Friday, January 2, 2015

Keerthivasan

ஒரு தத்வார்த்த பயணம் – 4 – ஹிந்து மதம் முரண்பாடுகள் உள்ள மதமா? (2)



கடந்த பதிவில்கண்ட ஐந்து விஷயங்களைப் பற்றிய என் கருத்துக்களை இந்தப் பதிவில் தருகிறேன்!!


முதலாவது பல தெய்வ வழிபாடுகள்! இதிலொன்றும் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை!! ஹிந்து மதம் அனாதியானது! இந்த மதம் 5000 ஆண்டுகளாக இருப்பதாக கலியுகக் கணக்கை வைத்து சொல்வது தவறு! இது யுகங்கள்தோறும் திரும்பத் திரும்பத் தோன்றும் தர்மமாகும்!! இதனுடன் ஒப்பு நோக்கும் தகுதி வேறேந்த மதத்துக்கும் இல்லை! பழமை அடிப்படையில் பார்த்தால் ஒரளவு யூத மதத்தையும் , ஜோராஷ்ட்ரிய மதத்தையும் சொல்லலாம்! இந்த மதங்களில் எல்லாம் முதலில் அனைத்து இயற்கை சக்திகளான நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய இயற்கையின் சக்திகளையே தெய்வமாக வணங்கினர்!!

இதே அடிப்படையில்தான் பின்னர் அந்த இயற்கைச் சக்திகளுக்கே பெயரிடப் பட்டு உருவ வழிபாடாக சொல்லப் பட்டது! இயற்கையில் மாறுபட்ட குணங்களுள்ள பல சக்திகள் இருக்கும் போது அதே போல பல்வேறு குணங்களுடன் பல தெய்வங்கள் இருப்பதில் முரண்பாடு ஒன்றுமில்லை!! இத்தனை தெய்வங்களையும் சேர்த்து நிற்கும் பிரபஞ்ச சக்தியையே 'பரப்பிரம்மம்' என்கிற பெயரில் வணங்கினர்! அவ்வளவே!!

இரண்டாவது வர்ணாசிரம/ சாதிப் பாகுபாடுகள்!! வர்ணாசிரமம் என்பது உண்மையில் இந்து மதத்தில் இருந்த தர்மம்தான்! ஆனால் இன்று சொல்லப் பட்டது போல திரித்து சொல்லப் பட்டதல்ல!! அதன் உண்மையான அடிப்படை என் தொடரும் பதிவுகளில் வரும்! இன்று 'வர்ணாசிரம தர்மம்' மறைந்து போன விஷயம் ! எந்த மனிதரையும் இன்று வர்ண அடிப்படியில் சொல்ல முடியாது போகும் என்பதும் முந்தைய சாஸ்திரங்களில் சொல்லப்பட்டதே!! மற்றபடி ஜாதி என்பது தர்மம் சொன்ன விஷயமில்லை!! அது ஒரு பெரிய விஷயமும் இல்லை! அது மனிதர்கள் தங்களின் சில சவுகரியங்களுக்காக உருவாகியது இன்று சீர்கேடாகப் போனது அவ்வளவே ! இது பற்றியும் தொடரும் பதிவுகளில் வரும்!!

மூன்றாவது இந்து மதத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்குள் உண்டாக்கும் சண்டைகள்/ பூசல்கள்! இது உண்மையில் ஹிந்து மதத்துக்கு சீர்கேடான விஷயம்தான்! இவற்றில் பலப் பல பூசல்கள் இருந்தாலும் கூட முக்கியமாகத் தெரிவது சைவ/வைணவ கோஷ்டிப் பூசல்களே!! ஒரு தெளிவான ஒற்றுமைத் தன்மையுடன் கூடிய பார்வைகள் இருக்கும் பட்சத்திலும், தன் தரப்பை நிலைநாட்டியே தீர வேண்டுமென்ற வெறி இல்லாமல் அணுகும் பட்சத்திலும் இது ஒரு சாதாரண முறையில் தீரக் கூடிய பிரச்சினையே! இது குறித்த விஷயங்கள் என் தொடரும் பதிவுகளில் வரும்!!

நான்காவது தீண்டாமை! ஹிந்து மதத்தில் மிகவும் சீர்கேடான விஷயம் இதுதான்! இதை எந்த மத தர்ம சாஸ்திர நூலும் சொல்லவில்லை! ஆனால் இது மனிதர்களால் உருவாக்கப் பட்டது! இது எவ்வாறு வந்திருக்கும் என்பது பற்றியும் இதனை அணுக வேண்டியது எப்படி என்பதும் என் தொடரும் பதிவுகளில் வரும்! இன்று பெரியளவில் தீண்டாமை என்பது இல்லாத போதும் இன்னும் தங்கள் ஜாதிப் பெயரை சொல்ல வெட்கப்படும் அந்த மக்களை இதர மக்கள் அரவணைத்து நமது மதப் பெருமையை எடுத்துரைத்து அவர்கள் மதம் மாறிப் போவதைத் தடுக்க வேண்டும் என்பதே என் கோரிக்கை!!

ஐந்தாவது விஷயம் பொதுத்தன்மை இல்லாதது!! இந்தக் காரணத்தால் தான் ஹிந்து மதம் மட்டும் பெரிய மதமாக இருந்தாலும் கூட அமைப்பு ரீதியில் எதுவும் இல்லாமல் போன காரணம்! ஆனால் இது ஏன் என்பதை குறித்து என் தொடரும் பதிவுகளில் வரும்! ஒன்று மட்டும் சொல்கிறேன்! இதர மதங்கள் எல்லாம் ஒரு கடவுள் அவருக்கு ஒரு வரலாறு என்கிற அளவில்தான் உள்ளன! ஆனால் நம் மதம் மட்டுமே இயற்கை சக்திகளையும் கூட தெய்வமாகக் கருதி வழிபடும் 'பன்முகத்தன்மை' கொண்ட உலகின் ஒரே மதம் (MULTI FACETED RELIGION) என்பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்!! இதுதான் நமது மதத்தின் சுதந்திரத்தன்மையைக் குறிப்பதாகும்!! இங்கு யாருக்கும் எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது!! ஆனால் அவரவர் மனப்போக்கில் எப்படி வேண்டுமானாலும் கடவுளை வழிபடலாம் என்னும் சுதந்திரம் இங்கு மட்டுமே உண்டு!

தொடரும்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :