Saturday, August 8, 2015

Keerthivasan

நாதுராம் கோட்சே வாக்குமூலம் – குற்றப்பத்திரிகைகான மறுமொழி – 11

நாதுராம் கோட்சே வாக்குமூலம் – குற்றப்பத்திரிகைகான மறுமொழி – 11



56. 1920-ஆம் ஆண்டு முதலாக, அதாவது லோகமான்ய திலகர் இறந்தது முதலாக, காந்திஜியின் செல்வாக்கு காங்கிரசில் முதலில் அதிகரித்துச் சென்று, பின்னர் உச்ச நிலைக்குச் சென்றுவிட்டது. சமுதாய விழிப்புணர்வுக்கு அவருடைய செயற்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு தீவிரமாக இருந்தன.சத்தியம், அஹிம்சை ஆகிய முழக்கங்கள் தேசத்துக்கு முன்பாக ஆரவாரப்பகட்டுடன் உலாவந்த போது அவை உறுதிப்படுத்தபட்டன. இந்த முழக்கங்களை எந்த உணர்வுடைய அல்லது அறிவார்ந்த மனிதனும் எதிர்க்க முடியாது. அவற்றில் புதியதாகவோ,அசலானதாகவோ எதுவும் இல்லை. அவை ஒவ்வொரு சட்டப்படியான பொது இயக்கத்திலும் பொதிந்துள்ளவைதாம். 

மனித சமுதாயம் முழுதுமே இந்த மேன்மையான கோட்பாடுகளை அன்றாட இயல்பு வாழ்க்கையில் கண்டிப்பாகப் பின்பற்ற முடியும் என்பது வெறும் கனவுதான். உண்மையில், தங்கள் உற்றார், உறவினர்,நாடு இவற்றின் மீது வைத்திருக்கும் மரியாதை,கடமை, அன்பு ஆகியவை ஒவ்வொருவரையும் அஹிம்சையைப் புறக்கணிக்குமாறு கட்டாயப்படுத்துகின்றன. ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக ஆயுதங்களுடன் எதிர்ப்பது நியாயமற்றது என்பதை என்னால் எப்போதும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. எதிர்ப்பதும்,  முடிந்தால் வலிமை கொண்டு எதிரியை வெல்வதும் மதத்தின் கடமையும், அறத்தின் கடமையும் ஆகும் என்று நான் கருதுவேன். ஸ்ரீ ராமச்சந்திரன் ஆவேசமான சண்டையில் இராவணனைக் கொன்று சீதையை விடுவித்தார். ஸ்ரீ கிருஷ்ணன் கம்சனின் போக்கிரித்தனத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அவனைக் கொன்றார். மகாபாரதத்தில் அர்ஜுனன் தன் நண்பர்கள், உறவினர்களுடன் சண்டையிட்டு கொல்ல வேண்டியிருந்தது. அவன் மதிக்கும் பீஷ்மரையும், அவர் ஆக்கிரமிப்பாளர் பக்கத்தில் இருந்ததால் சண்டையிட்டுக் கொல்ல நேர்ந்தது. இராமர், கிருஷ்ணர், அர்ஜுனன் ஆகியோரை வன்முறைக் குற்றம் புரிந்தவர்கள் என்று பெயரிட்டு அழைப்பது, மனிதச் செயல்களின் அகத்தூண்டுதல்கள் பற்றிய அறியாமையால் செய்யும் துரோகமாகும். சத்திரபதி சிவாஜி மகாராஜா நடத்திய வீரப்போர் தான் இந்தியாவில் முஸ்லீம் கொடுங்கோன்மையை முதலில் தடுத்து நிறுத்தி, இறுதியாக ஒழித்துக்கட்டியதாகும். சிவாஜி அப்சல்கானைக் கொன்றது முற்றிலும் சரியான தந்திரமாகும். இல்லாவிட்டால் பின்னவர் நிச்சயம் அவரைக் கொன்றிருப்பார். சிவாஜி, ராணா பிரதாப், குருகோவிந்த் ஆகியோரை தவறான வழிகாட்டிய தேசபக்தர்கள் என்று காந்திஜி கண்டனம் செய்திருப்பது அவருடைய வெறும் தற்செருக்கையே வெளிப்படுத்துகிறது.

57. அவருடைய காலத்து வீரப்பெருந்தகைகள் நம் நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்தும், அன்னிய மதவெறியாளர்களின் அட்டூழியம், கொடுஞ்செயல்கள் ஆகியவற்றினின்று மக்களைப் பாதுகாத்தும், தாய்நாட்டை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீண்டும் வென்றனர். மற்றொரு புறத்தில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மகாத்மாவின் ஐயத்துக்கிடமற்ற தலைமையின் போது அதிகமான கட்டாய, ஏமாற்று மதமாற்றங்களும், பெண்கள் மீது அதிகமான கொடுஞ்செயல்களும், இறுதியாக நாட்டின் பரப்பில் மூன்றில் ஒரு பங்கு இழப்பும் நிகழ்ந்துள்ளன.  ஆகவே சிவாஜி, ராணா பிரதாப், குருகோவிந்த் ஆகியோருக்கு முன்பாக மகாத்மா மிகவும் குட்டையாய்த் தோன்றுவதைக் குருடர்கள் கூட தெளிவாக உணரும் போது அவருடைய ஆதரவாளர்களுக்கு அது தெரியாதது விந்தையாயுள்ளது. புகழ்பெற்ற இந்த வீரப்பெருந்தகைகளை அவர் கண்டனம் செய்திருப்பதைப் பற்றிக் குறைத்துச் சொல்ல வேண்டுமென்றால், அது பெரிதும் அனுமானம் என்றுதான் சொல்லவேண்டும்.

58. பிரிட்டிஷ் பேரரசின் ஆதரவோடு, முஸ்லீம் வன்முறை முனையில் கோழைத்தனமாக இந்தியப் பிரிவினைக்குச் சரணடைந்து ஆட்சிக்கு வந்துள்ள தன்னலக் குழு இப்போது காந்திஜியின் மரணத்தை வைத்துக்கொண்டு நூறு தீவிர வழிகளில் தன்னுடைய தன்னல நோக்கங்களுக்காக அதனைப் பயன்படுத்திக் கொள்ள முயன்று வருகிறது. ஆனால், அவர்களுக்கு உரிய இடத்தை, புகழின் மாடக்குழியில், வரலாறு அவர்களுக்கு அழித்துவிடும். ராணா ப்ரதாப்பும், சிவாஜியும், குருவும் நாட்டு மக்களுக்குப் பெற்றுத்தந்த சுதந்திரத்தால் அவர்களுடைய இதயத்தின் கோவிலில் என்றென்றும் குடிகொண்டிருப்பார்கள். காந்திஜியோ, சத்தியம், அஹிம்சை என்ற பெயரில் சொல்லமுடியாத பேரிடரை நாட்டுக்குக் கொண்டுவந்த புதிராகத் தோன்றும் வன்முறை சார்ந்த அமைதியாளர்.

59. கீழே குறிப்பிட்டுள்ளவாறு காந்திஜியின் அரசியல் நடவடிக்கைகளை வசதியாக மூன்று தலைப்புகளில் பகுக்கலாம். அவர் இங்கிலாந்திலிருந்து சற்றேறத்தாழ 1914 -இன் இறுதியில் இந்தியாவுக்குத் திரும்பி வந்து உடனடியாகவே நாட்டின் பொது வாழ்க்கையில் குதித்துவிட்டார். அவர் வரவுக்குப் பின்னர் துரதிர்ஷ்டவசமாக பெரோஸ்ஷா மேத்தாவும், காந்திஜியால் தம்முடைய குரு என்று அழைக்கப்பட்ட ஜி. கே. கோகலேயும் சிறிய கால இடைவெளியில் இறந்துவிட்டனர். காந்திஜி அகமதாபாத்தில் சபர்மதி நதிக்கரை யில் ஓர் ஆசிரமத்தைத் தோற்றுவித்து தம் பணியைத் தொடங்கினார். சத்தியமும், அஹிம்சையும் அவரது முழக்கங்கள் ஆயின. அவர் போதித்த கோட்பாடுகளுக்கெதிராக அவர் அடிக்கடி ஆ திருப்திப் படுத்துவதற்க்காக இவ்வாறு செய்ததில் அவருக்கு எந்த விதமான மன உறுத்தலும் இல்லை. சத்தியமும்,  அஹிம்சையும் மிகச்சிறந்த கருத்தியல்கள் ; வியக்கத்தக்க செயல்பாட்டு வழிகாட்டிகள்.எனினும் அவற்றை அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டும்.  காற்றில் பறக்கவிடக் கூடாது. வீம்புக்குறிய அவருடைய கருத்தியல்களை அவரே வெளிப்படையாகத் தகர்த்தெறிந்ததை நான் பின்னர் காட்டுகின்றேன்.


நன்றி: சாலிய மஹரிஷி சாலியர்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :