Tuesday, August 22, 2017

Keerthivasan

காம்ரெட்களின் பொற்கால கனவுகள் மெல்ல சாகும்!

நினைத்தேன் பகிர்கிறேன்...


கார்ல் மார்க்ஸிம் ஏங்கல்ஸிம் எழுதிய மூலதனத்தையே மூலதனமாக கரு பாரதத்தில் கூப்பாடு போடும் காம்ரேட்ஸ்களுக்கு எது கொள்கை என்பதை யாராவது விளக்கினால் நல்லது...

நீர்வளம் காக்கப்பட வேண்டும் என்று கொடிபிடிக்கும் அதே சமயத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அரசு முடிவு செய்தால் அதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இதற்கான மாற்று என்ன என்று சொன்னால் தேவலை.

ஒருபக்கம் மதுஒழிப்பு என்று பேசிவிட்டு அதே டாஸ்மாக் ஊழியர்களுக்கான சங்கங்களை ஏற்படுத்தி காசு பார்ப்பதும் இதே காம்ரேட்ஸ்தான் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. கேட்டால் உழைக்கும் வர்க்கத்திற்கான போராட்டம் என்று காலரை தூக்கி வியாக்கியானம் சொல்கிறார்கள்.

ஒருபக்கம் விவசாயிகள் பிரச்சனையை கையில் எடுக்கிறார்கள் மறுபக்கம் விவசாய நிலங்களை அபகரித்த நிறுவனங்களில் தொழிற்சங்கங்களை நிறுவுகிறார்கள்.

இவர்களுக்கு தேவையெல்லாம் ஒன்றுதான் எந்த நாட்டில் இவர்கள் இருந்தாலும் அங்கு ஒரு அசாதாரண நிலையை ஏற்படுத்தி தங்களின் இருப்பை உறுதி செய்துக் கொள்வதுதான். ஸ்டாலினோ அல்லது மாவோவோ அல்லது லெனினோ எப்போதும் ஜனநாயக முறையை ஆதரித்ததே இல்லை என்பதுதான் வரலாறு. அதனால் தான் அரசுக்கு எதிராக (அது எந்த அரசாக இருந்தாலும்) மக்களை திசை திருப்பிக் கொண்டே இருக்கிறார்கள். இதுவரை காம்ரெட்கள் ஒரு பிரச்சனையை தீர்த்ததாக சரித்திரம் இல்லை என்பதே வரலாறு அத்தனையும் படுதோல்வி பஞ்சம் படுகொலையில்தான் இவர்கள் ஆட்சி அமைந்திருந்தது...
பாரத்தில் ஏதோ ஒன்று இரண்டு மாநிலங்கள் இவர்களை பிடித்து தொங்கிக் கொண்டிருந்த காலமும் மெள்ள வெறும் வரலாறாக மாறிக் கொண்டிருக்கீறது...

காம்ரெட்களின் பொற்கால கனவுகள் மெல்ல சாகும்!

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :