Monday, December 29, 2014

Keerthivasan

தேச பிரிவினையின் சோக வரலாறு - 9



Madan Lal Dhingra
17 August 1909
Pentonville Prison, London, Britain

ஜூலை மாதம் 1ஆம் தேதி, 1909 ஆண்டு லார்ட் கர்சான் மதன்லால் திங்க்ரா என்ற வாலிபனால் சுட்டு கொல்லபட்டான்.  திங்க்ராவின் தந்தை பெரும் செல்வந்தர்.  பிரிட்டிஷ் அரசுக்கு உண்மையாக நடந்து கொண்டார்.  திங்க்ரா வீர சாவர்கரால் தேச பக்தி கொண்டான்.  கர்சனை கொல்வதர்காகவே இங்கிலாந்து சென்றான்.  அதற்கு முன் அவனை பரிசோதிக்க விரும்பிய சாவர்கர் அவன் எதிர்பார்க்காதபோது ஒரு கூர்மையான கம்பியால் அவன் உள்ளங்கையில் குத்தினார்.  மறுபக்கமாக வந்தது கம்பி.  அதை பிடுங்கி வெளியே போட்டு ஏன் இப்படி செய்தீர் என்று சலனமின்றி கேட்டான்.  அவன் நெஞ்சுரம் கண்டு நெகிழ்ந்த  சாவர்கர், நீயே இதற்கு தகுதியானவன் குதிராம் போஸ், கன்ஹைலால் தத், சதீந்தர் பால்,  பண்டிட் கன்ஷி ராம் இவர்களை தூக்கிலிட உத்தரவளித்த கர்சனுக்கு நீயே எமன் என்றார்.

கொன்றுவிட்டு ஓடவில்லை.  நீதிமன்றத்தில் திங்க்ரா சொன்னான், " என் தாய்நாட்டுக்காக நான் உயிரிழக்க போகிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.  நினைவில் கொள்ளுங்கள்.  எங்கள் காலம் விரைவில் வரும்.  என்னை காத்துக்கொள்ள நான் சொல்ல எதுவுமில்லை.  எந்த ஆங்கிலேய நீதிமன்றத்திற்கும் என்னை கைது செய்யவோ, தண்டிக்கவோ அதிகாரமில்லை.  அதனால்தான் வாதாட வக்கீல் வைக்கவில்லை.

ஜெர்மானியர்களை எதிர்த்து போராட உங்களுக்கு உரிமை உள்ளதென்றால் அதே உரிமை என்னாட்டுக்காக போராட எனக்கும் மிக அதிகமாகவே உள்ளது.  கடந்த 50 ஆண்டுகளில் எங்கள் மக்கள் 8 கோடி பேரை கொன்றதற்கும், ஆண்டுதோறும் 100,000,000 பவுண்டு நிகரான செல்வங்களை எங்கள் நாட்டிலிருந்து கொள்ள அடித்து செல்லும் உங்களை கொல்லும் கடமை எனக்கு இருக்கிறது. 

எங்கள் தேசபக்தர்களை கொல்கிறீர்கள், ஒரு ஆங்கிலேயன் வாழ எங்கள் மக்கள் 3000 பேர் இரத்தம் சிந்த உழைக்க வேண்டியிருக்கிறது.  உங்கள் எதிரியான ஜெர்மானியர்களை கொல்லும் ஆங்கிலேயன் வீரன் என்றால், எங்கள் எதிரியான உங்களை கொல்லும் நான் மட்டும் எப்படி குற்றவாளியாவேன் என்றான். 

இந்த கொலையை தடுக்க வந்த இந்தியர் லால்கக்காஜியை நான் கை தவறிதான் சுட்டேன்.  அதற்காக வருந்துகிறேன் என்றான்.  ஆகஸ்ட் 17, 1909 தூக்கிலிடப்பட்டான்.  தூக்கிலிட்ட பியர்பாயின்ட் என்றவன் தேவை இல்லாமல் கயிறின் நீளத்தை அதிகமாக்கி நிறைய நேரம் துடிக்கவிட்டான்.

மீண்டும் கிலாபட் இயக்க விவகாரங்கள் தொடர்கின்றன. கலீபா முறை என்றால் உலகத்திற்கே இஸ்லாமிய தலைமை பொறுப்பு.  மிக சிறந்த பெண்கள், பொருட்கள் அனைத்தும் அவருக்கே.  அவர் சொல்வதே இஸ்லாமியர்களுக்கு சட்டம், வேதம் எல்லாம்.  அங்கிருந்தபடி அவர் சொல்லும் கட்டளைகளை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இஸ்லாமியன் கேட்கவேண்டும்.  உள்ளூர் நடைமுறை, கட்டுப்பாடு எதுவும் செல்லாது.  

காங்கிரஸ்காரர்கள் சொன்னார்கள். கலீபா முறையை திரும்ப கொண்டுவர போராட்டம் என்றால் ஹிந்துக்கள் வரமாட்டார்கள்.  என்ன செய்வது என்றார்கள்?  அப்போது அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்  இந்த ரௌலட் சட்டம் மற்றும் ஜலியன்வால பாக் படுகொலையை எதிர்த்து போராட்டம் என்று சொல்லுவோம், முஸ்லிம் கேட்டால் கிலாபட் இயக்கம் என்று சொல், ஹிந்து கேட்டால் ரௌலட் சட்டம் ஜாலியன்வாலா பாக் என்று சொல் என்றார்கள்.  ஒப்புகொண்டார் காந்தி இப்படியாக போராட்டம் பிசுபிசுத்தபடி நடந்தது.

இதற்காக சுவாமி ஷ்ராத்தானந்தா என்ற மிக பெரிய துறவி ஜும்மா மஸ்ஜித் சென்று உரையாற்றினார்.  மஸ்ஜிதின் உள் காலடி படுவதே பாவம் என்று நினைக்கும் அளவிற்கு முஸ்லிம்களை வெறுத்தவர் அவர்.  நம்ப முடிகிறதா?  அவர் அன்று இன்றைய சங்கராச்சாரியார், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் அளவிற்கு பிரபலம்.  ஏன், காந்தி சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக.

நமது நாட்டிலிருந்து முகம்மது அலி, ஷவுகத் அலி இருவரும் துருக்கி சென்று அந்த மன்னர் அடாடுர்க் கமால் பாஷாவிடம் பேசினார்கள்.  உங்கள் ஜாதி என்ன என்று கேட்டான்.  ஒருவன் ஷியா முஸ்லிம், மற்றவன் கோஜா முஸ்லிம் என்று தெரிந்துகொண்டார்.  ஏன்யா, நீ கோஜா முஸ்லிம், இவர் ஷியா, இது ஒரு சுன்னி நாடு.  எனக்கு வந்து நீ புத்திமதி சொல்கிறாயா, வெளியே போ என்றான்.

அங்கிருந்து சவுதி சென்றனர்.  அங்கும் அதே மரியாதைதான்.  சிறுபான்மையினராக இருக்கும்வரை இவர்களுக்குள் ஜாதி வேற்றுமை சமூக அளவில் பாதிக்கவில்லை, ஆனால் பெரும்பான்மையானால் பாதிக்கும் என்பதை அவர்கள் அன்றுதான் புரிந்துகொண்டார்கள்.  தோல்வியை ஒப்புகொள்ள மனமில்லாமல், முட்டாள்தனமாக கேரளம் வந்து கலீபா உருவாகி விட்டது என்று சொல்லி ஹாஜி என்று ஒருவரை தேர்ந்தெடுத்து இவர்தால் கலீபா என்று சொல்லி வாளை உருவி பிரிடிஷ்கார்களை கண்டமேனிக்கு வெட்டி கொல்ல ஆரம்பித்தார்கள்.  எண்ணி மூன்றே நாட்களில் அனைத்தையும் அடக்கினான்.  ஹாஜியை தூக்கிலிட்டான்.

இந்த தோல்வியை ஒப்புகொள்ள முடியவில்லை முஸ்லிம்களால்.  இதற்கு பிரித்ஷாருக்கு உதவியது ஹிந்து ராணுவம்.  அதனால் நமது கோபத்தை ஹிந்துக்கள் மீது காட்டுவோம் என்று கூட்டமாக கூடி தெருத்தெருவாக போவோர் வருவோரையெல்லாம் பிடித்து வெட்டி கொல்ல ஆரம்பித்தார்கள்.

ஆக்கம்: ஆனந்த் வெங்கட்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :