Tuesday, December 30, 2014

Keerthivasan

நேதாஜியும் நேருவின் துரோகமும் - 2


ஃபைஸாபாதில் அந்த மர்ம சாதுவிடம் இருந்த 23 பெட்டிகளில் இருந்தவற்றில் முக்கியமானவை : 1. ஒரு ஜோடி ஜெர்மன் பைனாகுலர்கள் 2. ஒரு கரோனா டைப் ரைட்டர் 3. ஒரு பைப் ( புகையிலை பொருத்தி புகைக்கும் பைப் ) 4. ஒரு ரோலக்ஸ் வாட்ச் ( நேதாஜி எப்போதும் அணிவது ) 5. ஒரு சிறிய பெட்டிக்குள் ஐந்து பற்கள் 6. ஒரு ஜோடி சில்வர் ரிம்முடன் கூடிய வட்டவடிவகண்கண்ணாடிகள் 7. Gulliver’s Travels, புத்தகம் 8. P.G. Wodehouse’s The Inimitable Jeeves, புத்தகம் 9. மிக அரிதாகக் கிடைக்கின்ற International Military Tribunal for the Far East,  10. The History of the Freedom Movement in India,  11. The Last Days of the Raj,  12. Moscow’s Shadow Over West Bengal  13. Solzhenitsyn’s The Gulag Archipelago.

7 முதல் 13 வரையிலான புத்தகங்கள் மற்றும் ஜர்னல்கள் ஒரு முகம் தெரியாத சாதுவிடம் இருக்கக்கூடியதல்ல. மிக ஆழ்ந்து வாசிக்கின்ற ஒரு தேசபக்தரிடம் இருக்கவேண்டியவை. நேதாஜி கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் என்பதையும் இங்கே நினைவு கூரவேண்டும்.

மேலும் தொடர்வோமா..?

ஃபைஸாபாத்தில் அந்த சாதுவின் உடைமைகளைப் பரிசோதனை செய்ய எம் கே முகர்ஜி 2001 இல் சென்றார். கமிட்டி அமைக்கப்பட்டு இரண்டாண்டுகள் கழிந்து அதற்கும் ஐந்தாண்டுகள் முன்பே வெளீயான சாதுவின் உடைமைகளைப் பரிசோதிக்க காலதாமதம் ஏன் என்பது உங்களைப் போலவே எனக்கும் தோன்றுகிறதுதான். ஆனால் ஓர் அரசாங்கம் அமைக்கும் கமிஷன் அந்த அரசு சொன்னபடிதான் நடக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு நாம் சிறுகுழந்தைகள் அல்ல தானே..?

முகர்ஜி சென்றபோது அவருடன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிருபர் அனுஜ் தர் என்பவரும் சென்றிருந்தார். அவரது கூற்றின்படி அங்கே பெட்டிகளில் இருந்த சில புத்தகத்தில் மார்ஜின் பகுதியில் எழுதப்பட்டிருந்த சில வரிகள் ( குறிப்பெடுத்தவை போன்றவை ) நிச்சயமாக சுபாஷ் சந்திர போஸினுடையதுதான் என்பதை அந்த நிருபர் உறுதி செய்துகொண்டதாகக் கூறுகிறார். கையெழுத்து நிபுணர் ஒருவரிடம் கொடுத்து பரிசோதிக்கப்பட்டபோது அந்த நிபுணர் அது நிச்சயமாக நேதாஜியினுடையதுதான் என்று கூறியும் முன்னரே முடிவு செய்திருந்தபடி முகர்ஜி கமிஷனும் அதைத் தொடர்ந்து அரசாங்கமும் அந்த நிபுனரின் கூற்றை அதிரடியாக மறுத்துவிட்டது.2006 ஆம் ஆண்டில் முகர்ஜி கமிஷன் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை நேதாஜியின் மறைவைப்பற்றிய மர்மங்களை அதிகரிக்கவைத்தது என்பதுதான் அந்த அறிக்கையின் முக்கிய அம்சம்.

ஆம்.

அந்த முகர்ஜி அறிக்கையின்படி

# நேதாஜி முன்பு ஜப்பான் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின் படி இறந்தது தவறான செய்தி.# டோக்கியோவில் இருக்கும் ஜப்பானிய கோயிலில் இருந்து கிடைத்த சாம்பல் நேதாஜியினுடையது அல்ல.

# ஃபைஸாபாதில் இறந்த சாதுதான் நேதாஜியா என்பதில் முழுமையான முடிவுக்கு வரும்படியான சாத்தியக்கூறுகள் கிடையாது.

( அதே நேரம் 2010 ஆம் ஆண்டில் ஒரு தொலைக்காட்சி நேர்முகத்தில் அதே முகர்ஜி ஃபைஸாபாதில் இறந்த சாதுவும் நேதாஜியும் ஒருவர் தான் என நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார் என்பது ஆச்சரியமான அதே சமயம் சிந்திக்கத்தக்க ஓர் அம்சம் )

முடிவாக எம் கே முகர்ஜியின் அந்த கமிட்டி அறிக்கையை நம்பகத்தன்மை வாய்ந்தது என்று அப்போதைய ( 2006 ) சோனியா அரசு மறுத்துவிட்டது. ஆக 7 வருட பலகோடிச் செலவில் உருவான அந்த அறிக்கையும் கோயிந்தா..

அப்படி ஏன் தான் நேதாஜி விடயத்தில் மர்மத்தை வெளிப்படுத்த இந்திய அரசு அதாவது அப்போதைய காங்கிர அரசுகள் தயக்கம் காட்டியது என்று கேள்வி எழுகிறதல்லவா..?

இதற்கு விடை நேருவின் காலத்தில் இருந்தே வெட்ட வெளிச்சம்தான். நேருவுக்கும் நேதாஜிக்கும் கொஞ்சம் கூட ஒத்துப் போகாது. இருவரும் காங்கிரஸுக்குள் டாம் அண்ட் ஜெர்ரியாகத்தான் இருந்தனர். பலமுறை காந்தியின் உதவியால் நேரு நேதாஜியை அவமதித்திருக்கிறார். பலர் முன் சாடியிருக்கிறார். நெருக்கடிமேல் நெருக்கடி கொடுத்து நேதாஜியை காங்கிரஸை விட்டே வெளியேறும் வகையில் நிர்ப்பந்தித்திருக்கிறார். ஆரம்பம் முதலே நேதாஜியை தீர்த்துக் கட்டும் சகலவித ஏற்பாடுகளையும் செய்தே வந்திருக்கிறார்.இதற்கெல்லாம் பல ஆதாரங்கள்/ சம்பவங்கள் இருந்திருக்கின்றன.

தொகுப்பு: கலைவேந்தன்

ஆதார சுட்டிகள்
கோஸ்லா கமிஷன் வாக்குமூலம்

http://www.nsfoundation.org.uk/Guide%20to%20Netaji%20Mystery.pdf
http://www.missionnetaji.org/article/mukherjee-commission-inquiry-report

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :