Saturday, July 25, 2015

Keerthivasan

நாதுராம் கோட்சே வாக்குமூலம் – குற்றப்பத்திரிகைகான மறுமொழி – 1

கோட்சே வாக்குமூலம் – 1

குற்றப்பத்திரிகைகான மறுமொழி.

முதலாவதாக குற்றம் சாட்டப்பட்டுபெயர் சொல்லி குறிப்பிட்ட நாதுராம் கோட்சே ஆகிய நான் பணிவோடு பின்வருமாறு வாக்குமூலம் அளிக்கிறேன்.


1. பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக என் பணிவு மிக்க உரையை முன்வைப்பதற்க்கு முன்பாக நான் மரியாதையுடன் பணிந்து வைப்பது என்னவென்றால், குற்றச்சாட்டுகள் வனையப்பட்டுள்ள முறை சட்டத்தின் படி இல்லை என்பதாகும். குற்றச்சாட்டுகள் தவறாகச் சேர்க்கப்பட்டுள்ள காரணத்தால், தனித்தனியாக இரண்டு விசாரணைவள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.1948 ஜனவரி 20ம் நாள் நிகழ்ச்சி தொடர்பாக ஒன்றும்,1948 ஜனவரி 30ஆம் நாள் தொடர்பாக மற்றொன்றும் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இரண்டும் ஒன்றாக கலக்கப்பட்டிருப்பதால் வழக்கு விசாரணை முழுவதுமே குறைபாடுடையதாகிவிட்டது.


2. மேற்குறிப்பிட்ட என் பணிவான உரைக்கு குந்தகமின்றி,வனையப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் எனது மறுமொழியைப் பின்வருமாறு பணிவுடன் முன்வைக்கிறேன்.


3. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முன்கொணரப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் பல்வேறு எண்ணிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு குற்றம் சாட்டப்பட்டவரும் தனித்தனியாகவும்,மற்றவர்களோடு இணைத்தும்,இந்தியகுற்றவியல் சட்டத்தின் கீழாகவும்,மற்ற சட்டங்களின் கீழாகவும் தண்டனைகுரிய பல்வேறு குற்றங்கள் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.


4. அரசுத் தரப்பில் ,1948 ஜனவரி 20லும் அதன் பின்னர் 1948 ஜனவரி 30 லும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை ஒன்றாகவும் அல்லது காந்திஜீ கொலை நோக்கத்தில் முடிவுற்ற ஒரே வகையான தொடர் நிகழ்ச்சியாகவும் எடுத்துக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஆகவே நான் தொடக்கத்திலேயே தெளிவுபடுத்த விரும்புவது என்னவென்றால் 1948 ஜனவரி 20 வரை நடந்த நிகழ்ச்சிகள் தனிப்பட்டவை என்பதும்,அதற்குப் பின்னரும், 1948 ஜனவரி 30லும் நடந்த எதற்கும் அவற்றோடி தொடர்பில்லை என்பதும் ஆகும்.


5. முதலாவதும் மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளில் முற்பட்டதும் எதுவென்றால் காந்திஜீயைக் கொலை செய்வதற்க்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்களுக்குள் சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டாகும். ஆகவே நான் அதனை முதலில் வாதிடுகிறேன்.குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ள எத்தகைய குற்றங்களையும் இழைப்பது குறித்து குற்றம்சாட்டப்பட்டவர்களிடையே எவ்வகையான சதித்திட்டமும் எம்முறையிலும் தீட்டப்படவில்லை என்பதைக் கூறிக்கொள்கிறேன். சாட்டப்பட்டுள்ள குற்றங்களை இழைப்பது தொடர்பாக மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உடந்தையாக நான் செயல்படவில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன்.


6. இது தொடர்பாக அரசுத்தரப்பில் முன்வைக்கப்பட்ட சான்றாவணமானது எந்தவிதமான சதித்திட்டமும் இருந்ததாக நிறுவவோ உறுதிப்படுத்தவோ இல்லை. சுமத்தப்பட்ட சதித்திட்டம் தொடர்பாக சாட்சியம் அளிக்கும் ஒரே சாட்சி திகம்பர் ஆர்.பாட்கே (அரசுதரப்பு சாட்சி 57 )ஆவார். அவர் முற்றிலும் நம்பத்தகாத சாட்சியாவார். என்னுடைய வழக்கறிஞர் இந்த வழக்கின் சான்றாவணம் பற்றி விளக்கி இந்த அரசுத்தரப்பு சாட்சி 57 இன் சான்றாவணம் பற்றி மரியாதைக்குரிய தங்களுக்கு எடுத்துக்காட்டுவார்.

 
7. உரிமம் இல்லாமல் 1948 ஜனவரி 20ல் ஆயுதங்களும் ,வெடிமருந்துகளும் சேகரித்தது,கடத்தியது, அதற்கு நான் உடந்தையாயிருந்தது தொடர்பான குற்றச்சாட்டை மறுக்கிறேன். 1948 ஜனவரி 20க்கு முன்பாகவோ, அந்தச்சமயத்திலோ, அல்லது வேறு எந்தத் தேதியிலோ நான் வெடிப்பஞ்சுப் பலகைகள், கைக்குண்டுகள், வெடிவைப்புக் கருவிகள், திரிகள், துப்பாக்கிகள் அல்லது கைத்துப்பாக்கிகள், துப்பாக்கிக் குண்டுகள் முதலிய எவற்றையும் நான் சுமக்கவோ, கடத்தவோ, அல்லது என் கட்டுப்பாட்டில் அத்தகைய ஆயுதங்கள், வெடிமருந்துப் பொருட்களை வைத்திருக்கவோ அல்லது குற்றம் சாட்டப்பட்ட எவருக்காவது உடந்தையாயும் உதவியாயும் இருக்கவோ இல்லை என்பதைக் கூறிக் கொள்கிறேன். ஆகவே இந்திய ஆயுதச் சட்டம், இந்திய வெடிமருந்துப் பொருட்கள் சட்டம் ஆகியவற்றின் விதிகள் எவற்றையும் நான் மீறியதாகக் கூறுவதையும் அச்சட்டங்களின்கீழ் தண்டனைக்குரிய குற்றங்கள் எவற்றையும் நான் இழைத்திருக்கிறேன் என்று கூறுவதையும் நான் மறுக்கிறேன்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :