Wednesday, September 14, 2016

Keerthivasan

காஷ்மீர் கற்று தரும் பாடம் - 06


காஷ்மீர் கற்றுத்தரும் பாடம்
- திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் திருப்பூரில் ஆற்றிய உரையின் தொகுப்பு.


இந்த சிமி அமைப்பின் பின்னால் உள்ள அரசியல் பிரபலம் யார் தெரியுமா? வழக்கம்போல காங்கிரஸ்காரர்தான்.  காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சல்மான் குர்ஷித் தான் அவர். சிமி அமைப்பு தடை செய்யப்பட்டபோது, அதை நீக்கவேண்டும் என்று வாதாடியவர் சல்மான் குர்ஷித்.  பஞ்சாபில் தீவிரவாதத்தை ஒழித்த போலீஸ் உயர் அதிகாரி திரு. கே. பி. எஸ். கில் அவர்கள் ஒருமுறை, இந்தியாவில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உள்ள பெரிய பிரச்சினை அரசியல்வாதிகளின் சந்தர்ப்ப வாதம்தான் என்றார்.

காஷ்மீரில் பயங்கரவாதம் வேரூன்றியதற்கு மிக முக்கிய காரணம் இந்த போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகள்தான். இவர்கள்தான் காஷ்மீரில் ஜமாயத் ஏ இஸ்லாமி அமைப்பிற்கு வாசலை திறந்துவிட்டவர்கள். அதன்பின்பயங்கரவாதம் பரவுவதற்கான மனங்களை உருவாக்கியது ஜமாயத் எ இஸ்லாமி.

2006 ம் ஆண்டு சோனியா தலைமையிலான மன்மோகன்சிங் அரசு ஆட்சியில் இருந்தபோது காஷ்மீரில் 35 ஹிந்துக்கள் ஒரே நாளில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள்.  எங்கோ எவனோ படம் எடுத்ததற்கு இங்கே சென்னையை ஸ்தம்பிக்க வைத்தார்கள் இஸ்லாமியர்கள்.  நம் தேசத்தில் இத்தனை ஹிந்துக்கள் கொல்லப்பட்டபோது ஏன் ஹிந்துக்களிடம் எந்த எதிர்வினையும் இல்லை?

அங்கேதான் இருக்கிறது நம் மதச்சார்பற்ற ஊடகங்களின் நரித்தனம்.  நாம் முதலில் குறிப்பிட்டதைப்போல காஷ்மீரி பண்டிட்களை அகதிகள் என்று குறிப்பிடாமல் புலம்பெயர்ந்தவர்கள் என்று குறிப்பிடுவது. பயங்கரவாதிகள் [ டெரரிஸ்ட்ஸ் ] என்று குறிப்பிடாமல், மிலிட்டன்ட்ஸ் என்று குறிப்பிடுவது. ஹிந்துக்கள் கொல்லப்பட்டால், தீவிரவாதிகள் ஹிந்துக்களை தூண்டிவிடப்பார்க்கிறார்கள் ,ஆகவே ஹிந்துக்கள் உனர்ச்சி வசப்படாமல் அமைதிகாக்க வேண்டும் என்று தலையங்கம் எழுதுவது போன்ற அயோக்கியத்தனங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன நம் ஊடகங்கள். 

2005 ம் ஆண்டு சுதந்திரதினத்தன்று காஷ்மீரில் ஐந்து ஹிந்துக்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதைப்பற்றி வெளியிட்ட வெளிநாட்டு ஊடகங்கள் அனைத்தும் ஐந்து ஹிந்துக்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர் என்று செய்திவெளியிட்டனர். ஆனால் தி ஹிந்து எப்படி செய்தி வெளியிட்டது தெரியுமா? கடந்த நாற்பத்தெட்டு மணி நேரத்தில் காஷ்மீரில் ஏழு குடிமக்கள் கொல்லப்பட்டனர் என்று செய்தி வெளியிட்டது. ஐந்து எப்படி ஏழானது? அதற்கும் காரணம் உண்டு. பொதுவாக செய்தித்தாள்கள் கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் என்றுதான் செய்திவெளியிடும்.  அதற்கு முதல் நாள் பி. டி. சி என்ற அமைப்பைச்சேர்ந்த இரண்டு இஸ்லாமியர்களையும்பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றிருந்தனர். அந்த சம்பவத்தையும், ஐந்து ஹிந்துக்கள் கொல்லப்பட்டதையும் ஒன்றாக சேர்த்து ஏழு குடிமக்கள் கொல்லப்பட்டனர் என்று செய்தி வெளியிட்டது. ஆக, கொல்லப்பட்டவர்கள் ஹிந்துக்கள் .  கொன்றவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்பதை கவனமாக மறைத்துவிட்டார்கள்.

இந்த செய்தியை படிக்கும் எவருக்கும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றுதான் தோன்றும். ஒரு ஹிந்து குடும்பம் கொல்லப்பட்டது என்று செய்தி வெளியானால், நமக்கு ஒரு கோபமும், ஆத்திரமும் தோன்றும்.  அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள் இவர்கள். ஆனால் இதே ஊடகங்கள்தான் இப்போது நம் ராணுவம் காஷ்மீரில் வெறியாட்டம் ஆடுவதாக அனுதினமும் பிரச்சாரம் செய்கிறார்கள். காரணம் அந்நிய தேசத்தில் இருந்து இவர்களுக்கு வந்து குவியும் பணம்தான். ஆக, நம் ஊடகங்கள் நமக்கு எதிராகவே இருக்கிறார்கள். நம் அறிவுஜீவிகளும் நமக்கு எதிராக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நாம் என்ன செய்வது? காஷ்மீரில் நடக்கும் கொடூரங்களையும், ஹிந்துக்களுக்கு நடக்கும் கொடுமைகளையும் நம் மக்களிடம் நாம் எடுத்துச்செல்லவேண்டும்.  கண்காட்சிகள் வாயிலாகவும், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்கங்கள் மூலமாகவும் இந்த உண்மையை மக்களுக்கு எடுத்துச்சொல்லவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

ஹிந்து போன்ற பத்திரிக்கைகளை நாம் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். . தி ஹிந்து என்று பெயர் இருப்பதால் மட்டும் அது நமக்கு ஆதரவான பத்திரிக்கை என்று நினைத்துவிடக்கூடாது. உண்மையில் அது Anti - Hindu. தேச நலனுக்கு எதிராக எந்த பத்திரிக்கை செயல்பட்டாலும் சரி, அவர்களை நாம் புறக்கணிக்கவேண்டும். சென்னையில், திருவல்லிக்கேணியிலும், மயிலாப்பூரிலும் வசிக்கும் மக்கள், ஒரே ஒரு மாதம் மட்டும் தேச நலனுக்காக, தேசவிரோத செய்திகளை வெளியிடும் தி ஹிந்து பத்திரிக்கையை நாங்கள் வாங்கமாட்டோம் என்று புறக்கணித்தால் போதும். அடுத்த மாதத்தில் இருந்து, அது தேச பக்தியுள்ள நாளிதழாக மாறிவிடும்.

இனி, காஷ்மீர் விவகாரத்தில் இருந்து நாம் பெறவேண்டிய எச்சரிக்கை என்ன?

1920களில் லாகூரில் வசித்து வந்த ஒரு ஹிந்து குடும்பத்தை எடுத்துக்கொள்வோம்.  அப்போது அவர்களிடம் யாராவது சென்று, இன்னும் இருபத்தைந்து வருடங்களில் நீங்கள் வசிக்கும் லாகூர் இஸ்லாமிய நாட்டின் ஒரு பகுதியாகிவிடும்.  நீங்கள் இங்கிருந்து விரட்டப்பட்டு ஹிந்துக்கள் வசிக்கும் பகுதிக்கு அகதிகளாக அடித்து விரட்டப்படுவீர்கள் என்று சொல்லியிருந்தால் அவர்கள் நம்பியிருப்பார்களா? நிச்சயம் நம்பியிருக்க மாட்டார்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. இங்குள்ள இஸ்லாமியர்கள் எல்லாம் நல்லவர்கள். எங்கள் நண்பர்கள். . ,. அவர்கள் அப்படியெல்லாம் நடந்துகொள்ளமாட்டார்கள் என்று சொல்லியிருப்பார்கள்.

1960களில் கூட, காஷ்மீரில் வசித்து வந்த ஒரு ஹிந்து பண்டிட் குடும்பத்தினரிடம் போய், இன்னும் இருபது வருடங்களில் நீங்கள் இங்கிருந்து இஸ்லாமியர்களால் விரட்டப்படுவீர்கள் என்று சொல்லியிருந்தால் அவர்களும் நம்பியிருக்கமாட்டார்கள்.  நாங்களும் இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பிகளாக பழகிக்கொண்டிருக்கிறோம். எங்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தாதீர்கள் என்று சொல்லியிருப்பார்கள்.

ஆனால் நடந்தது என்ன?

இன்று தமிழகத்தில் வசிக்கும் எந்த ஹிந்துவிடமும் போய், இன்னும் கொஞ்ச நாளில் நாம் இங்கிருந்து இஸ்லாமியர்களால் விரட்டப்படுவோம் என்று சொல்லிப்பாருங்கள்.  யாரும் ஏற்கமாட்டார்கள்.  நாங்களும் இஸ்லாமியர்களும் மாமன் மச்சானாக பழகி வருகிறோம் என்பார்கள்.  இதே மாதிரி சொல்லிக்கொண்டிருந்த லாகூர் ஹிந்துக்களும், காஷ்மீர் பண்டிட்களும் பின்னாளில் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  நமக்கும் இஸ்லாமியர்களோடு மாமன் மச்சானாக பழகவேண்டும் என்று ஆசைதான். அது நல்லதுதான். ஆனால் உள்ளே ஒரு விஷ ஊற்று ஊறிக்கொண்டிருக்கிறது. அதுதான் அராபிய, வஹாபிய பயங்கரவாத இஸ்லாம்.  ஒட்டுக்காக, போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகள் இந்த பாம்புக்கு பாலூற்றி வளர்க்கிறார்கள்.  அது நம்மை, நம் சந்ததியினரை வருங்காலத்தில் அகதிகளாக அலையவைத்துவிடும். காஷ்மீர் நமக்கு கற்றுத்தரும் பாடம் இதுதான்.

தொகுப்பு: சரவண குமார்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :