Tuesday, August 22, 2017

Keerthivasan

பிஜேபியை எதிர்த்தால் தேசவிரோதியா?

நினைத்தேன் பகிர்கிறேன்...



பிஜேபியை எதிர்த்தால் தேச விரோதியா? என சிலர் கொதிக்க ஆரம்பித்திருப்பது ஒரு நல்ல சூழல்...

அதற்கு முன் தேச விரோதி என சொன்னால் வருத்தம் சிலருக்கும் கோவம் சிலருக்கும் வருவது வரவேற்க கூடிய மாற்றம் என்பதால் அப்படி ஏன் சொல்லப்படுகிறது என்பதை விளக்க இதை ஒரு சந்தர்ப்பமாக நான் எடுத்துக் கொள்கிறேன்.

அப்படி சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் அப்படி சொல்பவர்களின் லாஜிக்கை நான் ஏற்கிறேன்...

தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் தேசியவாதம் பேசும் ஒரு கட்சியை நீங்கள் நினைவுபடுத்தி சொல்லுங்கள். முடியாது என்பதால் தேசியவாதம் பேசும் ஒரே கட்சி பிஜேபி என்பதை முதலில் நியாபகத்தில் வைத்துக் கொள்ளவோம்.

இப்பொழுது விளக்கத்திற்கு வருவோம்...
திராவிட கட்சிகளின் முக்கிய பிரதான கொள்கை திராவிடம். இந்த கட்சிகளை எதிர்ப்பதும் அதன் கொள்கைகளையும் சேர்த்து எதிர்ப்பதுதான் என்பதால் எங்களை ANTI-DRAVIDIAN என்றுதான் அழைப்பார்கள் அழைத்தார்கள்.

பிஜேபி கட்சியின் பிரதான அடிப்படை கொள்கை என்பது ஒன்றுபட்ட பாரதம் என்று சொல்லும் தேசியவாதமே அதை எதிர்ப்பதால் இயற்கையாகவே நீங்கள் ANTI NATIONALIST என்றுதான் அறியப்படுவிர்கள்.

இப்படி சொல்லிவிட்டதால் நீங்கள் இந்தியாவிற்கே எதிரானவர் என்பது அர்த்தமில்லை. எப்படி? அதையும் பார்ப்போம்...

உங்கள் வீட்டை நீங்கள் அதிகம் நேசப்பிர்கள் அதில் மாற்றே இல்லை. உங்கள் வாழ்நாள் முழுவதும் அங்கு ஒற்றுமையும் அமைதியையும் வளத்தையும் கொடுக்க பாடுபவீர்கள் அதே சமையம் புதியதாக வந்த ஒரு உறவு அல்லது மனம் பிழரிய ஒரு உறவு அந்த அமைதியான ஒற்றுமையான வளமான குடும்பத்தை சிதைப்பதை நீங்கள் அறிந்தும் அதை கண்டுக்காமல் இருப்பதும் எதிர்க்காமல் இருப்பதும் அந்த வீட்டிற்கு எவ்வளவு கேடு வரும் என்று சிந்தித்து பாருங்கள்...

நீங்கள் அந்த பிரிவினை ஏற்படுத்தும் உறவை ஆதரிக்காவிட்டாலும் கண்டுக்காமல் இருப்பது அந்த வீட்டிற்கு எதிரான செயலில் ஈடுபட்டதாகவே கருதப்படும்...

இதுவே லாஜிக்
இப்படி சொல்வதால் நீங்கள் இந்தியாவை வஞ்சிப்பதாக அர்த்தமில்லை ஆனால், வஞ்சிப்பவரை கண்டிக்காமல் இருப்பதாக அர்த்தம் கொள்ளலாம்...

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :