Friday, December 26, 2014

Keerthivasan

யார் தமிழ்க் கடவுள்? - 4

யார் தமிழ் கடவுள் ??- ஓர் அலசல் : பாகம் 4

சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்.

18 மேல்கணக்கு = எட்டுத்தொகை + பத்துப்பாட்டு

"முல்லையின் தெய்வம்" திருமால், பின்னர் நிலம் கடந்த தெய்வமாய் வணங்கப்பட்டத்தைச் சங்க இலக்கியங்கள் (கி.மு.300-கி.பி.300) காட்டுகின்றன.

மொத்த சங்கப் பாடல்களில் மிகுதியாகக் குறிக்கப்பெறும் தெய்வம் திருமாலே என்பது டாக்டர் மு.வ, நீதியரசர் மு.மு.இஸ்மாயில், தேவநேயப் பாவாணர் போன்ற அறிஞர் பலரின் கருத்தாகும்!

மாநிலம் காக்கும் மன்னவர்க்குத் "திருமாலை மட்டுமே" உவமை கூறுவதும், பூவை நிலை என்று தனியாக அதற்கென்றே ஒரு துறை ஒதுக்கும் மரபையும் சங்க நூல்களிற் காணலாம்

(குறிப்பு: இந்த ஆதாரங்களில், கடவுள் வாழ்த்துப் பகுதிகளை, நான் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை. அதெல்லாம் பின்னாளில் (பாரதம் பாடிய பெருந்தேவனார்) எழுதிச் சேர்த்தது.

அப்படி எடுத்துக் கொண்டால், எனக்கும் எண்ணிக்கை கூடும் தான். ஆனால் அப்படிச் செய்ய நான் விரும்பவில்லை. பண்டைத் தமிழ் மரபை மட்டு"மே" இந்த ஆய்வுக்குக் கணக்கில் கொள்வோம். பின்னாளில் எழுதிச் சேர்த்த பாடல்களை அல்ல.)

எட்டுத் தொகை:
எட்டுத் தொகை நூல்கள்: (கி.மு 300 - கி.பி 100)
1. நற்றிணை
2. குறுந்தொகை
3. ஐங்குறுநூறு
4. பதிற்றுப்பத்து
5. பரிபாடல்
6. கலித்தொகை
7. அகநானூறு
8. புறநானூறு

* காதலன், தன் காதலை நிரூபிக்க, எந்தத் தமிழ்த் தெய்வம் மேல் சத்தியம் செய்கின்றான்?

* உலகளந்த இறைவனை = "முதல்வன்" என்று சொல்லலாமா?

* அழகிலும், வீரத்திலும், இவன் மாயோன் போல இருக்கிறானோ?
=> கலித்தொகையில் தமிழ்க் கடவுள்?

* இரண்டு தமிழ்க் கடவுள்-களும், முருகனும் திருமாலும், ஒரு சேர வருகிறார்கள்! எங்கே? எங்கே?
=> அகநானூறில் தமிழ்க் கடவுள்

* வல்லார் - அல்லார் என்ற பேதம் இல்லாமல், அனைவருக்கும் பொதுவான தெய்வம் யார்?

* போருக்குச் செல்லும் வீரர்கள், யாரைப் போல் கருப்பு? வெள்ளாடை உடுத்திப் போகிறார்கள்?

* இரண்டு மன்னர்களும் ஒன்றாக அமர்ந்து இருப்பது யாரைப் போல் இருக்கு?
=> புறநானூறில் தமிழ்க் கடவுள்.

* துழாய் மாலைச் செல்வன் யார்? அவன் கோயிலுக்கு வரும் அடியவர்கள் எப்படியெல்லாம் கூக்குரல் இட்டு மகிழ்ச்சியுடன் வருகிறார்கள்?
=> பதிற்றுப் பத்தில் தமிழ்க் கடவுள்.

* என் காதலனைக் கண்டால் மட்டும் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? அவன் மாயோன் போல் கருப்பாக இருக்கிறான் என்பதாலா?
=> நற்றிணையில் தமிழ்க் கடவுள்.

* "முன்னை மரபின் முதல்வன்" என்று சங்க இலக்கியம் யாரைச் சொல்கிறது?

* வீடு பேறு - தரும் தமிழ்த் தெய்வம் யார்?

* மதுரை - திருமாலிருஞ் சோலை - மதுரை மக்கள் யாரைத் தான் அப்படிக் கொண்டாடுகிறார்களோ?
=> பரிபாடலில் தமிழ்க் கடவுள்.

பத்துப் பாட்டுக்கு வருவோம்....
பத்துப்பாட்டு நூல்கள்: (கி.பி 100 - கி.பி 300)
1. குறிஞ்சிப் பாட்டு
2. முல்லைப்பாட்டு
3. மலைபடுகடாம்
4. மதுரைக் காஞ்சி
5. நெடுநல்வாடை
6. பட்டினப் பாலை
7. திருமுருகாற்றுப்படை
8. பொருநர் ஆற்றுப்படை
9. பெரும்பாணாற்றுப்படை
10. சிறுபாணாற்றுப்படை
பத்துப்பாட்டு காட்டும் திருமாலை ஒவ்வொன்றாகப் பார்க்கலாமா?

* எங்கும் புகழ் பரவி இருப்பதில் நீ திருமால் போல் இருக்கீயே. நினைத்ததை முடிப்பதில் முருகன் போல் இருக்கீயே..

* கூந்தலுக்கு வாசம் இருக்கா-ன்னு கேட்ட பாண்டியன் யார்? சினிமாவில் ஏபி நாகராஜன் அடிச்சி விடும் "செண்பகப் பாண்டியன்" அல்ல:)
=> திரு முருகு ஆற்றுப்படையில் தமிழ்க் கடவுள்!

* பண்டைத் தமிழ் மக்களின் விழா என்ன? = திரு ஓண நன்னாளா? கந்த "சஷ்டியா"?
=> மதுரைக் காஞ்சியில் தமிழ்க் கடவுள்.

* மாயோன் தான் திருமாலா? நல்லாத் தெரியுமா?
மாயோனே = ஆயர்கள் கொழுந்தே, திருமறு மார்பா, துழாய் (துளசி) அணிந்தவா, நப்பின்னையை ஏறு தழுவி மணந்தவா-ன்னு எல்லாம் பாடினால், மாயோன் = திருமால் தானே?
=> பெரும்பாணாற்றுப்படையில் தமிழ்க் கடவுள்.

* திருமால் கோயிலுக்குப் போய், நெல்லும் முல்லையும் தூவி, அவனுக்காகத் தலைவி வேண்டுகிறாள்! சங்கு-சக்கரம் என்றே முல்லைப் பாட்டு துவங்குகிறது.
=> முல்லைப் பாட்டில் தமிழ்க் கடவுள்.

ஆக்கம்: Ramachandran Krishnamurthy

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :