Wednesday, September 14, 2016

Keerthivasan

காஷ்மீர் கற்று தரும் பாடம் - 07 - End

காஷ்மீர் கற்றுத்தரும் பாடம்
- திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் திருப்பூரில் ஆற்றிய உரையின் தொகுப்பு.

சரி. காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுதான் என்ன?

முதலில் நம்மில் பெரும்பாலானோர் நினைத்துக்கொண்டிருப்பது போல, காஷ்மீர் முழுக்க பிரிவினைவாதம் எழுவதில்லை. சொல்லப்போனால் காஷ்மீரின் ஒரு பகுதியில் மட்டுமே இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். 

உண்மையில், காஷ்மீர் என்று நாம் அழைக்கும் பிரதேசம் மூன்று பிரிவுகளைக்கொண்டது. அவை ஜம்மு, லடாக் மற்றும் காஷ்மீர். ஜம்முவில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். லடாக்கில் பௌத்தர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இஸ்லாமியர்கள் காஷ்மீர் பகுதியில் மட்டுமே பெரும்பான்மையாக உள்ளனர். இன்னும் சொல்லப்போனால், காஷ்மீர் பகுதியிலும், மூன்று மாவட்டங்களில் மட்டுமே பிரிவினைவாத கோரிக்கை வலுவாக உள்ளது.  ஆனால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஒட்டுமொத்த காஷ்மீரையும் பாகிஸ்தானுடன் இணைக்கும் நோக்கத்தில் செயல்படுகின்றனர்.

காஷ்மீர் பிரச்சினை பற்றி டாக்டர். அம்பேத்கர் அவர்களிடம் கேட்கப்பட்டது.  அதற்கு அவர் காஷ்மீரை விடுங்கள் . முதலில் ஜம்முவிலும், லடாக்கிலும் உள்ள '' நம் மக்களை '' நாம் காப்பாற்ற வேண்டும் என்றார். அவர் நம் மக்கள் என்று யாரை குறிப்பிடுகிறார் என்று உங்களுக்கு புரிகிறதல்லவா?

ஜம்முவிலும் லடாக்கிலும் உள்ள வளங்களை காஷ்மீர் ரத்தத்தை உறிஞ்சுவது போல உறிஞ்சிக்கொண்டிருக்கிறது. 2001ல் ஆர். எஸ். எஸ் அமைப்பில், மிக முக்கியமான ஒரு தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார்கள். அது என்னவென்றால் காஷ்மீரை மூன்றாக பிரிக்கவேண்டும். ஜம்மு, லடாக் மற்றும் காஷ்மீர். இந்த மூன்றையும் தனித்தனி மாநிலங்களாக பிரிக்கவேண்டும். இன்றைக்கும் தேசம் முழுக்க இருக்கும் தேசபக்தர்கள் அனைவரின் கோரிக்கையும் இதுவாகத்தான் இருக்கிறது.

ஏனென்றால் ஜம்மு மின்சாரத்தை, அதிகமாக உற்பத்தி செய்கிறது. . சுற்றுலா மூலம் பெரும் வருமானத்தை ஈட்டுகிறது.  ஜம்மு தனியாக பிரிந்துவிட்டால் காஷ்மீர் வருமானமில்லாமல் திண்டாட நேரிடும். அப்பொதுதான் காஷ்மீரில் உள்ள மடையர்களுக்கு புரிய ஆரம்பிக்கும். இன்று என்ன நடக்கிறது? ஜம்முவில் வரும் வருமானத்தை காஷ்மீர் உறிஞ்சிக்கொழுத்து, நம் மீது கல்லெறிந்துகொண்டிருக்கிறது. [எல்லா காஷ்மீரிகளும் அல்ல. அங்குள்ள பிரிவினைவாதிகள்] இன்று ஆர். எஸ். எஸ் சொல்லும் இந்த தீர்வைத்தான் அன்று டாக்டர் அம்பேத்கர் சொன்னார்.

இந்தியாவுக்கு வந்த இட்சாக் ஷமீர் என்னும் இஸ்ரேலிய அரசியல்வாதி காஷ்மீரை நீங்கள் காப்பாற்றவேண்டுமானால், அங்குள்ள மக்கள் தொகையின் இயற்கையை நீங்கள் மாற்றியமைக்க வேண்டும் என்றார். இத்தனைக்கும் அவர் அங்குள்ள ஒரு மிதவாத அமைப்பைச்சேர்ந்தவர்.

காஷ்மீரில் ஹிந்துக்கள் பெருமளவில் குடியேற்றம் செய்யப்படவேண்டும். அவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யவேண்டும். அது எந்த அரசாக இருந்தாலும் சரி. ஹிந்துக்களின் பாதுகாப்பு எந்த அளவுக்கு உறுதி செய்யப்படுகிறதோ, அதைப்பொறுத்துத்தான் காஷ்மீர் இந்தியாவுடன் இருப்பது உறுதிசெய்யப்படும்.  இதை செய்யும் பட்சத்தில் காஷ்மீர் முழுமையாக நம்மோடு இணையும்.

இந்தியாவுடன் உள்ள காஷ்மீர் முழுமையாக, விரைவாக முன்னேறும் பட்சத்தில், பாக். ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் மக்களிடமும் அது மனமாற்றத்தை ஏற்படுத்தும். அவர்களும் நம்மோடு இணையும் வாய்ப்பு ஏற்படும். இதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவேண்டும்.

அதே சமயம், 1988ல் காஷ்மீரில் என்ன நடந்ததோ, அதுதான் தற்போது தமிழகத்திலும் நடந்துகொண்டிருக்கிறது. . அது எதிர்காலத்தில் நமக்கு ஏற்படுத்தக்கூடிய அபாயங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.  இதுதான் காஷ்மீர் நமக்கு கற்றுத்தரும் பாடம்.

நன்றி!
வணக்கம்!

தொகுப்பு: சரவண குமார்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :