Tuesday, August 22, 2017

Keerthivasan

இராமர் கோவில் கட்ட முஸ்லிம் அமைப்பு ஒப்புதல்?

நினைத்தேன் பகிர்கிறேன்...




இந்த செய்தியை படிக்கும் பொழுது கொஞ்சம் நெருடல். இந்த இயற்கையையும் சமூகத்தில் அர்பணிப்பு செய்போரையும் கடவுள் ஸ்தானத்தில் வணங்குவது ஹிந்துக்களின் மரபு. அந்த மரபில் பல கோடி மக்கள் வணங்கும் ராமரின் பிறந்த பூமியை மீட்டெடுக்க பெரும்பான்மையாக இருந்தும் கெஞ்சி கூத்தாடும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளது வேதனை.

இந்த செய்தியின் மூலம் முஸ்லிம்கள் அமைதி விரும்பிகளாக சித்தரிக்கப்படுவதை நான் எதிர்க்கிறேன். உண்மையில் எங்கும் இருக்கும் இறைவனை எங்கு இருந்தும் தொழுவலாம் என்று இருக்கும் இஸ்லாமிய வழிமுறையில் இங்கு எங்களுக்கு மசூதி வந்தே தீர வேண்டும் என்று கேட்டதே தவறு. இப்பொழுது உபியில் பிஜேபி வந்ததும் பம்முவதும் பணிவதும் அமைதி விரும்பிக்கான அர்த்தமில்லை.

இந்துக்களின் பெரிய பிரச்சனையே தங்களிடம் அடைக்கலம் புகுந்தோரை காப்பதுதான். உலகில் கிட்டதட்ட எல்லா நாடுகளிலும் பிரச்சனைக்குள்ளான யூதர்களை அரவணைத்த ஒரே நாடு பாரதமே. இந்த சகிப்புத்தன்மையே நமது அடையாளம் இன்றோ... இதே சகிப்புத்தன்மை நம்மை அடிமைகளாக மாற்றிவிட்டது.

சுதந்திர இந்தியாவில் யார் ஆள வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் கொண்ட ஹிந்து சமூதாயம் போலி மதசார்பின்மை பின்னால் மாட்டிக் கொண்டு தனது சுயத்தை இழந்து கிடக்கிறது.

சிறுபான்மையான இஸ்லாமியர்கள் தங்களுக்கு என்ன தேவை என்பதை அடித்து பிடுங்கும் பொழுது நமது தேவைகளையும் கலாச்சாரத்தை காப்பாற்ற குறைந்தபட்சம் குரல் கொடுக்க கூட ஈன ஹிந்துக்கள் தயங்குவது நமது போதாத காலம்.

இன்று கூட அங்கு ராமர் கோவில் இருந்ததா உனக்கு தெரியுமா என நெற்றியில் திருநீறுடன் உலாவரும் ஒருவர் கேட்டிருந்தார். அவருக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது? நீ சோறு தின்கிறாயா இல்லை.... என்று கேட்க தோன்றினாலும் அமைதியாக வந்துவிட்டேன்....

ஒன்றுப்படாமல் நமக்கு எந்த எதிர்காலம் இல்லை. நமது அமைதி நமக்கு அல்ல நமது அடுத்த சந்ததியினரை மீளா துயரத்தில் ஆழ்த்தும் என்பதை நாம் உணர வேண்டும்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :