாமிய தேசங்களை உருவாக்கிக்காட்டுவோம் என்று சவால் விடுகிறார்கள். அவர்களின் இந்த லட்சியத்திற்கு துணைபோகக்கூடிய அமைப்புகள் நம் நாட்டிலேயே ஏராளமாக இருக்கின்றன.

2001 ம் ஆண்டு இந்தியா டுடே இதழில் ஒரு கட்டுரை வெளிவந்தது.  சிமி [ Student Islamic Movement of India ] எனப்படும் அமைப்பைப்பற்றிய கட்டுரை அது. இந்த சிமி ஜமாயத்தே இஸ்லாமி அமைப்பின் ஒரு கிளை. அந்த சிமி, இந்தியாவில் நான்கு இஸ்லாமிய தேசங்களை உருவாக்குவதை செயல்திட்டமாக கொண்டது . அவை கான்பூர், உஜ்ஜயினி, ஔரங்காபாத் மற்றும் மலப்புரம்.  இதில் மலப்புரம் [ கேரளா ] தென்னிந்தியாவிலும், மீதி மூன்று வட இந்தியாவிலும் உள்ளன.  இந்த நான்கு நகரங்களிலும் உள்ள தேசவிரோதிகளுடன் இணைந்து காஷ்மீரைப்போல பயங்கரவாதத்தை தூண்டி, இந்தியாவில் இருந்து இந்த பிரதேசங்களை துண்டித்து இஸ்லாமிய தேசங்களை உருவாக்குவதே அவர்களின் செயல்திட்டம்.

அவர்களைப்பொறுத்தவரை, அவர்களுக்கு அரசியல் பேதம் கிடையாது. இஸ்லாமியர் அல்லாத எல்லோருமே, அவர்கள் எந்தக்கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களின் எதிரிகள்தான்.  அவர்களின் கொலைப்பட்டியலில் அத்வானியும் இருக்கிறார்.  மார்க்சிஸ்ட் கட்சியின் . ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தும் [சீக்கியர் ] இருக்கிறார். சோனியாவும் [ கிறித்தவர் ] இருக்கிறார். கொடுமை என்னவென்றால் இவர்களை மார்க்சிஸ்டுகளும், காங்கிரசும் விழுந்து விழுந்து ஆதரிப்பதுதான் .  இஸ்லாமிய பயங்கரவாதிகளைப்பொறுத்தவரை அவர்கள் மிகத்தெளிவான, வெளிப்படையான செயல்திட்டங்களுடன் இருக்கிறார்கள். ,. அவர்கள் எதையும் மறைப்பதில்லை. காஷ்மீரை வென்றெடுத்தபின் இந்தியா முழுக்க நாங்கள் இதேபோன்ற இஸ்லாமிய தேசங்களை உருவாக்குவோம் என்கிறார்கள். அதற்கான தெளிவான் கருத்தியல், ரோட்மேப் அவர்களிடம் உள்ளது.

அவர்களின் திட்டம் இதுதான். முதலில் ஜமாயத் ஏ இஸ்லாமி அமைப்பின் கிளைகளான தௌஹீத்ஜமாத் போன்ற அமைப்புகள் இந்திய இஸ்லாமியர்களை அவர்களின் பாரம்பரியத்தில் இருந்து பிரித்து, அராபிய, வஹாபிய இஸ்லாத்துடன் இணைக்கும். அப்படி இணைந்த இஸ்லாமியர்களிடம் இந்திய, ஹிந்து வெறுப்பு விதைக்கப்படும். அவர்கள் பயங்கரவாத செயல்களுக்கு துணைபோக தயாராக இருப்பார்கள். பின்னர் அப்படிப்பட்ட இஸ்லாமியர்களின் உதவியுடன் தங்கள் லட்சியத்தை வென்றெடுப்பது. 

அவர்களின் கனவு இந்தியாவோடு முடிவதில்லை. உலகம் முழுக்க இஸ்லாமிய தேசமாக வேண்டும். அதனால்தான், தங்கள் போராட்டங்களில் ஐ. எஸ். ஐ. எஸ் அமைப்பின் கொடியை பயன்படுத்துகிறார்கள். [ இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் சென்று ஐ. எஸ். ஐ. எஸ்ஸில் இணைவது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. ]

சரி.  கஷ்மீர் பயங்கரவாதத்துக்கு இந்திய அறிவுஜீவிகள் கூறும் காரணம் என்ன? அங்கு வேலைவாய்ப்பு குறைவு என்பதுதான்.  [ அதற்கு காரணமே 370வது பிரிவுதான் என்பது வேறு விஷயம் ] உண்மை என்ன? காஷ்மீரை விட, ஜம்முவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகம். ஆனால் ஜம்முவில் உள்ள இளைஞர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவதில்லை. ஒப்பீட்டளவில் வேலையில்லாத்திண்டாட்டம் குறைவாக உள்ள காஷ்மீர் இளைஞர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

1988ல் ஸ்ரீநகரில் இருந்து வெளிவரும் செய்தித்தாள் ஒன்றில் காஷ்மீர் காவல்துறையின் உளவுப்பிரிவில் இருக்கும் சில முக்கிய அதிகாரிகள் ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார்கள். '' மதிப்பிற்குரிய ஜிஹாதிகளே.  நாங்கள் உங்களை காட்டிக்கொடுப்பதில்லை.  உங்களை காட்டிக்கொடுப்பதாக நீங்கள் எங்களை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். நாங்கள் என்றுமேஉங்களை காட்டிக்கொடுக்கமாட்டோம். ''. எதற்காக இந்த விளம்பரம்? பயங்கரவாதிகள் தங்களை கொன்றுவிடக்கூடாது என்பதற்காக. இதுதான் காஷ்மீரில் உள்ள நிலவரம்.

ஆக. இந்த பயங்கரவாதச்செயல்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.  பிரச்சினை என்னவென்றால், நாம் கொஞ்சகாலத்தில் இதையெல்லாம் மறந்துவிடுகிறோம்.  இன்றைக்கு என்ன நடக்கிறது? காஷ்மீரில் நம் ராணுவம் பதிலடி கொடுக்கிறது. அதுகூட மிதமான பதிலடிதான். பெல்லட் கன் தான் பயன்படுத்தப்படுகிறது. புல்லட் கன் பயன்படுத்தப்ப்டுவதில்லை.  ஆனால் இதற்கு எவ்வள்வு கடுமையான எதிர்வினைகள் நாடுமுழுக்க எழுகின்றன என்று பாருங்கள்.

நாம் [ பாஜகவினர். ] காஷ்மீரில் கொல்லப்பட்ட ஹிந்துக்களைப்பற்றி தமிழக ஹிந்துக்களுக்கு ஏதாவது விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறோமா? நாம் எங்காவது ஒரு கண்காட்சியை நடத்தியிருக்கிறோமா? இந்தந்த இடத்தில் ஹிந்துக்கள் இப்படியெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்று மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் ஏதாவது நிகழ்ச்சி நடத்தியிருக்கிறோமா? இல்லை.  இன்று இணையதளத்தில் சென்றுபார்த்தால் காஷ்மீர் பண்டிட்கள் இதைப்பற்றி மிகவும் வருத்தப்பட்டு எழுதும் பதிவுகளை காணலாம். காஷ்மீரில் ஹிந்துக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப்பற்றி நாம் ஏன் பிரச்சாரம் செய்வதில்லை. ? கேட்டால், இங்குள்ள இஸ்லாமிய சகோதர்களின் மனம் புண்படும் என்கிறோம்.

சில வருடங்களுக்கு முன் சென்னையில் ஃப்ராங்க்காய்ஸ் காத்தியே என்னும் பிரஞ்சு அறிஞர், ஔரங்கசீப், தன் ஆட்சிக்காலத்தில் வெளியிட்ட அறிக்கைகளை ஒரு கண்காட்சியாக நடத்தினார். அந்த கண்காட்சி துவங்கிய சிறிது நேரத்தில் அங்கு வந்த மனித நேய மக்கள் கட்சியைச்சேர்ந்த ஜவாஹிருல்லா, உடனடியாக அந்த கண்காட்சியை மூடவேண்டும் என்று போராட்டம் நடத்தினார். அதையடுத்து அந்த கண்காட்சி மூடப்பட்டது. இத்தனைக்கும் அந்த கண்காட்சியில் ஔரங்கசீப், தன் ஆட்சிக்காலத்தில் வெளியிட்ட அறிக்கைகள் [ எந்தெந்த ஹிந்து கோயில்களை இடிக்கவேண்டும். எப்படி மதமாற்றம் செய்யவேண்டும், மதம் மாற மறுப்பவர்களை எப்படி தண்டிக்கவேண்டும், ஜிசியா வரி எப்படி விதிக்கவேண்டும் போன்ற அறிவிப்புகள் ] தான் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டன . வேறு எதுவும் புதிதாக சேர்க்கப்படவில்லை.  இருப்பினும் அந்த கண்காட்சி தடை செய்யப்பட்டது . காரணம் மத உணர்வுகள் புண்படுமாம்.

ஆனால், இன்று என்ன நடக்கிறது? நம் ராணுவத்துக்கு எதிராக எப்படிப்பட்ட அவதூறான பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன? வேண்டுமென்றே ஐந்து வயது குழந்தைகளையெல்லாம் கொண்டுபோய் போராட்ட களத்தில் நிறுத்தி, பின்பு அந்த குழந்தைகள் காயமடைந்துவிட்டதாக பிரச்சாரம் செய்கிறார்கள்.  நாம் கேட்கவேண்டிய கேள்வியெல்லாம், ஐந்து வயது குழந்தைக்கு போராட்டம் நடக்கும் இடத்தில் என்ன வேலை ? என்பதுதான்.  இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நாம் ராணுவத்தின் மீது கல் எறிபவர்கள் மீது நடத்தப்படும் பதில் தாக்குதலில் காயமடைபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது நம் ராணுவ மருத்துவமணைகளில்தான்.  இதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள் . ராணுவ மருத்துவமணையில்தான் சிறப்பான சிகிச்சை அளிப்படுகிறது என்று. தன்னை தாக்குபவர்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளித்து காப்பாற்றிக்கொண்டிருக்கிறது நம் ராணுவம். 

தொகுப்பு: சரவண குமார்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :