Tuesday, August 22, 2017

Keerthivasan

தூங்கும் மாநில அரசு... பழியோ மத்திய அரசுக்கு

நினைத்தேன் பகிர்கிறேன்...

ஜனவரி 13, 2016ல் பொங்கல் திருநாளில் பிரதமரால் அறிவிக்கப்பட்ட திட்டம்தான் பிரதான் மந்திரி பாசல் பீமா யோஜனா... இந்த திட்டத்தின் மூலம் யாரையும் நம்பி நிற்காமல் தங்களது இழப்புகளை விவசாயிகாலே இன்சூரன்ஸ் மூலம் பெற முடியும் என்பது இதன் பலன்...

ஆந்திரா, உத்ராகன்ட், உத்திரபிரதேசம் என்று வரிசையாக இதில் இணைந்து வரும் மாநிலங்களுக்கு மத்தியில் இதன் பலன் என்ன என்று தெரிந்தும் கும்பகர்ண தூக்கத்தில் இருந்தது நமது மாநில அரசு.

இது யார் குற்றம் என்று கேட்டால் நீங்கள் சொல்ல வேண்டியதுதானே என்கிறார்கள் போராளிகள்... ஒட்டு போட்டு ஓ--து சாப்பிட ஒருவனை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள் ஆனால் எங்களை நிராகரித்தாலும் உங்கள் காலில் சேவகம் செய்ய வேண்டுமா என்று கேட்க தோன்றுகிறது.

இந்த திட்டம் என்ன திரைமறைவிலா வெளியிடப்பட்டது? அன்று இந்த திட்டத்தை பல போராளிகள் அக்குவேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்தீர்களே? ஏன் விவசாயிகளிடம் நீங்கள் கொண்டு செல்லவில்லை? போராட மட்டுமா உங்களை பெத்து போட்டு வச்சிருக்காங்க?

கர்நாடகாவின் விளைநிலம் 130,000 சதுர கிலோ மீட்டர்கள். தமிழ்நாட்டில் 56,000 சதுர கிலோமீட்டர்கள்... நம்மை விடவும் இந்த முறை கர்நாடகா வரட்சியில் இருக்கிறது. அங்கு இருக்கும் தமிழர்களை கேட்டால் அங்கு இருக்கும் தண்ணீர் பிரச்சனை பற்றி தெரிந்துக் கொள்ளலாம் நமக்கு முன்னமே அது வறட்சி மாநிலம் என்றும் அறிவிக்கபட்டது. ஆனால் அவர்கள் கேட்டது 4000 கோடிகள். நாம கெட்டதோ 40,000 கோடிகள்....

அவர்களுக்கு மத்திய அரசு வழங்கியதோ 1,700 கோடிகள் ஆனால் நமக்கு வந்ததோ 2300 கோடிகள் இதில் வரதா புயல் இழப்பு என்று கழித்தாலும் கர்நாடகாவைவிட நமக்கு வந்தது அதிகமே...

எதையும் அரசியல் கண்ணாடி கொண்டு பார்ப்பதால் வரும் வினை இது. தந்தி டிவியில் நேற்று நடந்த கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியை அனைத்து தமிழர்களும் பார்க்க வேண்டும் எப்பேர்பட்ட முட்டாள்களை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம் என்று தெரிந்துக்கொள்ள வேண்டும்...

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :